ஐநா பாதுகாப்பு சபையில் இங்கிலாந்து தனது நிரந்தர உறுப்பினர் பதவியை இந்தியாவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் முன்னாள் சிங்கப்பூர் தூதர் !!

சமீபத்தில் என் டி டி வி NDTV தொலைக்காட்சியின் சோனியா சிங் அவர்களுக்கு முன்னாள் சிங்கப்பூர் தூதர் கிஷோர் மகபுபானி அளித்த பிரத்தியாக பேட்டியின் போது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் செய்யப்பட வேண்டிய மறுசீரமைப்பு குறித்து பேசினார் அப்போது ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக உள்ள இங்கிலாந்து தனது பதவியை இந்தியாவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என அதிரடியான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது முனைவர் கிஷோர் மஹபூபானி ஐக்கிய நாடுகள் சபையில் செய்யப்பட வேண்டிய அவசியமான மறுசீரமைப்பு மற்றும் மாற்றங்கள் குறித்துப் பேசும்போது இந்த மறு சீரமைப்புகளும் மாற்றங்களும் உடனடியாக செய்யப்பட வேண்டியவை எனவும் இவற்றை இனியும் காலம் தாழ்த்தி செய்யக்கூடாது எனவும் இந்த மாற்றங்களும் மறு சீரமைப்புகளும் காலத்தின் கட்டாயம் எனவும்,

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு மிக முக்கியமான அங்கமான பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாகுவது அதனுடைய உரிமை எனவும் இங்கிலாந்து ஐநா பாதுகாப்பு சபையில் வகித்துக் கொண்டிருக்கும் நிரந்தர உறுப்பினர் பதவியை இந்தியாவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என தான் தனிப்பட்ட முறையில் நம்புவதாகவும்

இன்றைக்கு உலகில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது சக்தி வாய்ந்த நாடாக இந்தியா திகழ்வதாகவும் அதைக் குறித்து எந்தவித சந்தேகமும் இல்லை எனவும் ஒரு காலத்தில் கிரேட் பிரிட்டன் என்று அழைக்கப்பட்ட இங்கிலாந்து தற்போது சக்தி இழந்து விட்டதாகவும் ஆகவே இந்தியாவிற்கு இங்கிலாந்து தனது நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை விட்டுக் கொடுப்பதுதான் சரியாக
இருக்கும் எனவும் கூறினார்.

மேலும் அவர் இங்கிலாந்து இந்தியாவிற்கு தனது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை விட்டுக் கொடுப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்களையும் முன் வைத்தார் அதாவது எதிர்ப்புகளுக்கு அஞ்சி இங்கிலாந்து பல காலமாகவே தனது வீட்டோ அதிகாரத்தை முக்கிய விஷயங்களில் பயன்படுத்தவில்லை என்பதையும், இங்கிலாந்து தற்போது அமெரிக்காவை மீறி எதையும் சுதந்திரமாக செய்ய முடியாது ஆனால் தனது நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை இந்தியாவிற்கு விட்டுக் கொடுக்கும் பட்சத்தில் அமெரிக்காவுக்கு இங்கிலாந்து தேவைப்படாது அதற்குப் பிறகு இங்கிலாந்தால் தன்னிச்சையான முடிவுகளை சர்வதேச அரங்கில் எடுக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஐக்கிய நாடுகள் சபையை தோற்றுவித்தவர்கள் முதல் உலகப்போர் முடிவு பெற்ற பிறகு இருபதாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட லீக் ஆஃப் நேஷன்ஸ் எனும் பன்னாட்டு அமைப்பு ஒரு வல்லாதிக்க நாடு அதை விட்டு விலகிய போது உடைந்து போன சூழலில் இருந்து கற்றுக்கொண்ட பாடத்தை அடிப்படையாக வைத்து ஐக்கிய நாடுகள் சபை உடையாமல் இயங்குவதற்கு வல்லாதிக்க நாடுகள் அந்த அமைப்பில் சிறப்பு அதிகாரங்களுடன் இயங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்கினர் அதே நேரத்தில் அவர்கள் காலத்திற்கு ஏற்ப அந்தந்த சமயங்களில் உள்ள வல்லாதிக்க நாடுகள் இந்த சிறப்பு அதிகாரங்கள் பெறுவதை விரும்பினர் ஆனால் துரதிருஷ்ட வசமாக அந்த மாற்றம் நிகழ்வதற்கான வழிமுறைகளை உருவாக்க தவறிவிட்டனர் என கூறி உள்ளார்.

பனிப்போர் காலகட்டத்திற்கு பிறகு இங்கிலாந்து ராணுவம் அளவில் மிக சிறிதாக குறைந்து விட்டது இன்றைக்கு தமிழக காவல்துறையை விட சற்றே பெரியதாகவும் உத்திரபிரதேச காவல்துறையை விட சிறியதாகவும் அதாவது வீரர்கள் எண்ணிக்கையில் இங்கிலாந்தின் முப்படைகள் உள்ளன. அணு ஆயுதங்களை தவிர்த்தால் சிங்கப்பூர் தென் கொரியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கூட இங்கிலாந்தை விடவும் சக்தி வாய்ந்த நாடுகளாக உள்ளன, ஆகவே அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்த ஒரே காரணத்தால் இன்று வரை இங்கிலாந்து தனது தகுதியை இழந்த பிறகும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடாக நீடிக்கிறது.

சிங்கப்பூர் தூதர் முனைவர் கிஷோர் மகஹுபானி இந்திய வம்சாவளி சேர்ந்தவர் அவர் கடந்த 1984 முதல் 1989 மற்றும் 1998 முதல் 2004ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் சிங்கப்பூர் அரசின் ஐநாவுக்கான நிரந்தர பிரதிநிதியாகவும் 2001 முதல் 2002 வரையிலான காலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் ஆவார் ஆகவே இந்த விவகாரத்தில் இவர் பேசுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்த நபர் என்பது கூடுதல் சிறப்புமிக்க தகவலாகும்.