கண்ணுக்கு எட்டக்கூடிய தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கி அளிக்கும் அஸ்திரா மார்க் 2 ஏவுகணையை அடுத்த வருடம் டி ஆர் டி ஓ சோதனை செய்ய உள்ளது. நெடுந்தொலைவில் உள்ள இலக்குகளை அழிக்கும் திறனை இந்த ஏவுகணைகள் இந்திய விமானப்படைக்கு வழங்கும்.
அஸ்திரா மார்க் 1 ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட எந்த அஸ்திரா மார்க் 2 ஏவுகணை 140 முதல் 160 கிலோமீட்டர் வரை பயணித்து இலக்கை தாக்கக்கூடியது. இந்த ஏவுகணை ஏற்கனவே பலமுறை சோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுகணையில் அதிநவீன ஏ இ எஸ் ஏ சீக்கர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. சோதனைகள் வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் 2026 முதல் இந்த ஏவுகணைகளுக்கான தயாரிப்பு பணிகள் தொடங்கும். முழு தூரச் சோதனைகளுக்குப் பிறகு 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அளிக்கும் சோதனையும் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் குறுகிய தூரத்தில் வரும் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணையின் திறனும் உறுதிப்படுத்தப்படும்.
எந்த ஏவுகணைகள் இந்திய விமான படையின் திறனை பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் எவ்வித அச்சமும் இல்லை.