அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள கலாத்தேயா வளைகுடாவில் இந்திய அரசு சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மிகப்பிரம்மாண்டமான சர்வதேச கண்டெய்னர் முனையம் அடங்கிய பிரம்மாண்ட துறைமுகத்தை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து அதற்கான பணிகளை துவங்கி உள்ளது. இந்திய அரசின் கப்பல் துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இந்த துறைமுகம் அமைக்கப்பட்டு இயங்கும் எனவும் தனியார் பொதுத்துறை பங்களிப்பு மற்றும் மத்திய அரசு நிதியுடன் இது அமைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் தற்போது 13 பெரிய துறைமுகங்கள் உள்ளனர், இந்தியாவின் மேற்கு கடற்கரையில் குஜராத்தின் கான்ட்லா, மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகங்கள், கர்நாடகாவின் மங்களூரு, கோவாவின் மர்மகோவா மற்றும் கேரளாவின் கொச்சி ஆகியவையும்.
இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் தமிழகத்தின் தூத்துக்குடி சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள், ஆந்திராவில் விசாகப்பட்டினம், ஒடிசாவின் பாரதீப் மற்றும் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா ஆகிய துறைமுகங்களும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் போர்ட் பிளேயர் துறைமுகமும் அமைந்துள்ளன இந்த வரிசையில் தான் 14-வது துறைமுகமாக கலாத்தேயா வளைகுடா துறைமுகம் அமைய உள்ளது.
இந்த 13 துறைமுகங்களும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிலையில் இவை தவிர நாடு முழுவதும் கடலோர மாநிலங்களில் சுமார் 200 சிறிய துறைமுகங்கள் உள்ளன மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் இந்த துறைமுகங்களில் 65 துறைமுகங்கள் சரக்குகளை கையாளுகின்றன மீதமுள்ள 135 துறைமுகங்களும் மீன்பிடி மற்றும் சிறிய பயணிகள் போக்குவரத்து துறைமுகங்களாகும்.
இது தவிர 16 பெரிய தனியார் துறைக்கு சொந்தமான துறைமுகங்களும் இந்தியாவில் உள்ள அவையாவன, அதானி குடும்பத்திற்கு சொந்தமான முந்திரா காரைக்கால் கிருஷ்ணபட்டினம் ஹசீரா தீகி தம்ரா கங்காபுரம் காட்டுப்பள்ளி டியுனா மற்றும் கேரள அரசுடன் இணைந்து நடத்தும் விழிஞ்ஞம் துறைமுகங்கள், JSW குடும்பத்திற்கு சொந்தமான ஜெய்காட் மற்றும் தரம்தார் துறைமுகங்கள், ஷபூர்ஜி பல்லோன்ஜி குடும்பத்திற்கு சொந்தமான கோபால்பூர் துறைமுகம், அரவிந்தோ குழுமத்திற்கு சொந்தமான காக்கிநாடா துறைமுகம் மற்றும் ஏ பி எம் டெர்மினல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பிபாவாவ் துறைமுகங்கள் ஆகியவை உள்ளன.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இந்த கலாத்திய வளைகுடா துறைமுகம் அமைக்கப்படும்போது உலகின் பெரும்பகுதி வர்த்தகம் இதற்கு கீழே உள்ள மலாக்கா ஜனசந்தி வழியாக பயணிக்கும் நிலையில் இந்தியாவுக்கு வெளியே கையாளப்படும் பெரும்பாலான சரக்குகள் இந்த சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தின் வாயிலாக கையாளப்படும் இதன் ஒட்டுமொத்த கையாளும் திறன் சுமார் 16,000 மில்லியன் 20 அடி கண்டெய்னர்கள் ஆகும் முதல் கட்டமாக 2028 ஆம் ஆண்டு 4 மில்லியன் 20 அடி கண்டெய்னர்கள் கையாளும் திறனுடன் இந்த துறைமுகம் திறக்கப்படும் பின்னர் 2058 ஆம் ஆண்டில் இதன் முழு கொள்ளளவு உடன் இது இயங்கும் நிலையை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடவே கடல் சார் அம்ரித் கால் தொலைநோக்கு திட்டம் 2047ன் படி ஒரு ஆண்டிற்கு சுமார் 300 மில்லியன் டண் சரக்குகளை கையாளக்கூடிய நான்கு துறைமுக கூட்டமைப்புகளையும் மேலும் தலா 500 மில்லியன் டன் சரக்குகளை கையாளக்கூடிய இரண்டு துறைமுகங்களையும் உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் வாத்வான் , ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணைய கூட்டமைப்பு, பாரதீப் மற்றும் தீனதயாள் ஆகிய நான்கு துறைமுகங்களை உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது இந்த நான்கு தான் மேலே குறிப்பிட்ட ஒரு ஆண்டிற்கு சுமார் 300 மில்லியன் டன் சரக்குகளை கையாளக்கூடிய மெகா துறைமுகங்கள் என்பது கூடுதல் தகவல் ஆகும்.