ஓய்வு பெற்ற இந்திய அரசு அதிகாரிகள் இஸ்ரேலுக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்வதை தடை செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி !!

முன்னாள் இந்திய குடிமைப் பணி அதிகாரிகள் கல்வியாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு கடந்த செப்டம்பர் நான்காம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன் மற்றும் ஷெரில் டிஸூசா மூலம் தாக்கல் செய்த வழக்கில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர் மேலும் அதில் இந்தியா சர்வதேச சட்டங்களுக்கு ஒப்புக்கொண்டல் நிலையில் இதன் மூலம் அவற்றை மீறி வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது அந்த மனுவில் இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களான பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Munitions India Ltd மற்றும் தனியார் துறை பாதுகாப்பு நிறுவனங்களான Premier Explosives மற்றும் Adani Defence & Aerospace Ltd ஆகிய நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிட்டு இந்தியா பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்துட்டுள்ளதாகவும் அதன்படி போர் குற்றம் புரிவதாக குறிப்பிடப்படும் நாடுகளுக்கு இந்தியா ஆயுதம் ஏற்றுமதி செய்வது அந்த ஒப்பந்தங்களை மீறும் செயல் எனவும்

குறிப்பாக இந்தியா இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து உள்ளதாகவும் ஆகவே இஸ்ரேல் போன்ற போர் குற்றங்களை புரியும் ஒரு நாட்டிற்கு இந்தியா ஆயுதம் ஏற்றுமதி செய்ய முடியாது எனவும் அப்படி இந்தியா ஆயுதம் ஏற்றுமதி செய்தால் அந்த ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தி அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தவும் போர் குற்றங்கள் புரியவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த அந்த மனுவில் மனுதாரர்கள் குறிப்பிட்டு இந்தியா இஸ்ரேலுக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்வதற்கு எதிராக தடை விதிக்க வேண்டும் எனவும் அத்தகைய நிறுவனங்களின் ஏற்றுமதி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் என கோரிக்கை விடுத்திருந்தனர்

இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச் முன்பு வந்த நிலையில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரச்சூட் இந்த மனுவை ஒரு இறையாண்மை மிக்க நாடு மற்றொரு இறையாண்மை மிக்க நாட்டுடன் மேற்கொள்ளும் ராஜாங்க ரீதியான உறவுகள் மற்றும் செயல்பாடுகள் அடிப்படையில் ஆனது எனவும் இத்தகைய உபகாரங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மற்றும் கொள்கைகள் தொடர்பானது எனவும் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் அவர் பேசும் போது நீதிமன்றம் எப்படி அரசுக்கு மற்றொரு நாட்டிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய கூடாது என உத்தரவு பிறப்பிக்க முடியும் எனவும் அத்தகைய அதிகாரம் நீதிமன்றத்திற்கு எங்கிருந்து வழங்கப்பட்டுள்ளது எனவும் மனுதாரர்களுக்காக ஆஜாரான வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன் மற்றும் ஷெரில் டீஸூசா ஆகியோரின் நோக்கி கேள்வி எழுப்பினார் மேலும் அவர் தேசிய நலன்கள் அரசால் பரிசீலிக்கப்பட்டு அதன் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் தான் இவை எனவும் கூறினார்.

தொடர்ந்து அவர் உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் பல்வேறு உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்திருக்கும் சூழலிலும் ரஷ்யா இந்தியாவிற்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் சப்ளை செய்வதை ஒரு உதாரணமாக முன் வைத்தார் ரஷ்யா இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நிலையில் ரஷ்யாவிடம் நீதிமன்றம் இந்தியாவிற்கு கச்சா எண்ணெயை சப்ளை செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க முடியுமா என கேள்வி எழுப்பிய அவர் அப்படி நாம் செய்ய முடியாது மேலும் அது இந்தியாவின் தேசிய நலன்கள் அதாவது இந்தியாவின் எரிசக்தி தேவை சார்ந்தது என குறிப்பிட்டு வெளியுறவு கொள்கைகள் பாதுகாப்புக் கொள்கைகள் அரசால் முடிவெடுக்கப்பட வேண்டிய விஷயங்கள் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கதாகும்