இந்தியாவிடம் இருந்து தாக்குதல்கள் ஹெலிகாப்டர்களை வாங்கும் முதல் நாடு நைஜீரியா விரைவில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்து !!

பைனான்சியல் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின் படி மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா விரைவில் இந்தியாவிடம் இருந்து உள்நாட்டிலேயே அதாவது இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட பிரச்சன்த் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியா தனது நாட்டு ராணுவத்தின் திறன்களை அதிகரிக்கும் விதமாக நவீன மயமாக்கல் மற்றும் புதிய ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக தான் நைஜீரியா ராணுவத்தின் வான் சண்டை திறன்களை அதிகரிக்கும் விதமாக தாக்குதல் ஹெலிகாப்டர்களை படையில் இணைக்க திட்டமிட்டுள்ளது

அந்த வகையில் நைஜீரிய தரைப்படை 12 இரட்டை எஞ்சின் தாக்குதல் ஹெலிகாப்டர்களை தனது படையில் சேர்க்க விரும்பி அதற்கான பணிகளை துவங்கியது இதைத்தொடர்ந்து ஐரோப்பாவின் ஏர்பஸ் Airbus, இந்தியாவின் HAL Hindustan Aeronautics limited , துருக்கியின் TAI Turkish Aerospace Industry போன்ற சர்வதேச தாக்குதல் ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்புகளை பரிசீலித்து வருகிறது.

இதில் துருக்கியின் துருக்கி வான்வெளி தொழிற்சாலை தயாரிக்கும் T – 129 ATAK ஹெலிகாப்டர், Airbus ஏர்பஸ் நிறுவனத்தின் ஸ்பெயின் பிரிவின் தயாரிப்பான Eurocopter Tiger HAD (ஸ்பெயின் விமானப்படைக்கான ரகம்) ஆகியவற்றுடன் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் LCH Light Combat Helicopter PRACHAND இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் பிரச்சந்த் ஆகியவை போட்டியில் உள்ளன.

இதில் துருக்கியின் ஹெலிகாப்டர் இத்தாலிய நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் Augusta Westland இத்தாலிய தரைப்படைக்காக தயாரித்த A – 129 Mangusta ஏ 129 மங்குஸ்தா தாக்குதல் ஹெலிகாப்டரை அடிப்படையாகக் கொண்டு துருக்கி வான்வழி தொழிற்சாலையும் இத்தாலிய நிறுவனமான லியனாடோ எஸ் பி ஏ Leanardo S.p.a ஆகியவை கூட்டாக இணைந்து தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்த அடிப்படையில் துருக்கி படைகளுக்காக தயாரித்தது தான A-129 ATAK ரகத் தாக்குதல ஹெலிகாப்டர்களாகும் இந்த ஹெலிகாப்டரில் துருக்கி தயாரிப்பு ஏவியானிக்ஸ் ஆயுதங்கள் மேம்படுத்தப்பட்ட எஞ்சின் மற்றும் விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த மூன்று ஹெலிகாப்டர்களும் ஒவ்வொரு விதமாக சிறப்பு வாய்ந்தவை ஆகும் ஒவ்வொரு ஹெலிகாப்டருக்கும் ஒவ்வொரு விதமான தனித்துவம் உள்ளது அந்த வகையில் இந்தியாவின் பிரச்சந்த் இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர் அதனுடைய பன்முக திறன்கள் மற்றும் நிரூபிக்கப்பட்ட செயல்திறன் போன்ற சிறப்புகளுக்காக அறியப்படுகிறது அந்த வகையில் நைஜீரியர் தரைப்படை இந்தியாவின் பிரச்சந்த் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் மீது அதீத ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நைஜீரிய தரைப்படைக்கு 12 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் தேவைப்படும் நிலையில் முதல் கட்டமாக இந்தியாவிடம் இருந்து நான்கு பிரெச்சந்த் இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை மிகக் குறைந்த வட்டியில் பெறுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இது தவிர ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் நைஜீரிய இ
விமானிகளுக்கான பயிற்சிகளுக்கும் பொறுப்பேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது,

