கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான பாதுகாப்பு பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளன இந்த பேச்சுவார்த்தைகளில் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் சூழல் குறித்தும் இந்தியா மாலத்தீவு இடையேயான பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை விரைந்து முடிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகும் அதில் நல்ல முடிவுகள் எட்டப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாலத்தீவு நாட்டின் அதிபராக சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட மொஹமது மூய்ஸூ பொறுப்பேற்று கொண்ட பிறகு முதல் முறையாக இந்தியாவில் இருந்து அந்நாட்டிற்கு உயர்மட்ட அளவில் சென்ற முதல் இந்திய தலைவர் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மூன்று நாள் சுற்றுப்பயணமாக சென்று வந்த பிறகு ஒரு மாதம் ஆன நிலையில்
தலைநகர் தில்லியில் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன இதில் இந்திய தரப்பு சார்பில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சக செயலாளர் திரு கிரிதர் அர்மானே மற்றும் மாலத்தீவு சார்பில் அநந்நாட்டு ராணுவ தலைமை தளபதி ஜெனரல் இப்ராஹிம் ஹில்மி ஆகியோர் பங்கு பெற்றனர் இவர்களுடன் இருதரப்பு அதிகாரிகளும் இந்த பேச்சு வார்த்தைகளில் பங்கு பெற்றனர்.
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டார பகுதியில் படி ஐந்தாவது முறையாக நடைபெறும் இந்தியா மாலத்தீவு இடையேயான இந்த இரு தரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளில் கடுமையான அரசியல் சூழல்கள் இருதரப்பிற்கும் இடையே நிலவும் நிலையில் முதல்முறையாக இருதரப்பு பாதுகாப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் மேலும் ராணுவ திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது மற்றும் முடிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்தியா மாலத்தீவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் பொதுவாக இரு தரப்பிற்கும் இடையே விருப்பமுள்ள வேறு பல திறன் மேம்பாட்டு மற்றும் உயர்மட்ட பரிமாற்ற திட்டங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியை பொருத்தவரையில் இருப்பதிலேயே மிகவும் பெரிய மிகவும் சக்தி வாய்ந்த நாடான இந்தியாவிற்கு மிக அருகாமையில் மாலத்தீவு அமைந்துள்ளது மேலும் மாலத்தீவு இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது இதற்கு முந்தைய மாலத்தீவு தலைவரின் ஆட்சி காலத்தில் இந்தியா மாலத்தீவு உறவுகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டது மேலும் பல்வேறு மிக முக்கியமான இருதரப்பு திட்டங்கள் கையெழுத்தாகின என்பது கூடுதல் தகவலாகும்.