நாசவேலை : சென்னை ரயில் தடம்புரண்ட சம்பவம் தண்டவாளத்தில் நட் மற்றும் போல்ட்டுகள் அகற்றப்பட்டிருந்தது கண்டுபிடிப்பு !!

கடந்த அக்டோபர் 11ம் தேதி சென்னை அருகே உள்ள கவரைப்பேட்டை ரயில்வே நிலையத்திற்கு அருகே தர்பாங்கா மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது இதில் 12 பெட்டிகள் தடம் புரண்டு 20 பயணிகள் காயமடைந்தனர் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை முதலில் இது ஒடிசாவின் பாலசோர் விபத்தை போன்று பயணிகள் ரயில் மெயின் லைனில் இருந்து லூக் லைன்க்குள் நுழைந்து லுப் லைனில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதை துளி அளவும் வித்தியாசம் இல்லாத விபத்து எனவும் இது சிக்னல் கோளாறு மற்றும் தடம் மாற்ற அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும் ஏற்பட்ட விபத்தாக தான் கருதப்பட்டு வந்தது.

இந்த நிலையில் துறை ரீதியான விசாரணை நடைபெற்ற நிலையில் தண்டவாளத்தில் உள்ள நட்டு மற்றும் போல்ட்டுகள் கழற்றப்பட்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே மெயின் லைனில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் ரயில் லுக் லைனுக்குள் நுழைந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலில் மோதி விபத்தை சந்தித்ததாகவும் தெரியவந்துள்ளது கடந்த வியாழக்கிழமை அதாவது அக்டோபர் 17ஆம் தேதியன்று கவரைப்பேட்டை ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர், மைசூர் தர்பாங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுனர், அந்த ரயில் பயணித்த தண்டவாளத்தின் கண்காணிப்பாளர் உட்பட 15 ரயில்வே பணியாளர்கள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ எம் சவுதிரி முன்பு விசாரணைக்காக ஆஜராகினர்.

அப்போது அவர்கள் தண்டவாளத்தில் அதாவது தடம் மாற்றும் அமைப்பிலோ அல்லது சிக்னல் அமைப்பிலோ எவ்வித கோளாறும் ஏற்படவில்லை எனவும் அதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்த தெரிவித்தனர் மேலும் தண்டவாளத்தில் உள்ள நட்டு மற்றும் போல்ட்டுகள் அகற்றப்பட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தனர் ஆனால் இந்த அறிக்கை முதலில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது, இது பற்றி மாநில ரயில்வே காவல்துறை இணை ஆணையர் கர்ணன் பேசும் போது 6 நட்டுக்கள் மற்றும் போல்ட்டுகள் அகற்றப்பட்டிருந்ததாகவும் நன்கு அனுபவம் மிக்க நபரால் இவற்றை கழட்டுவதற்கு 30 நிமிடங்கள் வரை ஆகும் எனவும் அதுவே அத்தகைய ஒரு நபரிடம் எந்திரம் இருந்தால் அதைக் கொண்டு 15 முதல் 20 நிமிடத்தில் இதை செய்ய முடியும் எனவும்

தண்டவாள கண்காணிப்பாளர் சம்பவம் நடைபெற்ற அக்டோபர் 11ம் தேதி காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை அந்த பகுதியில் பணியில் இருந்ததாகவும் அந்த சமயத்தில் தண்டவாளத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இருந்ததாகவும் அவர் பணி முடிந்து சென்ற பிறகு வேறு யாரும் பணிக்கு செல்லவில்லை எனவும் இரவு 8 26 மணிக்கு அந்த வழியாக செல்லும் EMU ரயில் செல்வதற்கு சற்று முன்பாக இந்த நட்டு மற்றும் பொருட்கள் அகற்றப்பட்டிருப்பதாகவும் அப்படி நட்டு மட்டும் போல்ட்டுகள் அகற்றப்பட்டிருந்த நிலையில் EMU ரயிலும் பயணித்ததன் காரணமாக தண்டவாளம் மேலும் தளர்வடைந்ததாகவும் EMU ரயில் சென்ற பிறகு 12 நிமிடங்கள் கழித்து அதே வழியில் வந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் லூப் லைனில் நுழைந்து விபத்தை சந்தித்ததாகவும் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான மைசூர் தர்பாங்கா இடையே இயக்கப்படும் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுனர் தான் மெயின் லைனில் பயணிப்பதற்கான பச்சை சிக்னலை கண்டதாகவும் எனினும் ரயில் எப்படி லூப் லைனில் நுழைந்தது என்பது பற்றி தனக்கு ஒன்றும் விளங்கவில்லை எனவும் தெரிவித்தார் அதேபோல கவரைப்பேட்டை ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் முனி பிரசாத் பாபு பயணிகள் ரயில் மெயின் லைனில் தொடர்ந்து பயணிப்பதற்கான பச்சை சிக்னலை அளித்ததாகவும் ரயில்வே விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் தொடர்ந்து மாநில ரயில்வே காவல்துறை அதிகாரிகள் கடந்த ஜூலை 16ஆம் தேதி பொன்னேரி ரயில் நிலையத்திற்கு அருகே இதே போன்ற நாச வேலையை தண்டவாள கண்காணிப்பாளர் சரியான நேரத்தில் கண்டுபிடித்து நாச வேலையை தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தனர்.

அதாவது கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி எனது வழக்கமான கண்காணிப்பு பணியின் போது தண்டவாள கண்காணிப்பாளர் மெயின் லைனையும் லூப் லைனையும் இணைக்கும் நட்டு மற்றும் போல்ட்டுகள் கழற்றப்பட்டிருப்பதை கண்டுபிடித்து உடனடியாக தனது மேல் அதிகாரிகளுக்கு தெரிவித்ததாகவும் அதைத்தொடர்ந்து விரைவாக அந்த பிரச்சனை சரி செய்யப்பட்டதாகவும் சம்பவம் நடைபெற்ற பகுதி ருக்குபேட்டை மற்றும் சூலூர்ர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளதாகவும் இந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாமல் இருந்ததாகவும் பொன்னேரி சம்பவத்திற்கு பிறகு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது இந்த கவரப்பேட்டை ரயில் விபத்து பயங்கரவாதிகளின் சதித்திட்டமா என்பது பற்றிய கேள்வியும் எழுந்துள்ளது, நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக ஆங்காங்கே ரயில் தண்டவாளங்களில் ரயில்களை கவிழ்ப்பதற்காக பல்வேறு விதமான நாச வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும், கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் இந்தியாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள பாகிஸ்தான் பயங்கரவாதி ஃபர்கத்துல்லா கோரி இந்தியாவில் உள்கட்டமைப்பு, சப்ளை செயின், எரிவாயு மற்றும் எரிபொருள் குழாய்கள் ஆகியவற்றை குறி வைக்கும் படியும் டெல்லி மும்பை மற்றும் இதர நகரங்களில் ரயில்களை கவிழ்ப்பதற்கும் இந்தியாவில் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு கோரிக்கை விடுத்து காணொளி வெளியிட்டிருந்ததும் மேலும் அதற்கும் இந்த சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது பற்றிய சந்தேகமும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்