BREAKING: தலைநகர் தில்லி துனை இராணுவ படை பள்ளி அருகே குண்டுவெடிப்பு !!
இன்று காலை நாட்டின் தலைநகர் தில்லியில் செக்டார்-14 ரோகினியில் அமைந்துள்ள CAPF – Central Armed Police Force இந்திய துணை ராணுவ படைகளில் ஒன்றான CRPF – Central Reserve Police Force மத்திய ரிசர்வ் காவல் படைக்கு சொந்தமான பள்ளி அருகே குண்டு ஒன்று வெடித்துள்ளது பள்ளியின் சுற்றுச்சூழல் அருகில் இருந்த கடைகளின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை சேதப்படுத்தும் அளவிற்கு குண்டுவெடிப்பு வலுவாக இருந்துள்ளது அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயமோ அல்லது எவ்வித உயிர்சேதமோ ஏற்படவில்லை.
இன்று காலை 7:47 மணிக்கு தில்லி காவல்துறையின் கட்டுப்பாட்டறைக்கு குண்டுவெடிப்பு பற்றிய அழைப்பு வந்துள்ளது அதைத்தொடர்ந்து உடனடியாக தில்லி காவல்துறை அதிகாரிகள் செயலில் இறங்கினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அங்கு சென்று பார்த்த போது பள்ளியின் சுற்றுச்சுவரும் அருகில் உள்ள கடைகளும் ஒரு காரும் சேதமடைந்திருப்பதையும் மேலும் குண்டு வெடித்ததை தொடர்ந்து அந்த இடத்தில் ஒரு மோசமான வாடை இருப்பதையும் கண்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து தில்லி காவல்துறையினர் சம்பவ இடத்தை சுற்றி பாதுகாப்பு அரண் அமைத்து குற்ற புலனாய்வு நிபுணர்கள் குழு, தடயவியல் நிபுணர்கள் குழு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழு ஆகியவற்றை வரவழைத்து சம்பவ இடத்தில் பல்வேறு வகையான ஆதாரங்களை திரட்டினர் மேலும் முதற்கட்ட விசாரணைகளை சம்பவ இடத்தில் நடத்தினர் அதைத்தொடர்ந்து குண்டுவெடிப்புக்கான காரணத்தை அறிவதற்கான நடவடிக்கைகளையும் தில்லி காவல்துறை எடுத்துள்ளது சம்பவ இடத்திற்கு உடனடியாக தீயணைப்பு துறையும் வரவழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது இந்த சம்பவம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது அதிகாரிகள் இந்த குண்டு வெடித்ததற்கான காரணம் இந்த குண்டு யாரால் வைக்கப்பட்டது குண்டுவெடிப்பின் தன்மை ஆகியவற்றை கண்டறிவதற்கான விசாரணைகளை துவங்கி உள்ளனர், குண்டு வெடிப்புக்குப் பிறகு புகைமூட்டம் எழும்பும் ஒரு காணொளியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இந்த வழக்கில் தற்போது தில்லி காவல்துறையுடன் மத்திய ரிசர்வ் காவல் படையினரும் ஒத்துழைத்து வருகின்றனர் அனேகமாக இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது கூடுதல் தகவலாகும்.
நாட்டின் தலைநகரில் துணை ராணுவ படையான மத்திய ரிசர்வ் காவல் படைக்கு சொந்தமான பள்ளிக்கு அருகே நடைபெற்றுள்ள இந்த குண்டுவெடிப்பு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது அதே நேரத்தில் இந்த குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளால் இந்திய அரசுக்கு எதிரான தங்களது எதிர்ப்பை காண்பிக்கும் விதமாக மத்திய ரிசர்வ் காவல் படை பள்ளியில் பயிலும் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களின் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்பட்டதா அதாவது திங்கட்கிழமை நாளை வெடிக்க வேண்டிய குண்டு இன்றே வெடித்துள்ளதா என்று கேள்விகளும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்