ஹிஸ்புல்லாவை மரண அடி அடித்த இஸ்ரேல் ஸ்தம்பித்த லெபனான் !!

நேற்று காலை லெபனானில் இருந்து இஸ்ரேலுக்கு எதிராக இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா இஸ்ரேலிய உளவு அமைப்பால் மிகப்பெரிய பயங்கரமான தாக்குதலை சந்தித்துள்ளது இந்த தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டதாகவும் ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 400 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் 500 பேரின் பார்வை முற்றிலும் பறிபோய் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மொபைல் போன்கள் போன்றவற்றை தங்களது தகவல் தொடர்பிற்காக பயன்படுத்துவதை நிறுத்தியது இதற்கு இவற்றை எளிதாக கண்காணிக்க முடியும் என்ற காரணத்தை அந்த இயக்கம் முன் வைத்தது தொடர்ந்து 90களில் பிரபலமாக இருந்த மொபைல் ஃபோன்களுக்கு முன்பாக தகவல் தொடர்பில் புரட்சி ஏற்படுத்திய பேஜர் அமைப்புகளை ஆயிரக்கணக்கில் ஹிஸ்புல்லா அமைப்பு தனது இயக்கத்தின் உறுப்பினர்களின் தகவல் தொடர்பு வசதிகளுக்காக வாங்கி வழங்கியது இந்த பேஜர் கருவிகளை கொண்டு சிறிய குறுஞ்செய்திகள் அனுப்பி தகவல் பரிமாறிக் கொள்ள முடியும்.

கடந்த சில மாதங்களாக இஸ்ரேலின் வடக்கு எல்லையில் ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கத்தினர் ராக்கெட்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி வந்தனர் இதில் பல இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர் இதைத் தொடர்ந்து அவ்வப்போது இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வந்தது இப்படி இருதரப்பிற்குமான பதட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வந்த நிலையில் நேற்று காலை யாரும் எதிர்பார்க்காத யாரும் கணிக்க முடியாத விதமான தாக்குதலை இஸ்ரேல் லெபனானில் அரங்கேற்றியது, இந்த தாக்குதலின் தன்மை அளவு மற்றும் அது ஏற்படுத்திய பாதிப்பு அதற்கு ஆன செலவு போன்றவை ஒட்டுமொத்த உலக நாடுகளையும் மிரள வைத்துள்ளது.

மேலே குறிப்பிட்ட பேஜர் அமைப்புகளை ஹிஸ்புல்லா அமைப்பு வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்தபோது அதை எப்படியோ அறிந்து கொண்ட இஸ்ரேலியா உளவு அமைப்பான மொசாத் அந்த பேஜர் அமைப்புகளை இடையே எங்கேயோ ரகசியமான முறையில் கைப்பற்றி அல்லது இஸ்ரேலே அந்த ஆர்டரைப் பெற்றுக் கொண்டு அந்த பேஜர் அமைப்புகளில் குறிப்பிட்ட அளவிலான பிளாஸ்டிக் வெடி மருந்துகள் அல்லது “சி 4” அல்லது “பி டி இ என்” போன்ற வெடி மருந்துகளை உள்ளே வைத்து பத்திரமாக ஹிஸ்புல்லாவை ஏமாற்றி விற்பனை செய்துள்ளது இவற்றை ஹிஸ்புல்லா இயக்கத்தின் உறுப்பினர்கள் தங்களது தகவல் தொடர்பு வசதிக்காக பயன்படுத்தி வந்தனர்.

