கனடா இந்தியா பிரச்சனை அமெரிக்காவுடனான ஆயுத ஒப்பந்தம் பாதிக்கப்படும் சூழல் !!
கனடாவில் வசித்து வரும் காலிஸ்தான் ஆதரவாளர்களை இந்திய அரசு அரசன் அவர்களை அனுப்பி கொன்று வருவதாகவும், இந்திய உளவுத்துறை கனடாவில் வசித்து வந்த காலஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜாரை கிரிமினல் கும்பல்களின் உதவியோடு கொன்றதாகவும் இதில் இந்திய தூதர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பங்குள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாகவும் அதன் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக விசாரணை துவங்குவதாகவும் அறிவித்த நிலையில் இந்தியாவும் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளையும் தூதரையும் திரும்ப பெற்றுக் கொண்டு இந்தியாவிலிருந்து கனடாவின் தூதரக அதிகாரிகளை தூதரை வெளியேற்றியது இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் கனடா இடையேயான ராஜாங்கரீதியான மற்றும் இரு தரப்பு உறவுகள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமான நிலையை எட்டியுள்ளன.
இப்படி இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சினை காரணமாக அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான மிக முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்த ஒன்றும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன அதாவது இந்திய தரைப்படைக்கு அமெரிக்காவிடம் இருந்து ஸ்ட்ரைக்கர் கவச வாகனங்களை வாங்குவதற்கு இந்த ஆண்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று பின்னர் கள சோதனைகள் நடத்தப்பட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட இருந்தது ஆனால் இந்த வாகனங்கள் கனடாவில் உள்ள ஜெனரல் டைனமிக்ஸ் லேண்ட் சிஸ்டம்ஸ் கனடா GDLS – C General Dynamics Land Systems Canada நிறுவனத்தால் ஒன்டாரியோ நகரத்தில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படுபவை ஆகும்.
இந்த வாகனங்கள் அடிப்படையில் அமெரிக்காவின் ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டவை ஆகும் இந்திய இராணுவத்திற்காக 10 இயந்திர மயமாக்கப்பட்ட காலாட்படை படையணிகளுக்கு தலா 53 வாகனங்கள் விதம் ஒட்டுமொத்தமாக 530 வாகனங்கள் வாங்கப்பட இருந்தன ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் முதல் தொகுதி கவச வாகனங்கள் முழுமையாக தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படவும் மீதம் உள்ளவற்றை கூட்டு தயாரிப்பு அடிப்படையில் இந்தியாவிலேயே சில மாற்றங்களுடன் இந்திய தேவைக்கு ஏற்ப குறிப்பாக உயர் பிரதேச பகுதிகளில் இயங்குவதற்கு ஏதுவாக மாற்றியமைத்து தயாரிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது கடந்த ஜூன் மாதம் இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் உள்ளதாக ஒரு மூத்த அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரி தெரிவித்து இருந்தார்.
ஆனால் கனடாவுடன் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் மோதல்கள் காரணமாகவும் அமெரிக்காவுடனும் காலஸ்தன் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாகவும் இந்த ஒப்பந்தத்தில் தற்போது எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை அக்டோபர் மாத நிலவரப்படி இந்த வாகன ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முற்றிலுமாக காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன, அதே நேரத்தில் இந்த மேற்கத்திய கவச வாகனங்களை வாங்குவதற்கு இந்தியாவுக்குள்ளும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
தற்போதைக்கு இந்தியாவில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட அதாவது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு tata அட்வான்ஸ் சிஸ்டம் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் WhAP கவச வாகனம் மிகச்சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. ஏற்கனவே இந்திய தரைப்படையிலும் துணை ராணுவ படையும் இவை மிக சிறிய அளவில் சேர்க்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளன மேலும் சமீபத்தில் மொராக்கோ இந்த வாகனங்களை தனது ராணுவத்திற்கு தேர்வு செய்து மொராக்கோவிலேயே தொழிற்சாலை அமைத்து தயாரித்து தனது தேவையை பூர்த்தி செய்து கொள்ளவும் நீண்ட கால போக்கில் ஆப்பிரிக்க நாடுகளின் கவச வாகன சேவையை பூர்த்தி செய்யவும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது இதன் மூலம் இந்தியாவுக்கு வெளியே ஒரு பாதுகாப்பு நிறுவனம் தொழிற்சாலை அமைப்பது இதுவே முதல் முறை என்ற வரலாற்று சிறப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இது தவிர மகேந்திரா நிறுவனமும் ஒரு அதிநவீன கவச வாகனத்தை தயாரித்து இந்திய படைகளின் பார்வைக்கும் சோதனைக்கும் வைத்துள்ளது இப்படி இருக்க உள்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் பல கோடி ரூபாய் முதலீட்டில் அதிநவீன கவச வாகனங்களை தயாரித்து வரும் நிலையில் இந்திய அரசு அவசர கால தேவையை பூர்த்தி செய்கிறோம் என்ற போர்வையில் மேற்கத்திய தயாரிப்பு கவச வாகனங்களை இறக்குமதி செய்வது இந்திய தொழில்துறையை நசுக்கும் செயல் எனவும் இந்திய தயாரிப்புகளை இருட்டடிப்பு செய்யும் செயல் எனவும் இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் பலர் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த வகையில் அமெரிக்காவுடனான இந்த கவச வாகன ஒப்பந்தம் ஒட்டுமொத்தமாக நின்று போவது நன்மைக்கே என்று இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர் அதன் காரணமாக வெளிநாடுகளே வாங்கும் அளவிற்கு தரமாக உள்ள அதிநவீன இந்திய தயாரிப்பு கவச வாகனங்கள் இந்திய அரசால் இந்திய ராணுவத்திற்கு வாங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்ட்ரைக்கர் கவச வாகனம் நிலத்தில் மட்டுமே பயணிக்கும் தன்மை கொண்டதாகும் ஆனால் டாட்டா நிறுவனம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கவச வாகனத்தால் நிலத்திலும் நீரிலும் பயணிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்.