ஏற்கனவே நைஜீரிய விமானிகள் சிலர் இந்தியா சொந்தமாக தயாரித்த ALH Advanced Light Helicopter Dhruv அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர் த்ரூவ் ஐ இயக்குவதற்கான பயிற்சிகளை வெற்றிகரமாக இந்தியாவில் நிறைவு செய்துள்ளதாகவும் ஆகவே இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் பிரச்சந்தை இயக்குவதற்கான பயிற்சி பெறுவது மிக எளிதாகும் அதற்குக் காரணம் துருவ் மற்றும் பிரசந்த் ஆகிய இரு ஹெலிகாப்டர்களின் கட்டுப்பாட்டு அமைப்புகளும் ஏறத்தாழ ஒரே போன்று இருப்பது தான் எனவும் கூறப்படுகிறது

இந்த இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது குறிப்பாக ஸ்டெல்த் தொழில்நுட்பம், கவச பாதுகாப்பு மிக வலுவான தரையிறங்கும் சக்கர அமைப்பு இஸ்ரேலிய ஏவியானிக்ஸ் அமைப்பு ஸ்வீடன் தயாரிப்பு ரேடார் அமைப்பு மற்றும் லேசர் எச்சரிக்கை அமைப்பு போன்ற அமைப்புகள் உள்ளன மேலும் இந்த ஹெலிகாப்டரில் கடல் மட்டத்திலும் சரி அல்லது இமயமலை தொடர்பு கொண்ட மிக உயர்ந்த பிரதேசங்களிலும் சரி காடுகள் சமவெளிகள் மிகுந்த குளிர் பிரதேசங்கள் பாலைவனப் பகுதிகள் மற்றும் பல்வேறு வகையான தட்பவெட்ப சூழல்கள் மற்றும் இரவிலும் பகலிலும் இயங்கும் திறன்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது

இந்த ஹெலிகாப்டர்களால் எதிரிகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் தாழ்வாக மற்றும் மெதுவாக பறக்கும் வானூர்திகளையும் ஆளில்லா சிறிய ரக டிரோண்களையும் தாக்கிய அளிக்க முடியும் மேலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் எதிரி கவச வாகன படை அழிப்பு நடவடிக்கைகள் போர்க்களத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும் இந்த ஹெலிகாப்டரில் துருவாஸ்த்திரா டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ஹெலினா தரை தாக்குதல் ஏவுகணைகள் மற்றும் 70 மில்லி மீட்டர் ராக்கெட்டுகள் மற்றும் முன் பகுதியில் ஒரு சுழன்று தாக்கும் கனரக இயந்திர துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் உள்ளன.

மற்ற ஹெலிகாப்டர்களைப் போலவே இதில் இரண்டு விமானிகள் இருப்பர் அதேபோல மற்ற இரண்டு ஹெலிகாப்டர்களை ஒப்பிடுகையில் இதனுடைய வேகம் அதிகமாகும் அதாவது மணிக்கு 330 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது மேலும் மற்ற இரண்டு ஹெலிகாப்டர்களை ஒப்பிடுகையில் மிக அதிக உயரம் அதாவது கடல் மட்டத்திலிருந்து சுமார் 6.5 கிலோமீட்டர் உயரம் வரை பறக்கும் திறன் கொண்டதாகும் அதே நேரத்தில் மற்ற இரண்டு ஹெலிகாப்டர்களை ஒப்பிடுகையில் பறக்கும் தொலைவு இதற்கு தான் குறைவாக உள்ளது அதாவது 500 கிலோ மீட்டர் மட்டுமே ஆகும் இவை எல்லாவற்றையும் விட இந்த ஹெலிகாப்டரின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் மற்ற இரண்டு ஹெலிகாப்டர்களை ஒப்பிடுகையில் மிகவும் விலை வலியானது இந்திய ஹெலிகாப்டர் தான் இதனுடைய விலை தல ஒரு ஹெலிகாப்டருக்கு 31 மில்லியன் டாலர்கள் மட்டுமே ஆகும் துருக்கி ஹெலிகாப்டரின் விலை தலா 50 மில்லியன் டாலர்கள் என்பதும் ஐரோப்பிய ஹெலிகாப்டரின் விலை தல 100 மில்லியன் டாலர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.