இந்தியாவின் முப்படைகளின் கண்காணிப்பு திறன்களை வலுப்படுத்துவதற்கும் இந்திய கடற்படையின் தாக்குதல் திறன்களை அதிகரிப்பதற்கும் வழி வகுக்க உதவும் வகையிலான சுமார் 80,000 கோடி ரூபாய் மதிப்பிலான மெகா திட்டங்களுக்கு மத்திய அரசின் பாதுகாப்பு துறைக்கான கேபினட் கமிட்டி நேற்று ஒப்புதல் அளித்து உள்ளது.
அந்த வகையில் இந்திய கடற்படைக்கு உள்நாட்டிலேயே முழுக்க முழுக்க வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்படும் இரண்டு அணு சக்தியால் இயங்கும் அதிவேக தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கப்படும் இந்த இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும் விசாகப்பட்டினம் நகரத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமானத்தில் லார்சன் மற்றும் டூப்ரோ LARSEN & TOUBRO (L&T) போன்ற தனியார் நிறுவனங்களின் உதவியோடு சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலடி தாக்குதல் திறன்களை வலுப்படுத்தும் நோக்கத்தோடு இந்திய கடற்படை இந்த திட்டத்திற்கு மிக கடுமையாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் நீண்ட நாட்களாக ஒரு முன்னேற்றமும் காணாமல் கிடந்த இந்தத் திட்டம் இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளது இது வருங்காலங்களில் இந்திய கடற்படையின் திறன்களை பல மடங்கு இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும் ATV – Advanced Technology Vesselஎனப்படும் அதிநவீன தொழில்நுட்ப கலன் என்ற திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட உள்ளன அதே நேரத்தில் தற்போது வரிசையாக கட்டப்பட்டு வரும் ஹ
அரிஹந்த் ரக அணு சக்தியால் இயங்கக்கூடிய அணு ஆயுத ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்களுக்கும் இந்த அதிவேக தாக்குதல் நீர் மூழ்கி கப்பல்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதும் நீண்டகால திட்டங்களின் அடிப்படையில் இதுபோன்ற ஆறு அதிநவீன அணுசக்தியால் இயங்கும் அதிவேகத் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை இந்திய கடற்படை படையில் இணைக்க விரும்புவது குறிப்பிடத்தக்கதாகும்.
பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்த மற்றொரு மெகா திட்டம் இந்திய தரைப்படை இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகிய முப்படைகளுக்கும் பொதுவான அதிநவீன ஆளில்லா கண்காணிப்பு வானூர்திகள் வாங்குவதற்கானதாகும், அமெரிக்காவின் General Atomics நிறுவனம் தயாரிக்கும் 31 MQ-9 Predator தொலைதூர அதிநவீன கண்காணிப்பு வானூர்திகளை இரு நாடுகளின் அரசுகளுக்கு இடையேயான நேரடி ஒப்பந்தம் மூலமாக வாங்குவதாகும் ஏற்கனவே அமெரிக்கா இதற்கான ஆஃபர் அளித்திருந்த நிலையில் அதன் காலக்கெடு வருகிற 31ஆம் தேதி வரை மட்டுமே உள்ளதால் மிக விரைவில் இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு இறுதி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகிறது.
ஒப்பந்தம் கையெழுத்து ஆகியதில் இருந்து நான்காண்டுகளுக்குள் இந்த 31 அதிநவீன ஆளில்லா கண்காணிப்பு வானூர்திகளும் டெலிவரி செய்யப்பட வேண்டியது அவசியம் ஆகும், அந்த வகையில் இந்திய கடற்படைக்கு இத்தகைய 15 அதிநவீன தொலைதூர ஆளில்லா கண்காணிப்பு வானூர்திகளும் இந்திய தரைப்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றுக்கு தலா 8 வானூர்திகள் வீதம் டெலிவரி செய்யப்படும் இதில் இந்திய தரை படை மற்றும் விமானப்படை கூட்டாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு விமானப்படை தளத்தை பயன்படுத்தி ஒன்றாக இந்த வகை ஆளில்லா கண்காணிப்பு வானூர்திகளை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் இந்த அதிநவீன ஆளில்லா கண்காணிப்பு வானூர்திகளில் மேக் இன் இந்தியா திட்டத்தின் அம்சம் சார்பாக நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், சோலார் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் பல்வேறு அதிக நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவை இந்த அமெரிக்க தயாரிப்பு விமானங்களில் பயன்படுத்தப்பட உள்ளது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்