காலதாமதம் செய்யப்பட்ட போர் விமான என்ஜின்களின் டெலிவரியை துவங்கிய அமெரிக்கா !!

இந்தியா சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அதாவது இந்திய மதிப்பில் 8300 கோடி ரூபாய் மதிப்பிலான 99 போர் விமான என்ஜின்களை அமெரிக்காவின் GE General Electrics ஜெனரல் எலக்ட்ரிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து தனது தேஜாஸ் மார்க் ஒன்று போர் விமானங்களுக்காக ஆர்டர் செய்திருந்தது ஆனால் ஜெனரல் எலக்ட்ரிக்ஸ் நிறுவனத்தால் அதனுடைய மூல பாகங்கள் சப்ளையில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக தயாரிப்பு பணிகளில் தோய்வு ஏற்பட்டு டெலிவரியும் காலதாமதம் ஆகி வந்தது நாம் அனைவரும் அறிந்ததே

அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் தயாரிக்கும் GE F 404 ரக ஜெட் என்ஜின்களை தான் தேஜாஸ் இலகு ரக போர் விமானத்தில் பயன்படுத்தி வருகின்றனர் இதன் காரணமாக மேலும் அதிக அளவில் தேஜாஸ் விமானங்களை தயாரிப்பதற்கு இந்த இன்ஜின்கள் இன்றியமையாதவை ஆகும் ஆகவே இந்த இன்ஜின்களின் டெலிவரி எந்த அளவுக்கு காலதாமதம் ஆகிறதோ அந்த அளவுக்கு தேஜாஸ் இலகு ரக போர் விமானங்களின் தயாரிப்பு பணிகளும் காலதாமதம் ஆகும் இதன் காரணமாக ஏற்கனவே இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் புதிதாக தேஜாஸ் விமானங்களை படையில் சேர்க்கும் திட்டங்களும் பாதிக்கப்படும் ஆபத்துக்கள் உள்ளன

இப்படி நாட்டின் பாதுகாப்பில் மிகப்பெரிய சிக்கலை இந்த விவகாரம் உருவாக்கி இருந்த நிலையில் தற்போது சற்றே ஆறுதல் அளிக்கும் விதமாக அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக்ஸ் நிறுவனம் மேல் குறிப்பிட்ட GE F – 404 ரக இன்ஜின்களின் டெலிவரியை விரைவில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன அந்த வகையில் இரண்டு இன்ஜின்கள் இந்த மாதம் இந்தியாவிற்கு டெலிவரி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன மேலும் ஜெனரல் எலக்ட்ரிக்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் 6 என்ஜின்களை இந்தியாவிற்கு டெலிவரி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது

இதன் காரணமாக HAL – Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தேஜாஸ் இலகுரக போர் விமானத்தின் தயாரிப்பு பணிகள் வேகம் மடையும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஜெனரல் எலக்ட்ரிக்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இன்ஜின்களை டெலிவரி செய்ய உள்ள அதே காலகட்டத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் குறைந்தபட்சம் எட்டு தேஜாஸ் மார்க் 1 பயிற்சி விமானம் மற்றும் மார்க் 1ஏ ஆகியவற்றை தயாரித்து இந்திய விமானப்படைக்கு டெலிவரி செய்ய வழி வகுக்கும் எனவும் கூறப்படுகிறது

மேலும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் என்ஜின்களுக்காக காத்திருக்காமல் விமானங்களின் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது அந்த வகையில் ஏற்கனவே ஐந்து தேஜாஸ் மார்க் 1 பயிற்சி விமானங்களை தயாரித்து உள்ளதாகவும் மேலும் இத்தகைய மூன்று விமானங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரிக்கப்பட்டு விடும் எனவும் இன்ஜின்கள் கிடைத்ததும் அவற்றை இந்த விமானங்களில் பொருத்தி சோதனை ஓட்டம் நடத்தி இந்திய விமானப்படை இடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது இது தவிர மேலும் மூன்று விமானங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தயாரிக்கப்படும் எனவும் முதலாவது தேஜாஸ் மார்க் 1ஏ ஒரு விமானம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்ட நிலையில் மேலும் இத்தகைய மூன்று மாதங்கள் என்ஜினுக்காக காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

அதேபோல ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள தேஜாஸ் மார்க் 1 பயிற்சி போர் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள கிரேட் பி அதாவது இரண்டாம் தர என்ஜின்களை மாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது அதாவது இந்த விமானங்களில் இனி வரவுள்ள புத்தம் புதிய இன்ஜின்களை பொருத்தி இந்திய விமானப்படையிடம் திறன் மிகுந்த விமானங்களை டெலிவரி செய்வதற்கான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நோக்கத்தை இது வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

தற்போது ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் இந்த இன்ஜின்களின் டெலிவரி துவங்கி உள்ளது தேஜாஸ் போர் விமானங்களின் தயாரிப்பு பணிகளை விரிவு படுத்தியுள்ள அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாக 99 என்ஜின்களையும் எந்த அளவுக்கு விரைவாக அந்த நிறுவனம் டெலிவரி செய்கிறதோ அந்த அளவுக்கு விரைவாக தேஜாஸ் போர் விமானங்களில் தயாரிப்பு பணிகளை முடித்து இந்திய விமானப்படையில் சேர்க்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகவே இனி வருங்காலத்திலும் மிக வேகமாக ஜெனரல் எலக்ட்ரிக்ஸ் நிறுவனம் இந்த இன்ஜின்களின் டெலிவரி விரைவுப் படுத்த வேண்டிய அவசியம் உள்ளது மேலும் இதை பொறுத்துதான் மீண்டும் இந்திய விமானப்படை தேஜாஸ் விமானங்களுக்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என்பதும் கூடுதல் தகவலாகும்