பெரும்பாலும் இந்த பேஜர் அமைப்புகளை இடுப்பு பகுதியில் நமது பெல்ட்டில் வைத்திருப்பர் அப்படித்தான் அது வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில் நேற்று இஸ்ரேலிய உளவு அமைப்பான மோசாத் ஏதோ ஒரு அதிநவீன கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரே நேரத்தில் இஸ்ரேலில் இருந்து கொண்டே அனைத்து பேஜர் அமைப்புகளையும் வெடிக்க வைத்துள்ளது அந்த நேரம் லெபனான் முழுவதும் சாலைகளிலும் கடைகளிலும் என பரவலாக ஆங்காங்கே இருந்த ஆயிரக்கணக்கான ஹிஸ்புல்லா இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு அவர்களின் பேஜர் அமைப்புகளுக்கு ஒரு குறுஞ்செய்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தங்களது இயக்கத்தின் மூத்த தலைவர்களிடமிருந்து ஏதோ தகவல் வந்துள்ளது எனக் கருதி ஹிஸ்புல்லா இயக்கத்தின் உறுப்பினர்கள் தங்களது பேஜர் அமைப்புகளை என்ன தகவல் வந்திருக்கிறது என பார்த்தபோது அனைத்து பேஜர் அமைப்புகளும் வெடித்து சிதற ஒட்டுமொத்த லெபநானும் ஸ்தம்பித்து போய்விட்டது லெபனான் முழுவதும் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து உள்ளன, டயர் நகரத்தில் மட்டும் ஒரே மருத்துவமனையில் ஒரேடியாக 400க்கும் அதிகமான படுகாயம் அடைந்த ஹிஸ்புல்லா இயக்கத்தினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த தாக்குதலால் சுமார் 10,452 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட லெபனான் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இந்த வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பு தனது உறுப்பினர்களுக்கு பேஜர் அமைப்புகளை பயன்படுத்துவதை நிறுத்துமாறு அறிவிக்கையை பிறப்பித்துள்ளது மேலும் இந்த தாக்குதலுக்கு நிச்சயமாக இஸ்ரேலை பழிவாங்கும் எனவும் மிரட்டல் விடுத்துள்ளது அதே நேரத்தில் லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டி மற்றும் லெபனான் நாட்டின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜியாத் மகாரி ஆகியோர் இஸ்ரேல் தான் இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பு எனவும் இது லெபனானின் இறையாண்மையை பாதிக்கும் மிக மிக மோசமான குற்றச் செயல் எனவும் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன் வைத்துள்ளனர்.

இதற்கிடையே இந்த தாக்குதல்கள் பற்றி அமெரிக்காவுக்கு தெரியும் எனவும் மேலும் ஒரு சில தகவல்கள் இஸ்ரேலின் இந்த தாக்குதலில் அமெரிக்காவுக்கு பங்கு உண்டு எனவும் பரவி வந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் ஊடகவியலாளர்களை சந்தித்து இதுகுறித்து பேசும்போது அமெரிக்காவுக்கு இந்த தாக்குதல்களில் எவ்வித பங்கு இல்லை எனவும் மேலும் இந்த தாக்குதல்கள் பற்றிய எந்தவிதமான தகவலும் தங்களுக்கு முன்கூட்டியே தெரியாது எனவும் உறுதி அளிப்பதாகவும் தற்போதைய சூழலில் இது பற்றிய தகவல்களை அமெரிக்க அரசு திரட்டிக் கொண்டிருப்பதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

லெபனானில் இஸ்ரேல் நடத்தியுள்ள இந்த தாக்குதல் மிகவும் கவனிக்கப்பட தக்கதாகும் காரணம் என்னவென்றால் ஒரு மிகப்பெரிய அளவிலான போர் போன்ற ராணுவ நடவடிக்கை நடத்தாமல் வான்வழி தாக்குதல் நடத்தாமல் மிக மிகத் துல்லியமாக ஹிஸ்புல்லா இயக்குனர் மட்டுமே பயன்படுத்தும் பேஜர் அமைப்புகளை பயன்படுத்தி ஹிஸ்புல்லா இயக்கத்தினரை மட்டுமே குறி வைத்து பேஜர் கருவிகள் மற்றும் அதில் வைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான வெடிமருந்து ஆகியவற்றுக்கு மிகவும் குறைவான அளவில் பணத்தை செலவு செய்து மிக மிக பெரிய அளவில் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்பை இஸ்ரேல் ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் உள்ள முன்னணி உளவுத்துறை அமைப்புகள் இதிலிருந்து பாடங்களை கற்பதற்கான முயற்சிகளை நிச்சயமாக எடுக்கும் மேலும் இந்த சம்பவம் காரணமாக பாதுகாப்பு தொடர்பான அபாயங்கள் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளன வாய்ப்பு கிடைத்தால் யார் வேண்டுமானாலும் மொபைல் போன் ஹெட்செட் போன்ற அமைப்புகளை ஆயுதமாக பயன்படுத்தும் ஆபத்துக்கள் உள்ளதை வெட்ட வெளிச்சமிட்டு காட்டுகிறது இது தவிர உலகம் முழுவதும் இனி தேசிய பாதுகாப்பு கொள்கைகளில் இத்தகைய தாக்குதல் முறைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் மேலும் நிழல் யுத்தமும் உளவுத்துறை நடவடிக்கைகளும் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதை சொல்லாமல் இந்த நிகழ்வு சொல்கிறது என்றால் அது மிகையல்ல