92 ஆவது இந்திய விமானப்படை தினம் சென்னையில் கொண்டாடப்படும் விமானப்படை அறிவிப்பு !!
கடந்த ஒரு சில ஆண்டுகளாக இந்திய விமானப்படை தனது விமானப்படை தினத்தை தலைநகர் தில்லியில் கொண்டாடும் வழக்கத்தை மாற்றியதை எடுத்து இந்த ஆண்டு இந்திய விமானப்படை தினம் சென்னையில் கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு சண்டிகரிலும் 2023 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியிலும் இந்திய விமானப்படை தனது விமானப்படை தின விழாக்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
வருகிற அக்டோபர் மாதம் எட்டாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று புதிய விமானப்படை தனது 92வது விமானப்படை தின விழாவை சென்னையில் நடத்த உள்ளது. அன்று காலை இந்திய விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு முதலில் நடைபெறும் எனவும் அதைத்தொடர்ந்து காலை 7.45 மணி அளவில் மெரினா கடற்கரையில் போர் விமானங்களின் பறத்தல் மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாகச நிகழ்வின்போது இந்திய விமானப்படையின் முன்னணி போர் விமானங்களான ரபேல் சுகோய் 30 மற்றும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட தேஜாஸ் இலகு ரக போர் விமானம், அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் பிரச்சன்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் சினூக், மி-17, த்ரூவ் ஹெலிகாப்டர்கள், C-295, C-135, C-17 போன்ற விமானங்களும் இதில் பங்கு பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்திய விமானப்படையின் பாராசூட் ஆகாஷ்கங்காவும் பொதுமக்களின் பார்வைக்கு விருந்தளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு இந்த மாத இறுதியில் பொறுப்பேற்க உள்ளம் புதிய இந்திய விமானப்படை தலைமை தளபதி நேரடி கட்டுப்பாட்டின் கீழ் நடைபெற உள்ளதாகவும் மத்திய மாநில அரசுகளின் தலைவர்கள் அதிகாரிகள் முப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்வது எனவும் கூறப்படுகிறது.