ராணுவ தளவாட கொள்முதலில் இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய ஜெர்மனி !!

கடந்த புதன்கிழமை அன்று இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் ஃபிலிப் அக்கர்மேன் பேசும்போது விரைவான ராணுவ கொள்முதலுக்கு வழிவகுக்கும் விதமாக இந்தியாவுக்கு ராணுவ கொள்முதலில் ஜெர்மனி சிறப்பு அந்தஸ்தை வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளார் இதன் மூலம் வருங்காலத்தில் இந்தியா ஜெர்மனி இடையேயான ஆயுத வர்த்தகம் மிக வேகமாக இறுதி செய்யப்பட்டு கொள்முதல் நடைபெறும் வாய்ப்புகள் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் பேசும் போது ஜெர்மனியின் பாதுகாப்பு தொழில் துறை பெருமளவில் தனியார் நிறுவனங்களைக் கொண்டது, ஆனாலும் நாங்கள் ஆயுத வர்த்தகத்தை முடிந்த அளவுக்கு சாத்தியமாக்க நினைக்கிறோம். ஆகவே அந்த வகையில் இனி இந்திய ஆயுதப்படைகள் ஏதேனும் ஜெர்மன் நிறுவனத்திடம் இருந்து வாங்க விரும்பினால் ஒரே ஒரு சிறப்பு அனுமதி கோப்பு மட்டும் ஜெர்மன் அமைச்சகத்தின் பார்வையில் வைக்கப்படும் இதன் காரணமாக ஆயுத வர்த்தகம் அல்லது ஆயுத ஏற்றுமதி மிக விரைவாக நடைபெறும் சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் சான்சிலர் ஓலா ஷூல்ஸ் இந்தியா வரை உள்ளதை முன்னிட்டு ஊடகவியலாளர்களை சந்தித்து ஜெர்மன் தூதர் பேசும்போது இந்த தகவல்களை தெரிவித்தார் அப்போது அவர் இந்திய கடற்படைக்கான P-75I நீர்மூழ்கி ஒப்பந்தத்தை பெறுவதற்கு ஜெர்மனியின் TKMS நிறுவனம் காத்திருப்பதாகவும் இந்திய அரசின் இறுதி முடிவை எதிர்நோக்கி உள்ளதாகவும் ஜெர்மன் சான்சிலர் ஓலாப் ஷூல்ஸ் இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசும் போது இந்த விவகாரம் ஒரு முக்கிய இடத்தை இருவரின் ஆலோசனையில் பெற உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் அவர் பேசும்போது கடந்த காலங்களில் ஜெர்மனியுடன் இந்தியா செய்து கொண்ட 95% பாதுகாப்பு ஒப்பந்தங்கள் சற்றே காலதாமதம் ஆனதாகவும் ஆனால் தற்போது இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால் இனி அந்த நடைமுறை சிக்கல்கள் எதுவும் இருக்காது எனவும் மிக வேகமாக அனைத்து ஒப்பந்தங்களும் இறுதி செய்யப்படும் எனவும் கடந்த காலங்களில் இந்திய அதிகாரிகள் மிக நீண்ட பட்டியலுடன் ஜெர்மனி வந்து ஜெர்மன் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்ததாகவும் தற்போது அந்த கோரிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நீர் மூழ்கி ஒப்பந்தத்தை பற்றி பேசும்போது ஜெர்மன் அரசு இந்த ஒப்பந்தத்திற்கு முழு ஆதரவளிப்பதாகவும் இதற்கு ஜெர்மன் தரப்பிலிருந்து எவ்வித தடையின் தற்போது இல்லை எனவும் இந்திய அரசின் இறுதி முடிவிற்காக ஜெர்மன் நிறுவனமும் ஜெர்மன் அரசும் காத்திருப்பதாகவும் கூறினார், இந்த நீர்மூழ்கி திட்டத்தில் மற்றும் ஒரு போட்டியாளராக ஸ்பெயின் நாட்டின் NAVANTIA நிறுவனம் உள்ளதும் இந்த வார இறுதியில் ஸ்பெயின் பிரதமர் மெட்ரோ சான்சேஸ் இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக வர உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்