ராணுவ ரயிலின் பாதையில் வெடிப்பைத் தூண்டும் கருவிகள் வைத்த வழக்கில் குற்றவாளிக்கு ஏழு நாள் விசாரணை காவல் !!
1 min read

ராணுவ ரயிலின் பாதையில் வெடிப்பைத் தூண்டும் கருவிகள் வைத்த வழக்கில் குற்றவாளிக்கு ஏழு நாள் விசாரணை காவல் !!

கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் சாக்பாட்டா ரயில் நிலையம் அருகே ராணுவ சிறப்பு ரயில் சென்ற பாதையில் 10 வெடிப்பைத் தூண்டும் கருவிகள் அதாவது டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியதை நாம் அனைவரும் அறிவோம் இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு தற்போது ஏழு நாள் விசாரணை காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது அதன்படி ரயில்வே பாதுகாப்பு படை குற்றவாளியை ஏழு நாள் காவலில் வைத்து விசாரிக்க உள்ளது.

கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் புசாவால் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட நெப்பா நகர் மற்றும் காண்ட்வா ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சாக்பாட்டா ரயில் நிலையம் அருகே ராணுவ வீரர்கள் பயணித்த சிறப்பு ரயில் சென்ற பாதையில் 10 வெடிப்பைத் தூண்டும் கருவிகள் வெடித்தன இதனை கண்ட ரயில் ஓட்டுநர் தகுந்த நேரத்தில் ரயிலை நிறுத்தினார் உடனடியாக சம்பவ இடத்திற்கு ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே அதிகாரிகள் வந்த நிலையில் ஆய்வுக்கு பிறகு எந்த சேதமும் இல்லை என்று உறுதியான பிறகு ரயில் பயணிக்க அனுமதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை விசாரணை துவங்கிய நிலையில் 38 வயதான சபீர் என்ற ரயில்வே ஊழியரை கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி கைது செய்தது தொடர்ந்து செப்டம்பர் 23ஆம் தேதி மூன்று நாள் விசாரணை காவலில் வைத்து விசாரிக்க ரயில்வே பாதுகாப்பு படைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது சபீர் மீது ரயில்வே சொத்துக்களின் சட்டவிரோத உடமை சட்டத்தின் பிரிவு மூன்று ஏவின் கீழ் திருடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இது தொடர்பாக காண்ட்வா ரயில் நிலைய ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் சஞ்சீவ் குமார் ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில் கடந்த புதன்கிழமை அன்று சபீரை ரயில்வே மஜ்சுரேட் முன்பு ஆஜர் படுத்தியதாகவும் அப்போது ரயில்வே மாஜிஸ்திரேட் மேலும் ஏழு நாள் விசாரணை காவலில் வைத்து சபீரை விசாரிக்க ரயில்வே பாதுகாப்பு படைக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்ததாகவும் தெரிவித்தார் மேலும் அவர் பேசும் போது சபீர் எதற்காக வேறு ரயில்கள் செல்லும் பாதையை குறி வைக்காமல் ராணுவ அறையில் சென்ற பாதையை குறி வைத்தார் என்பதை விசாரணையில் கண்டுபிடிக்க உள்ளதாகவும் கூறினார்.

ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் இது பற்றி கூறும் போது இந்த டெட்டனேட்டர்கள் பார்க்கவே முடியாத கடுமையான பனிமூட்டம் போன்ற சூழல்களில் ரயில் ஓட்டுநர்களுக்கு சிக்னல் அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் வெடி மருந்து இல்லாத வெடிக்கும் கருவிகள் எனவும் இதைத்தான் சபீர் திருடி ரயில் தண்டவாளத்தில் வைத்து வெடிக்க செய்ததாகவும் கூறுகின்றனர் ரயில்வே அதிகாரிகள் வேறு சிலர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது சபீர் குடிப்பழக்கத்திற்கு மிகவும் அடிமையான நபர் எனவும் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே பாதுகாப்பு படை இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்தை தேசிய புலனாய்வு முகமை மற்றும் இந்திய உள்நாட்டு உளவுத்துறையான இன்டெலிஜென்ஸ் பியூரூ மற்றும் மத்திய பிரதேச காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது மேலும் விசாரணை என்பது சபீர் தனக்கு தொடர்ச்சியாக விடுமுறை மறுக்கப்பட்ட காரணத்தால் தான் தண்டவாளத்தில் பிடிக்கும் கருவிகளை வைத்ததாக கூறியுள்ளதாக கூறப்படுவது கூடுதல் தகவலாகும்