ஈரானுடைய கராஜ் அணு உலையில் தீ விபத்து !! இஸ்ரேல் தாக்குதலா ??
ஈரானுடைய கராஜ் அணு உலை மற்றும் அனுசார் ஆராய்ச்சி மையத்தில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ காரணமாக எழுந்துள்ள புகை மண்டலம் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் மூடி உள்ளதாக இஸ்ரேலிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதே நேரத்தில் ஈரான் உடைய செய்து நிறுவனங்கள் இது பற்றி எவ்வித செய்தியும் வெளியிடவில்லை.
இந்தக் கராஜ் அணு உலை மற்றும் அணு ஆராய்ச்சி மையம் முன்பில் இருந்தே இஸ்ரேலின் தாக்குதலுக்கான இலக்காக இருந்து வருகிறது, அந்த வகையில் ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு இத்தகைய ஒரு இஸ்ரேலிய சைபர் தாக்குதலைத் தொடர்ந்து இந்த மையத்தில் இருந்து சென்ட்ரிபியூச் கருவிகளை ஈரான் அரசு வேறு ஒரு இடத்திற்கு மாற்றம் செய்தது மேலும் இந்த தாக்குதலுக்கு காரணம் இஸ்ரேல் என குற்றம் சாட்டவும் செய்தது.
சமீபத்தில் ஈரான் இஸ்ரேல் மீது மிகப்பெரிய அளவில் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு இஸ்ரேலும் கடுமையான பதிலடி கொடுப்போம் என அறிவித்திருந்த நிலையில் கராஜ் அணு உலை மற்றும் அணு ஆராய்ச்சி மையத்தில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்து இஸ்ரேலின் சைபர் தாக்குதல் காரணமாக ஏற்பட்டதா என்ற கேள்வியும் பரவலாக சர்வதேச அரங்கில் எழுந்துள்ளது ஆனால் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் அரசியலும் இது பற்றி எவ்வித கருத்துக்களையும் தற்போது தெரிவிக்கவில்லை.
தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிக்கையும் ஈரான் அரசிடமிருந்து வெளியிடப்படாத நிலையில் இந்த தீபத்திற்கான காரணம் என்ன என்பது பற்றி எவ்வித தகவலும் பொது வெளியில் தற்போது இல்லை ஆகவே ஒரு சில நாட்கள் கழித்து ஈரான் அரசு இது பற்றி வெளியிடும் அறிக்கையை பொறுத்து தான் இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது