ராஜஸ்தான் மாநிலத்தின் மகாஜன் ராணுவ பயிற்சி காலத்தில் இருபதாவது ஆண்டு இந்தியா அமெரிக்க தரைப்படைகள் இடையேயான யூத் அபியாஷ் 2024 கூட்டு பயிற்சிகள் இன்று அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளன. இந்த யுத் அபியாஷ் வருடாந்திர கூட்டு பயிற்சிகள் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று அதாவது ஒன்பதாம் தேதி முதல் வருகிற 22ஆம் தேதி வரை நடைபெறும் இந்த இந்திய அமெரிக்க திரைப்படக் கூட்டு பயிற்சிகளில் இந்திய தரைப்படையின் சார்பில் ராஜ்புத் ரெஜிமென்ட் இலிருந்து 600 வீரர்களும் அமெரிக்க தரைப்படையின் சார்பில் பதினோராவது ஏர்போர்ட் டிவிஷனை சேர்ந்த முதல் பட்டாலியன் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த இரு தரப்பு கூட்டு பயிற்சி களின் நோக்கமானது இருதரப்பு கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை திறன்களை அதிகப்படுத்துவதாகும் மேலும் பாலைவனப் பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன்களையும் அதிகப்படுத்துவதாகும் இந்த கூட்டு பயிற்சிகள் ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது சரத்தின் கீழ் நடத்தப்படுகின்றன. அதேபோல இந்த ஆண்டு நடைபெறும் பயிற்சிகளில் கடந்த ஆண்டு விடவும் அதிக அளவில் வீரர்களும் தளவாடங்களும் களம் இறக்கப்பட உள்ளது.
உண்மையான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைப் போன்ற சூழலை உருவாக்கி அந்த ஆபத்துகளை கூட்டாக திட்டமிட்டு கூட்டாக நடவடிக்கைகளை மேற்கொண்டு முறியடிப்பதை இந்த கூட்டு பயிற்சிகள் மூலமாக இருதரப்பு வீரர்களும் செய்து காண்பிக்க உள்ளனர்.
இந்த இந்தியா அமெரிக்கா தரைப்படைகள் இடையேயான யூத் அபியாஸ் கூட்டுப் பயிற்சிகள் இரு ராணுவங்கள் இடையேயான ஒத்துழைப்பை அதிகப்படுத்தி உள்ளது மேலும் இரு தரப்பினரும் பயன்படுத்தி வரும் சிறப்பான வியூகங்கள் தந்திரங்கள் நடைமுறைகள் மற்றும் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முறைகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள உள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு மிக்க தகவல் ஆகும்.