அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்கள் ஜெட் என்ஜின்கள் மற்றும் கடலடி ட்ரோன்கள் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயார் – பிரான்ஸ்!!
பிரான்ஸ் அரசு இந்தியாவிற்கு அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்கள், ஒரு மாதங்களுக்கான 110 கிலோ நியூட்டன் திறன் கொண்ட ஜெட் என்ஜின்கள் மற்றும் கடலடி ட்ரோன்கள் தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது எடுத்துஇந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான வியூக முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு உறவுகள் அடுத்த கட்டத்தை மட்டும் சூழலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
அதாவது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்திய கடற்படையின் திறன்களை வலுப்படுத்தும் விதமாக அடுத்த சில ஆண்டுகளில் முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் அதிவேக தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை கட்டமைக்கும் திட்டத்தை தொடங்குவதற்கு விரும்பும் நிலையில் பிரான்ஸ் இந்த திட்டத்திற்கு உதவ முன்வந்துள்ளது மேலும் மிக நீண்ட காலமாக உள்நாட்டிலேயே இந்திய போர் விமானங்களுக்கான ஒரு அதிக திறன் வாய்ந்த அதி நவீன ஜெட் என்ஜினை உருவாக்குவதில் இந்தியாவிற்கு சிக்கல் நிலவி வருகிறது இதை மேற்கொள்ள உதவும் விதமாக 110 கிலோ நியூட்டன் திறன் கொண்ட என்ஜின்களின் 100% தொழில்நுட்பத்தையும் இந்தியாவிற்கு அளிக்க பிரான்ஸ் முன்வந்துள்ளது.
மேலும் இந்தியா தரை வான் மற்றும் கடல் ( கடலின் மேற்பரப்பு மற்றும் கடலுக்கு அடியில்) தனது ISR – Intelligence Surveillance & Reconnaissance உளவு மற்றும் கண்காணிப்பு திறன்களை அதிகரிக்க விரும்புகிறது இதைத் தொடர்ந்து பிரான்ஸ் அரசு இந்தியாவிற்கு கடலடி ட்ரோன்கள் தொழில்நுட்பத்திலும் உதவுவதற்கு முன்வந்துள்ளது மேலும் கூடுதலாக இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்களின் தற்காப்பு திறன்களை அதிகரிக்க உதவ முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் நிறைந்த விண்வெளி பாதுகாப்பு போன்ற பகுதிகளில் கூட்டாக செயலாற்றி வருகின்றன குறிப்பாக கடந்த குடியரசு தினத்தின் போது பிரஞ்சு அதிபர் இமானுவேல் மெக்ரான் சிறப்பு விருந்தினராக வந்த போது அவருடன் இந்தியா வந்திருந்த பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டியன் லூக்காரனோ மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் விண்வெளி ராணுவ செயற்கைகோள் திட்டங்களில் கூட்டாக செயலாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
பிரான்ஸ் நாட்டின் சப்ரான் நிறுவனம் கடந்த 1970களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவுக்கு ராக்கெட் என்ஜின்களை தயாரிப்பதற்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்தது அந்த நிறுவனம் தற்போது இந்தியாவின் கனவு திட்டங்களில் உண்டான ஆம்கா ஐந்தாம் தலைமுறை போர் விமானத்திற்கான 110 கிலோ நியூட்டன் திறன் எஞ்சினை வடிவமைத்து மேம்படுத்தி தயாரித்து சோதனை செய்து தரச் சான்றிதழ் பெறுவதற்கும் உதவ முன்வந்துள்ளது மேலும் இந்திய பொறியாளர்களுக்கு அதிநவீன உலோகவியல் பயிற்சிகளை அளிப்பதற்கும் முன் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இப்படி பிரான்ஸ் இந்தியாவிற்கு உதவி உருவாக்கப்படும் என்ஜின் முழுவதும் இந்தியாவின் தனிப்பட்ட சொத்தாக இருக்கும் எனவும் அதை இந்தியா எவ்வித தடையும் இன்றி பிரான்ஸ் நாட்டின் எவ்வித அனுமதியும் பெறாமல் தனது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளவும் ஏற்றுமதி செய்யவும் முடியும் என பிரான்ஸ் சார்பில் சப்ரான் நிறுவனம் தெரிவித்துள்ளது கூடுதல் சிறப்பாகும் காரணம் பொதுவாக இப்படி ஏதேனும் ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு ஏதேனும் ஒரு தளவாடத்தையே தொழில்நுட்பத்தையோ உருவாக்க உதவினால் அதை ஒரு நாடு மற்றொரு நாட்டின் அனுமதி இல்லாமல் மேம்படுத்தவோ பயன்படுத்தவோ அல்லது ஏற்றுமதி செய்யவோ முடியாது ஆனால் இந்தக் கட்டுப்பாடுகள் இந்த எஞ்சின் திட்டத்தில் பிரான்ஸ் தரப்பில் இருந்து விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தோ பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த நாடுகளான பிரான்ஸ் ( பிரெஞ்சு தீவுகள் இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ளன) மற்றும் இந்தியா இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தவும் இந்தப் பிராந்தியத்தில் இரு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பை அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளன இது தவிர இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள் வழியாக மத்திய தரைக் கடல் ஊடாக பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ஊடாக ஒட்டு மொத்த ஐரோப்பாவையும் இணைக்கும் இந்தியா மத்திய கிழக்கு ஐரோப்பிய பொருளாதார வழித்தட திட்டத்திற்கும் பிரான்ஸ் மிகுந்த ஆர்வத்துடன் மிகப்பெரிய அளவில் ஒத்துழைப்பு அளிக்க விரும்புகிறது அதன் ஒரு பகுதியாக இந்தத் திட்டத்திற்கு பிரான்ஸின் பிரதிநிதியாக ஒரு சிறப்பு தூதரையும் அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.
பிரான்ஸ் நீண்ட நாட்களாகவே இந்தியாவின் உற்ற மற்றும் நம்பத் தகுந்த நட்பு நாடாக உள்ளது அதுபோல நம்பகத்தன்மை வாய்ந்த ஆயுத சப்ளையராகவும் இந்தியாவிற்கு உள்ளது, பல்வேறு இக்கட்டான சூழல்களில் பல்வேறு நாடுகள் உதவ முன் வராத சூழலிலும் பிரான்ஸ் இந்தியாவிற்கு மிக முக்கிய வாய்ந்த ஆயுதங்களை தொழில் நுட்பங்களை அளித்து உதவியுள்ளது ஆகவே இந்தியாவிற்கு பிரான்ஸ் நாட்டுடனான இருதரப்பு உறவுகள் இந்தியாவின் சுதந்திரமான புவிசார் அரசியல் கொள்கைகளுக்கு வேறாக உள்ளது என்றால் மிகை ஆகாது