ஸ்வீடன் நாட்டை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற SAAB Group குழுமத்தின் ஒரு அங்கமான SAAB AB எனப்படும் வான்வெளி ராணுவ தளவாடை தயாரிப்பு நிறுவனம் இந்திய விமானப்படைக்கான 114 MRFA – Multi Role Fighter Aircrafts பல திறன் போர் விமானங்கள் கொள்முதல் திட்டத்தில் கலந்து கொண்டுள்ளது. இந்த நிறுவனம் தற்போது இந்தத் திட்டத்தில் வெற்றி பெறும் நோக்கோடு ஒரு அதிரடியான ஆஃபரை இந்திய விமானப்படைக்கு தருவதற்கு முன் வந்துள்ளது இது இந்திய பாதுகாப்பு துறையில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது மேலே குறிப்பிடப்பட்ட 114 பல திறன் போர் விமானங்கள் கொள்முதல் திட்டத்தில் SAAB AB நிறுவனம் தயாரிக்கும் JAS 39 Gripen E ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை தேர்வு செய்தால் ஒரு ஆண்டிற்கு 20 முதல் 25 போர் விமானங்கள் வரை தயாரித்து இந்திய விமான படைக்கு டெலிவரி செய்ய தங்கள் நிறுவனம் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய விமானப்படை அடுத்த ஆறு ஏழு ஆண்டுகளுக்குள் தனது குறைந்து வரும் போர் விமான படை பலத்தை முடிந்த அளவுக்கு சமன் செய்ய திட்டமிட்டுள்ளது ஆகவே ஒரு ஆண்டுக்கு குறைந்தது 18 போர் விமானங்களை ஆகிலும் ஒப்பந்தத்தில் வெற்றி பெறும் நிறுவனம் தயாரித்து தரும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என இந்திய விமானப்படை விரும்புகிறது. இந்த நிலையில் தான் SAAB AB நிறுவனம் இந்திய விமானப்படையின் அதிக தேவையை பூர்த்தி செய்வதற்கு தங்களால் முடியும் என சுட்டிக்காட்டி உள்ளது.
ஸ்வீடன் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள லின்கோபிங் நகரத்தில் அமைந்துள்ள SAAB AB நிறுவனத்தின் தொழிற்சாலை ஆண்டுக்கு சுமார் 25 SAAB JAS 39 GRIPEN E உலகப் போர் விமானங்களை தயாரிக்கும் திறன் கொண்டது என பாதுகாப்புத் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்திய விமானப்படைக்கான இந்த 114 பல திறன் போர் விமானங்கள் வாங்கும் திட்டமானது இந்தியாவின் மிகப்பெரிய லட்சிய கனவு திட்டங்களில் ஒன்றாகும். இது இந்திய விமான படையின் பலத்தை மீட்டெடுப்பதற்கும் அதிகரிப்பதற்கும் பெரும் உதவியாக அவன் என பலராலும் கூறப்படுகிறது.
இந்த 114 போதுமான கொள்முதல் திட்டம் இந்திய விமானப்படையின் வான் ஆதிக்கம் தரை தாக்குதல் மின்னணு போர் முறை கண்காணிப்பு உள்ளிட்ட திறன்களை பல மடங்காக அதிகரிக்க உதவும். இந்தத் திட்டம் இந்தியாவின் ராணு நவீனமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாகும். மேலும் இது போர் விமானத்தை வாங்குவது மட்டுமின்றி தொழில் நுட்ப பரிமாற்ற ஒப்பந்த அடிப்படையில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்போடு இந்தியாவிலேயே குறிப்பிட்ட அளவு விமானங்களை தயாரிக்கும் திட்டத்தையும் கொண்டுள்ளது இதன் மூலம் இந்திய பாதுகாப்பு தொழில் துறை நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டு எதிர்காலத்தில் சொந்தமாக தளவாடங்களை தயாரிப்பதற்கான அனுபவத்தையும் வழங்கி இறக்குமதியை குறைக்க உதவும்.
மேலே குறிப்பிட்ட 114 பல திறன் போர் விமானங்களை வாங்கும் திட்டத்தில் அமெரிக்காவின் Lockheed Martin நிறுவனம் தயாரிக்கும் F-16 போர் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமான F-21 மற்றும் BOEING நிறுவனம் தயாரிக்கும் F/A – 18 E/F சூப்பர் ஹார்னெட் போர் விமானங்கள், பிரான்ஸ் நாட்டின் Dassault Aviation நிறுவனத்தின் Rafale, Eurofighter Gmbh நிறுவனத்தின் Typhoon, ரஷ்யாவின் United Aircraft Corporation தயாரிக்கும் Mig – 35 மற்றும் Sukhoi நிறுவனம் தயாரிக்கும் Su – 35 ஆகிய போர் விமானங்கள் இந்த போட்டியில் இடம் பெற்றுள்ளன.
SAAB JAS 39 GRIPEN E போர் விமானத்தை பொறுத்தவரையில் மிகவும் நவீனமானதாகும், இது முந்தைய கிரைப்பன் விமானங்களை விடவும் மேம்பட்ட வடிவமாகும். இப்போதைய வான் சண்டை மற்றும் பாதுகாப்பு பணிகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. மேலும் இதில் அதிநவீன ஏவியானிக்ஸ், மின்னணு போர் முறை அமைப்பு, Fly By Wire அமைப்பு IRST அமைப்பு, அதி நவீன HUDS மற்றும் தொடுதிரை அமைப்புகள், கணினி அமைப்புகள் மற்றும் பல்வேறு சென்சார் மற்றும் தற்காப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த விமானத்தில் பயன்படுத்தப்படும் எஞ்சின் அமெரிக்காவின் GE General Electrics நிறுவனம் தயாரிக்கும் F – 414 GE 39 E ரகு எஞ்சின் தான் பயன்படுத்தப்படுகிறது இது ஒரு ஒற்றை எஞ்சின் போர் விமானமாகும். இந்த விமானத்தால் மணிக்கு சுமார் 2500 கிலோமீட்டர் வேகத்தில் 16 கிலோமீட்டர் உயரத்தில் 800 முதல் 3200 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் ஆற்றல் கொண்டதாகும். மேலும் Raven ES-05 Active Electronically Scanned Array [AESA] radar எனப்படும் ரேடார் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது இதை இத்தாலி நிறுவனமான Leonardo லியனார்டோ தயாரிக்கிறது.
இந்தப் போர் விமானத்தால் AIM-120 AMRAAM,IRIS-T, MBDA Meteor, AIM -9, A – Darter, AGM – 65 ஏவுகணைகள்,KEPD 350 குரூஸ் ஏவுகணை,GBU-39 SDB, GBU – 12 LGB, Mk – 82 குண்டுகள்,RBS-15 கப்பல் எதிர்ப்பு ஏவுகணை மற்றும் 27mm Mauser BK-27 கனரக துப்பாக்கி ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வகையான 5.3டன் ஆயுதங்களை ஏந்தி செல்ல முடியும், இந்த விமானத்தால் பலவிதமான கால சூழல்களிலும் எந்தவித தங்கு தடையும் இன்றி இயங்க முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும்.