இஸ்ரேல் தாக்குதலில் அடுத்த தலைவர் கொல்லப்பட்டதையும் உறுதி செய்த ஹிஸ்புல்லா இயக்கம் !!

சமீபத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவராக இயங்கி வந்த ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேல் விமானப்படையின் குண்டு வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த புதன்கிழமை அன்று ஹிஸ்புல்லா இயக்கத்தின் அடுத்த தலைவராக பொறுப்பேற்க வேண்டிய ஹஷேம் சஃபிதினும் இஸ்ரேல் விமானப்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வந்த செய்தியை உறுதிப்படுத்தி செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது, ஹசன் நஸ்ரலாவின் மரணத்தை தொடர்ந்து ஹஷேம் சஃபிதின் ஹிஸ்புல்லா இயக்கத்தின் துணை பொதுச்செயலாளர் நஹீம் காசேம் உடன் இணைந்து ஹிஸ்புல்லா இயக்கத்தை வழிநடத்தி வந்தார்.

கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா இயக்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹசன் நஸ்ரலாவின் உறவினரான ஹஷேம் சஃபிதின் ஹிஸ்புல்லா இயக்கத்தின் ராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ஜிகாத் கவுன்சிலில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தார் மேலும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் நிர்வாக மற்றும் நிதி நடவடிக்கைகளை கவனிக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் சிறப்பு நிர்வாகக் குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார் மேலும் இஸ்ரேல் உடனான மோதல்களின் போது ஹிஸ்புல்லா இயக்கத்தை பொது அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்துவது மற்றும் ஹசன் நஸ்ரலா உயிரோடு இருக்கும்போது அவரால் கலந்து கொள்ள முடியாத நிகழ்வுகளில் அவருக்கு பதிலா கலந்து கொள்வது போன்ற அவரது செயல்களை அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

ஹஷேம் சபீதின் உடைய மரணம் ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது, இவரது மரணத்தை பற்றிய ஹிஸ்புல்லா இயக்கத்தின் செய்தி அறிக்கையில் ஹஸ்யம் சபிதின் மிகப்பெரிய போராளி எனவும் மிகப்பெரிய தலைவர் எனவும் தன்னுடைய வாழ்க்கையை மிகுந்த கௌரவத்துடன் கண்ணியமாக வாழ்ந்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது, கடந்த அக்டோபர் நான்காம் தேதி இஸ்ரேல் விமானப்படை பெரூட் விமான நிலையம் அருகே தீவிர குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது இந்த தாக்குதலுக்குப் பிறகு ஹசன் சபீதின் உடனான தகவல் துண்டிக்கப்பட்டதாக ஹிஸ்புல்லா மூத்த நிர்வாகிகள் கூறி வந்த நிலையில் அமெரிக்கா அரசு தகவல்கள் ஹஸ்ம் ஷஃபிதீனை குறி வைத்து இஸ்ரேல் அந்த பகுதியில் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தது.

ஹஸ்யம் சபிதின் கொல்லப்பட்ட அதே குண்டு வீச்சு தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் உளவு பிரிவின் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாக இயங்கி வந்த அலி ஹுசைன் ஹஷிமா என்கிற முக்கிய ஹிஸ்புல்லா நிர்வாகியும் கொல்லப்பட்டுள்ளான், ஹஷேம் சபிதீன் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திட்டமிடும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் திட்டங்கள் அனைத்திலும் முக்கியமான பங்கு வகித்தவன் என இஸ்ரேல் குற்றம் சாட்டி உள்ளது மேலும் இவனை அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் தீவிரவாதி என முத்திரை குத்தி உள்ளதும், கடந்த 2020 ஆம் ஆண்டு ஈராக் தலைநகர் பாக்தாத்தின் புறநகர் பகுதியில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய ராணுவ தளபதியான ஜெனரல் காசெம் சொலைமானியின் மருமகனின் தந்தை என்பதும் இதன் மூலம் ஈரானுடன் இவருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்திற்கும் இருக்கும் நேரடியான நெருக்கமான உறவுகள் குறிப்பிடத்தக்கது ஆகும்.