இந்தியாவில் ரயில்களை கவிழ்க்க தனது ஆதரவாளர்களுக்கு கோரிக்கை விடுத்த பாகிஸ்தான் பயங்கரவாதி !!
1 min read

இந்தியாவில் ரயில்களை கவிழ்க்க தனது ஆதரவாளர்களுக்கு கோரிக்கை விடுத்த பாகிஸ்தான் பயங்கரவாதி !!

பாகிஸ்தானை சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதி ஃபர்கத்துல்லா கோரி கடந்த செவ்வாய்க்கிழமை Telegram செயலியில் இந்தியாவில் குறிப்பாக மும்பை மற்றும் தலைநகர் தில்லியில் மற்றும் பிற நகரங்களில் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு ரயில்களை கவிழ்க்குமாறு கோரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள காணொளி வைரலாகி பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியான ஃபர்கத்துல்லா கோரி அந்த காணொளியில் இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை முடக்க வேண்டும் எனவும் அதற்கு எரிபொருள் குழாய்கள் ரயில் பாதைகள் போக்குவரத்து அமைப்புகள் ஆகியவற்றை அளிக்க வேண்டும் எனவும் இதன் மூலம் இந்தியாவில் பெரும் கலவரத்தை அமைதியின்மையை ஸ்திரமற்ற சூழலை ஏற்படுத்த முடியும் எனவும் இந்திய அதிகாரிகள் தங்களது அமைப்பு சார்ந்த சொத்துக்களை சட்டரீதியாக குறிவைத்து வருவதாகவும் அதற்கு இது பதிலடி எனவும் கூறியுள்ளான்.

இந்த காணொளியை தொடர்ந்து இந்திய அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்க உத்திரவிடப்பட்டுள்ளனர் மேலும் நாடு முழுக்க பல்வேறு இடங்களில் ரயில் பாதைகளில் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் மற்றும் ரயில்களை கவுக்கும் விதமான செயல்பாடுகள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை துவங்கியுள்ளனர். கடந்த இரண்டு வார காலமாக இந்த காணொளி பரப்பப்பட்டு வரும் நிலையில் அதனுடைய தாக்கத்தை பற்றிய கவலைகள் இந்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளை பாதித்துள்ளது.

அந்த காணொளியில் ஃபர்கத்துல்லா கோரி இந்து மதத் தலைவர்கள் மற்றும் காவல்துறையை குறி வைத்து ஃபிதாயீன் அதாவது தற்கொலை படைத்தாக்குதல்களை நடத்துவதற்கு அறைகூவல் விடுத்துள்ளான், இது இந்த மிரட்டலின் தாக்கத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இதே போன்று பாகிஸ்தான் உளவுத்துறையின் உதவியோடு இவன் இந்தியாவுக்கு எதிராக போர் செய்யுங்கள் என மற்றொரு காணொளி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஃபர்கத்துல்லா கோரி பல்லாண்டுகளாக இந்திய உளவுத்துறையின் கண்காணிப்பில் இருக்கிறான். இவன் கடந்த 22 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் காந்தி நகரில் அமைந்துள்ள அக்ஷர்தாம் கோயில் குண்டுவெடிப்பு மற்றும் பல்வேறு பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவன் அவன் மேலும் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் என்ற போர்வையில் இந்து இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயல்களை செய்வதற்கு ஊக்குவிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறான் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய அரசு இவனை பயங்கரவாதியாக அறிவித்த நிலையிலும் பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில் இருந்து சுதந்திரமாக செயல்பட்டு வருவது கூடுதல் தகவலாகும்.