இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆசியாவின் மிகப்பெரிய கடற்படை தளம் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் அளித்த நபர்கள் கைது !!
கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி NIA – National Investigation Agency அதாவது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கர்நாடக மாநிலம் கார்வார் பகுதியில் அமைந்துள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆசியாவின் மிகப்பெரிய கடற்படை தளத்தில் பணியாற்றி வந்த மூன்று பேரை பாகிஸ்தானுக்கு முக்கிய தகவல்களை பரிமாறிய குற்றத்திற்காக கையும் களவுமாக கைது செய்தனர்.
ஒரு துணை காவல் கண்காணிப்பாளர், மூன்று காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய தேசிய புலனாய்வு முகமை குழுவினர் கார்வார் பகுதியில் அமைந்துள்ள INS KADAMBA ஐ.என்.எஸ் கடம்பா கடற்படை தளத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். அந்த மூன்று பேரின் பெயர் விவரங்களாவன; 1) தோடூர் கிராமத்தை சேர்ந்த சுனில் நாயக் 2) மூட்கா கிராமத்தை சேர்ந்த வேத்தன் ராண்டேல் 3) ஹலாவல்லி கிராமத்தை சேர்ந்த அக்ஷய் ரவி நாயக் ஆவர் இவர்கள் மூவரும் கார்வார் தாலுகாவை சேர்ந்தவர்கள் ஆவர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஹைதராபாத் நகரத்தில் கார்வார் கடற்படை தளத்தை பற்றிய தகவல்களை பாகிஸ்தான் மற்றும் பிற எதிரி நாடுகளுக்கு அனுப்பியதாக தீபக் என்பவரை கைது செய்தனர் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூவர்தான் கார்வார் கடற்படை தளம் பற்றிய புகைப்படங்கள் மற்றும் முக்கிய தகவல்களை தனக்கு அனுப்பியதாகவும் அதைத்தான் அவன் எதிரி நாடுகளுக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தான் இதைத்தொடர்ந்து தான் இந்த மூவரையும் தற்போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரில் அக்ஷய் முதலில் கார்வார் கடற்படை தளத்தில் தான் வேலை செய்து வந்துள்ளான் பின்னர் அங்கிருந்து வேலையை விட்டுவிட்டு கோவா சென்று அங்குள்ள ஒரு கேண்டினில் பணியாற்றி வந்துள்ளான் அவனை அங்கு வைத்து கைது செய்துள்ளனர். அதே நேரத்தில் மற்ற இருவரான சுனில் மற்றும் வேத்தன் ஆகியோரை கார்வார் கடற்படை தளத்தில் வைத்துதான் கைது செய்துள்ளனர் இவர்கள் மூவரின் தற்போது ஒரு ரகசிய இடத்திற்கு கூடுதல் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.