இஸ்ரேல் நடத்திய லெபனான் பேஜர் தாக்குதல்களில் காயமடைந்த ஈரான் தூதர் பயங்கரவாத இயக்கத்தின் பேஜர் எப்படி ஈரான் தூதரிடம் வந்தது ??

இஸ்ரேல் சமீபத்தில் லெபனான் நாட்டில் இருந்து தனது நாட்டிற்கு எதிராக இயங்கும் தீவிர இஸ்லாமிய அடிப்படை வாத கொள்கை கொண்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மிக பயங்கரமான அதே நேரத்தில் துல்லியமான முறையில் பேஜர் கருவிகள் மூலம் தாக்குதல்களை நடத்தி ஏறத்தாழ ஹிஸ்புல்லா இயக்கத்தின் 15 சதவிகித உறுப்பினர்களை முடக்கி ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு மரண அடி கொடுத்துள்ளது நம் அனைவருக்கும் தெரிந்தது தான்.

இஸ்ரேலிய உளவு அமைப்பான மோசாத் இயக்கம் நடத்திய இந்த தாக்குதல்களில் ஏறத்தாழ நான்காயிரத்திற்கும் அதிகமான ஹிஸ்புல்லா இயக்க உறுப்பினர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் 400க்கும் அதிகமானோர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் 500 பேரில் பார்வை பறிபோய் உள்ளதாக கூறப்படும் நிலையில் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த தாக்குதல்களில் லெபனான் நாட்டிற்கான ஈரான் நாட்டின் தூதரும் காயமடைந்துள்ளது ஆகும்

லெபனான் நாட்டிற்கான ஈரான் நாட்டின் தூதர் மோச்தாபா அமானி இந்த பேஜர் வெடி குண்டு தாக்குதலில் காயமடைந்துள்ளதாக ஈரான் நாட்டின் அரசு ஊடகமான பார்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது மேலும் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வீடியோக்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றன அமானிக்கு மிக மோசமான பாதிப்பு எதுவும் இல்லை எனவும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையிலும் கண்காணிப்பிலும் உள்ளார் எனவும் ஃபார்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இது பற்றி ஊடகங்களிடம் பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் ஆராக்ச்சி தங்களது நாட்டு தூதரை பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்து வருவதற்காகவும் அவரது உயிரை காப்பாற்றியதற்காகவும் லெபனான் அரசுக்கு லெபனான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தொலைபேசியில் பேசி நன்றி தெரிவித்துள்ளார் மேலும் இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதல்களை பயங்கரவாத செயல் என குறிப்பிட்டு வன்மையான கண்டனங்களை ஈரான் சார்பில் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்கள் பற்றி பெயர் மற்றும் அடையாளம் ஆகியவற்றை வெளியிட விரும்பாத ஒரு மூத்த ஹிஸ்புல்லா இயக்க உறுப்பினர் கூறும் போது ஹிஸ்புல்லா இயக்கத்தின் வரலாற்றிலேயே இதுதான் மிக மோசமான பாதுகாப்பு குறைபாடு தொடர்பான சம்பவம் எனவும் இது ஹிஸ்புல்லா இயக்கத்தை மிகவும் கடுமையாக பாதித்துள்ளதாகவும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தகவல் தொடர்பு திறன்களை முற்றிலுமாக முடக்கி போட்டுள்ளதாகவும் கூறியுள்ளது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்