உக்ரைன் உடனான போருக்கு தேவையான பொருட்களை பெற இந்தியாவுடன் ரகசிய வர்த்தக பாதையை அமைத்துள்ள ரஷ்யா !!

பைனான்சியல் டைம்ஸ் என்ற நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திகளில் ரஷ்யா உக்கிரேன் உடனான போருக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்களை பெறுவதற்கு இந்தியா உடல் ஒரு ரகசிய வர்த்தக பாதையை அமைத்துள்ளதாக சமீபத்தில் வெளியான ரகசிய அரசு ஆவணங்களில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்தி வெளியிட்டுள்ளது இது தற்போது உலக அரசியல் அரங்கில் ஒரு பரபரப்பை கிளப்பி உள்ளது

அதாவது ரஷ்யா மீது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளும் அவற்றிற்கு ஆதரவான பல்வேறு நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில் ரஷ்யா தனது ராணுவ தளவாடங்களுக்கு தேவையான அதிநவீன கருவிகள் அமைப்புகள் துணை அமைப்புகள் சிப் போன்றவற்றை பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது இந்த தடைகளை தாண்டி ரஷ்யா இத்தகைய தொழில்நுட்பங்களை பெறும் விதமாக தான் தற்போது இந்தியாவுடன் ஒரு ரகசிய வர்த்தக பாதையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது

அதாவது ரஷ்யா இந்தியாவில் இருந்து மின்னணு அமைப்புகள் இரட்டை உபயோக அமைப்புகள் தகவல் தொடர்பு கருவிகள் அது தொடர்பான இதர அமைப்புகள் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு சுமார் 8,400 கோடி ரூபாய் வரை செலவு செய்வதற்கு ரஷ்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ரஷ்யா இந்தியாவிடம் இருந்து வாங்க நினைக்கும் இந்த பொருட்களை சிவில் எங்கள் பயன்பாட்டிற்கும் அதே நேரத்தில் ராணுவ பயன்பாட்டிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

இதற்காக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை தளமாகக் கொண்டு இயங்கும் வெளியுறவு பொருளாதார செயல்பாடுகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொழிற்சாலை என்ற கூட்டு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்பு மூலமாக இந்திய நிறுவனங்களுடன் போஸ்ட் பேமெண்ட் முறையில் பண பரிமாற்றம் நடத்தி பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதே நேரத்தில் ஒரு மேற்கத்திய உளவுத்துறை அதிகாரி இந்த நிறுவனம் ரஷ்ய உளவுத்துறையால் உருவாக்கப்பட்ட ஒரு போலி நிறுவனமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமெரிக்காவுடன் அதிகமான நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட நிலையிலும் ரஷ்யா இந்தியாவை முக்கியமான தொழில்நுட்பங்கள் சார்ந்த தனது தேவையை பூர்த்தி செய்யும் ஒரு சிறந்த மாற்று தேர்வாக பார்ப்பதாகவும் கூட்டாக இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் மின்னணு தயாரிப்பு துறையில் செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் ஒரு இந்திய தொழிலதிபர் பேசும் போது ரஷ்யா இந்தியாவில் ஏற்கனவே தயாரிப்பு மையங்களை அமைப்பது குறித்து திட்டமிட்டு அதற்கான முதல் கட்ட பணிகள் துவங்கி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ரஷ்யா எப்படி இந்தியாவுடன் இப்படி ஒரு ரகசிய வர்த்தக பாதையை அமைத்தது என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியுலகத்திற்கு தெரியாத நிலையில் சுங்க இல்லாத தகவல்களின்படி கடந்த 2022 ஆம் ஆண்டிற்கு பிறகு ரஷ்யாவுடனான மிக முக்கியமான மின்னணு அமைப்புகளின் ஏற்றுமதி கணிசமான அளவு அதிகரித்திருப்பதாகவும் இந்த வர்த்தகங்கள் அனைத்தும் இந்திய ரூபாயில் நடைபெற்று இருப்பதாகவும் இன்னோவியோ வென்ஞ்சுர்ஸ் என்ற இந்திய நிறுவனம் சுமார் 4.9 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ட்ரோன்கள் உள்ளிட்ட மின்னணு அமைப்புகளை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இப்படி ஒருபுறம் இந்தியாவிடம் இருந்து ரஷ்யா தனக்கு தேவையான மிக முக்கியமான அதிநவீன கருவிகள் துணை அமைப்புகளை ரகசியமாக பெற்று வரும் நிலையில் உலகறியும் விதமாக இந்தியா ரஷ்யாவிடம் இருந்து மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது இதன் காரணமாக ரஷ்யா மிகப்பெரிய அளவில் இந்திய ரூபாயில் வருமானத்தை ஈட்டி வருகிறது கடந்த 2023 ஆம் ஆண்டில் இரு நாடுகள் இடையேயான வர்த்தகத்தின் மதிப்பு இரண்டு மடங்கு அதிகமாகி சுமார் 65 பில்லியன் டாலர்கள் என்ற அளவை தொட்டுள்ளது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்