முழுக்க முழுக்க இந்தியாவிலேயே ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது தான் ALH – Advanced Light Helicopter Dhruv எனப்படும் அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர் த்ரூவ் ஆகும், இந்த ஹெலிகாப்டர் அவ்வப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துகளை சந்தித்து வருகிறது அந்த வகையில் சமீபத்தில் பீகார் மாநிலத்தில் வெள்ளம் செய்த மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான த்ரூவ் ஹெலிகாப்டர் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக வெள்ளத்தில் தரையிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
வெள்ளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து உடனடியாக பாதுகாப்பு படையினரும் படகுகளில் வந்த பொதுமக்களும் சேர்ந்து நிவாரண பொருட்களை படகுகளில் ஏற்றிவிட்டு வெள்ளத்தில் பகுதி மூழ்கி இருந்த ஹெலிகாப்டரை விமானப்படை அதிகாரிகள் பார்வையிட்ட போது கண்ணாடிகள் எல்லாம் விரிசல் விட்டு இருப்பதும் ஹெலிகாப்டரின் முக்கிய விசிறி மற்றும் இதர பாகங்கள் சேதமடைந்து இருப்பதும் தெரிய வந்தது இதைத்தொடர்ந்து இந்திய விமானப்படை நடத்திய முதல் கட்ட விசாரணையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்த நிலையில் வேறு வழியின்றி விமானி ஹெலிகாப்டரை உயிர் சேதமா பொருள் சேதமோ ஏற்படுத்தாத வகையில் அவசரமாக வெள்ளத்தில் தரை இறக்கியது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்திய விமானப்படை தன்னிடம் பயன்பாட்டில் உள்ள அனைத்து அதிநவீன இலகுரக த்ரூவ் ஹெலிகாப்டர்களின் இயக்கத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது மிக முக்கியமான படை உதவி நடவடிக்கைகள் அதாவது எல்லையோரம் உள்ள வீரர்களுக்கு தேவையான சப்ளைகளை கொண்டு செல்வது போன்ற மிக முக்கியமான நடவடிக்கைகளுக்கு மட்டுமே இந்த ஹெலிகாப்டர்கள் பறப்பதற்கு அனுமதிக்கப்படும் எனவும் வேறு பயிற்சி நடவடிக்கைகள் போன்ற செயல்பாடுகளில் இந்த வகை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது எனவும் மிக விரைவில் பிரச்சனை கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டு அனைத்து ஹெலிகாப்டர்களும் வழக்கமான முறையில் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இந்த வகை ஹெலிகாப்டர்கள் சுமார் பதினைந்து முறை விபத்தை சந்தித்துள்ளன இதில் குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மீட்பு பணியின் போது கடலில் இதேபோன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக ஹெலிகாப்டரை விமானிகள் தரையிறக்கிய சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகள் மற்றும் இரு குழுவினரில் ஒருவர் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில் மற்ற இரண்டு விமானங்களும் ஒரு குழு உறுப்பினரும் கடலில் மூழ்கி இறந்ததும் இதைத்தொடர்ந்து இந்திய கடலோர காவல் படை தனது சேவையில் உள்ள அனைத்து துருவ் ஆய்வுக்காக பறக்க தடை விதித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த வகை ஹெலிகாப்டர்களின் மேம்படுத்தல் பணிகளை துவங்கியுள்ள நிலையில் இதுபோன்ற கவலை அளிக்கும் பிரச்சினைகள் அவ்வப்போது நிகழ்ந்து வருவது ஒரு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது பொதுவாக இந்த வகை ஹெலிகாப்டர்களின் டிசைனில் ஏதோ ஒரு பிரச்சனை இருப்பதாகவும் அதை ஆய்வுக்கு உட்படுத்திய நிலையில் ஹெலிகாப்டர்களின் இயக்கத்திற்கு திசை மாறும் செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமான கண்ட்ரோல் ராடு எனப்படும் கட்டுப்பாட்டு கம்பிகளில் பிரச்சினை இருப்பதாகவும் அலுமினியத்தால் செய்யப்பட்ட இவற்றை தற்போது ஸ்டீல் கொண்டு செய்து அவற்றை ஹெலிகாப்டர்களில் பொருத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.