ஜம்மு காஷ்மீரில் கிராம பாதுகாப்பு குழுக்களுக்கு இயந்திர துப்பாக்கிகள் !!
இந்திய உள்துறை அமைச்சகம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு பிராந்தியத்தில் அமைந்துள்ள ஜம்மு கத்துவா ரஜோரி பூஞ்ச் மற்றும் ரியாசி ஆகிய மாவட்டங்களில் உள்ள VDG – Village defence guards அதாவது கிராம பாதுகாப்பு குழுக்களுக்கு இயந்திர துப்பாக்கிகள் வழங்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது இதன் காரணமாக அந்த குழுக்களின் திறன்கள் அதிகரித்து இருப்பதோடு மட்டுமின்றி பாகிஸ்தான் உடனான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் உட்பகுதிகளில் திறம்பட பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்கு பேரூதவியாக இது அமையும் எனக் கூறப்படுகிறது.
இந்த கிராம பாதுகாப்பு குழுக்கள் மிக நீண்ட நாட்களாகவே இரண்டாம் உலகப் போர் காலத்து .303 ரக துப்பாக்கிகளை தான் பயன்படுத்தி வந்தன. இந்த துப்பாக்கிகளை மாற்றி விட்டு இயந்திர துப்பாக்கிகளை தங்களுக்கு அளிக்க வேண்டும் என இவர்கள் வைத்திருந்த நீண்ட நாள் கோரிக்கை தற்போது மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது அந்த வகையில் இதுவரை சுமார் 200 SLR – Self loading rifle துப்பாக்கிகளை அந்த பகுதி முழுவதும் அரசு வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை கிராம பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்களுக்கு மேலே குறிப்பிட்ட SLR பிறகு எந்திரத்துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை அளித்து வருகின்றனர். வழக்கமாக பாகிஸ்தான் உடனான எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் கிராமப்புறங்களில் ராணுவம் துணை ராணுவம் காவல்துறையினர் ஆகியோருடன் பாதுகாப்பு பணிகள் ஈடுபடும் இந்த கிராம பாதுகாப்பு குழுவினர் தற்போது தங்களுக்கு கிடைத்துள்ள இயந்திரத்துப்பாக்கிகள் மற்றும் பயிற்சி காரணமாக உற்சாகமடைந்துள்ளனர்.
அரசின் இந்த முடிவு காரணமாக மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்துள்ள கிராம பாதுகாப்பு குழுவினர் தற்போது ராணுவம் மற்றும் இதர பாதுகாப்பு படையுடன் இணைந்து ரோந்து மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர் இது அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் வலு சேர்த்துள்ளது.
தங்களது கிராமங்கள் மற்றும் தாங்கள் வாழும் சமுதாயங்களை பாதுகாக்கும் பணியில் மிகுந்த நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் தற்போது ஈடுபட்டு வரும் இவர்கள் தங்களுக்கான ஊதியத்தை அதிகரித்து தரும்படியும் தற்போது கோரிக்கை முன்வைத்துள்ளனர் இதற்கு தாங்கள் செய்யும் பணியின் தன்மை சூழல் மற்றும் அது சார்ந்த ஆபத்துக்கள் மற்றும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தங்கள் குடும்பங்களுக்கு ஏற்படும் இழப்பு ஆகியவற்றை காரணமாக முன் வைக்கின்றனர் என்பது கூடுதல் தகவலாகும்.