மொராக்கோ நாடு தனது முப்படைகளையும் நவீனப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதன் ஒரு பகுதியாக மொராக்கோ தரைப்படையின் திறன் மேம்பாட்டு திட்டங்களின் ஒரு பகுதியாக தற்போது இந்தியாவின் WhAP – Wheeled Armoured Platfrom எனப்படும் சக்கரங்கள் கொண்ட கவச வாகனத்தின் தொழில்நுட்பத்தை இந்தியாவின் டாட்டா குழுமத்திலும் இருந்து பெற்று மொராக்காவிலேயே தொழிற்சாலை அமைத்து தயாரித்து மொரோக்கோ ராணுவத்தில் சேர்க்கவும் ஏற்றுமதி செய்யவும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த WhAP – Wheeled Armoured Platform இந்தியாவில் முன்னணி ஆயுத வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO – Defence Research & Development Organisation பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு பின்னர் டாட்டா குழுமத்தின் ஒரு பிரிவான TASL – TATA Advanced Systems Limited நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இந்திய ராணுவத்திற்கும் துணை ராணுவ படைகளுக்கும் சப்ளை செய்யப்பட்டு வரும் தளவாடம் ஆகும்.
இந்த வாகனம் நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் திறன் கொண்டதாகும் மற்றும் பாலைவனம் உயர்ந்த மலைப் பிரதேசங்கள் மற்றும் கரடு முரடான நிலப்பரப்பிலும் வீரர்களை சுமந்து கொண்டு பயணிக்கும் கொண்டதாகும் மேலும் இது ஒரு 8×8 வாகனம் ஆகும், மேலும் இந்த வாகனத்தின் மேல் பகுதியில் ஒரு கனரக முப்பது மில்லி மீட்டர் தானியங்கி துப்பாக்கியும் உள்ளது இது தவிர இடைத்தர இயந்திர துப்பாக்கி உள்ளது வீரர்களை போர்க்களம் முன்னணிக்கு கொண்டு சென்று நேரடியாக சேர்ப்பது மற்றும் அந்த வீரர்கள் தாக்குதல் நடத்தும் போது அவர்களுக்கு இந்த வாகனத்தில் உள்ள ஆயுதங்களை கொண்டு எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி உதவி புரிவது போன்றவை இந்த வாகனத்தின் பணிகள் ஆகும்.
இந்தியா மற்றும் மொராக்கோ இடையேயான இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதியில் மற்றொரு மைல் கல்லாக அமைந்துள்ளது அதாவது இந்திய அரசு ஆயுத ஏற்று மதியை பல மடங்காக அதிகரிக்க எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு கிடைத்துள்ள பலனாக இது பார்க்கப்படுகிறது இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் மொராக்கோ இடையேயான பாதுகாப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தையும் குறிப்பிட்டு காண்பிக்கிறது இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்திய ஆயுதங்களின் மதிப்பு சர்வதேச ஆயுத சந்தையில் மேலும் உயரும் என்பது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலமாக மொராக்கோ ஆயுத உற்பத்தியில் தன்னிறைவடைவதற்கு இது மேலும் ஒரு படியாக அமையும், இந்த முதலீட்டின் மூலம் மொராக்கோவில் 90 நேரடி வேலை வாய்ப்புகளும் 250 மறைமுக வேலை வாய்ப்புகளும் உருவாகும் எனவும் முதல் கட்டமாக இந்த வாகனத்தில் 35 சதவிகிதம் அளவுக்கு மொராக்கோ தயாரிப்பு பாகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பொருத்தப்படும் பின்னர் இது 50 சதவீதமாக உயர்த்தப்படும் ஒப்பந்தம் கையெழுத்தான அதிலிருந்து 36 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்பது மிக முக்கியமான நிபந்தனையாகும்.
பாதுகாப்பு சுங்க இலாகா நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்ட இந்த ஒப்பந்தம் இரு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு உள்துறை நிதித்துறை தொழில்துறை மற்றும் மொராக்கோ ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் மொராக்கோ முதலீடு மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு முகமை ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் கையெழுத்தானது இந்த ஒப்பந்தம் மூலமாக இந்தியாவிற்கு ஆப்பிரிக்கா பிராந்தியத்திற்கு ஆயுத ஏற்றுமதி செய்வதற்கான மற்றொரு தயாரிப்பு மையமாக மொராக்கோ மாறும் என்பதும் இது மொராக்கோவின் தேவைகள் போக சர்வதேச ஏற்றுமதிக்கும் வித்திடும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்