GE Aerospace நிறுவனம் F-404 என்ஜின்களை டெலிவரி செய்வதில் ஏற்படும் காரணமாக தேஜஸ் விமானங்களை டெலிவரி செய்வதில் தாமதங்கள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மிக்- 21 பைசன் விமானங்களில் வாழ்நாள் அளவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேஜாஸ் விமானங்களின் டெலிவரி தாமதமாகி வருவதால் இந்த முடிவு தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மிக்-21 படையணி அடுத்த வருடம் முழுமையாக படையிலிருந்து விலக்கப்பட இருந்தது. தற்போது மேலும் சில ஆண்டுகள் மிக்-21 தொடர்ந்து பணியில் இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் GE நிறுவனம் எஃப் இ 404 என்ஜின்களை டெலிவரி செய்ய தாமதம் ஆகி வரும் காரணத்தால் தேஜாஸ் விமானங்களை தயாரிக்கும் பணியில்தொய்வு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வருடம் ஜூலை மாதத்தில் முதல் தேஜாஸ் மார்க் 1 ஏ படையணியை ராஜஸ்தானின் பிகானேர் தளத்தில் ஏற்படுத்த இந்திய விமானப்படை முடிவு செய்திருந்தது. அங்கு தற்போது செயல்பாட்டில் உள்ள மிக்- 21 படையணிக்கு பதிலாக தேஜாஸ் விமான படையணியை ஏற்படுத்த இந்திய விமானப்படை முடிவு செய்திருந்தது. தற்போது காலதாமதம் காரணமாக முதல் தேஜஸ் மார்க் 1ஏ படையணியை உருவாக்க தாமதமாகி வருகிறது.
1960 முதல் இந்திய விமானப்படையில் மிக் 21 விமானங்கள் பணியாற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.