பாகிஸ்தான் தரைப்படையின் தலைமை தளபதி ஜெனரல் அசிம் முனீர் சமீபத்தில் அண்ணாற்று ராணுவத்தின் சார்பில் கொண்டாடப்பட்ட பாதுகாப்பு தின விழாவில் நாட்டிற்காக இந்தியாவுடன் கார்கில் உட்பட பல்வேறு போர்களின்போது உயிர்த் தியாகம் செய்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் மரியாதை செலுத்துவதாக பேசியது கடந்த 20 ஆண்டு காலமாக மிகவும் கவனமாக பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் கார்கில் போரில் பாகிஸ்தான் உடைய பங்கை தவிர்த்து வந்த நிலையை தற்போது அதிகாரப்பூர்வமாக உடைத்துள்ளது.
மூத்த ராணுவ அதிகாரிகள் மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினரின் குடும்பங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பாகிஸ்தான் தரைப்படை தலைமை தளபதி பேசும்போது பாகிஸ்தானிய சமூகம் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் அதற்கு என்ன விலை கொடுக்க வேண்டும் என்பதையும் நான்கு உணர்ந்த தைரியம் மிகுந்த சமூகம் எனவும் 1948 1965 1971 1999 கார்கில் போர் என அனைத்து போர்களிலும் பாகிஸ்தான் வீரர்கள் நாட்டிற்காகவும் இஸ்லாத்திற்காகவும் உயிர்த்தியாகம் செய்துள்ளனர் என கூறினார்.
கடந்த 20 ஆண்டு காலமாக பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் கார்கில் போரில் தங்களது ராணுவத்திற்கு பங்கு இல்லை எனவும் காஷ்மீர் பயங்கரவாதிகள் அதாவது முஜாஹிதீன்கள் என்பவர்கள் தான் இந்தப் போரில் பங்கு பெற்றதாகவும் தொடர்ந்து கூறிவந்தது இந்தியா 1999 ஆம் ஆண்டு முதலே பாகிஸ்தான் ராணுவம் தான் இந்த போரை நேரடியாக நடத்தியதாக குற்றம் சாட்டி வந்த நிலை இதுவரை அதை பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளாமல் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதியின் இந்த பேச்சு அந்த நிலைபாட்டை அடியோடு மாற்றி உள்ளது.
இதில் மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால் கார்கில் போரின் போது வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் உடலையும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் உடல்களையும் எல்லையில் இருதரப்பு அதிகாரிகள் பற்றி சொல்லும் நிகழ்வின் போது இந்திய வீரர்களின் சிதைக்கப்பட்ட உடல்களை பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைத்த அதே நேரத்தில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் ஒப்படைக்கும் போது அவர்கள் இவர்கள் முஜாஹிதீன்கள் என்றும் இவர்கள் எங்கள் ராணுவ வீரர்கள் அல்ல எனவும் அவர்கள் உடலை பெற மறுத்து சென்றதும் அப்படி பாகிஸ்தான் ராணுவத்தினரால் பெற மறுக்கப்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரின் உடல்களை இந்திய ராணுவமே முழு ராணுவ மரியாதையோடு முறையான இஸ்லாமிய மத சடங்குகள் படி அடக்கம் செய்ததும் அப்படி பாகிஸ்தான் ராணுவமே தனது வீரர்களை நிராகரித்த நிலையில் தற்போது பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அவர்களின் தியாகத்தை அங்கீகரித்து மரியாதை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல இந்திய ராணுவம் கடந்த காலங்களில் கார்கில் போர் நடந்த சமயத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி ஆக இருந்த ஜெனரல் பர்வேஸ் மூஷரஃப் சீனத் தலைநகர் பெய்ஜிங் சென்றிருந்தார் அங்கிருந்து ராவில்பிண்டியில் அமைந்துள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில் போர் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு கொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவ பணியாளர்களின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் முகமது அசிஸ் உடன் 1999 மே மாதம் 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இந்தியாவின் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் படைகளின் ஊடுருவல் பற்றி மேற்கொண்ட உரையாடலை இடைமறித்து பதிவு செய்து ஆதாரமாக மேற்கோள் காட்டி குற்றம் சாட்டி வந்ததும் கூடுதல் தகவலாகும்.
1999 கார்கில் போரில் இந்தியா பாகிஸ்தான் படைகளை வீழ்த்தி இந்திய எல்லையில் இருந்து விரட்டி அடித்து பாகிஸ்தானுக்கு மிகவும் மோசமான சேதத்தை ஏற்படுத்தி பின்னர் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் தலையீடு காரணமாக அன்றைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கார்கில் இருந்து பாகிஸ்தான் படைகளை பின்வாங்க உத்தரவிட்டதும் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் உறவுகள் காஷ்மீர் மற்றும் எல்லை பிரச்சினைகள் தொடர்பான விவகாரங்கள் காரணமாகவும் பயங்கரவாத பிரச்சனைகள் காரணமாகவும் மோசமான நிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.