வருங்காலங்களில் 20 முதல் 30 சதவீதம் வரை பட்ஜெட் உயர்வை எதிர்பார்க்கிறோம் இஸ்ரோ தலைவர் !!
ISRO Indian Space Research Organisation இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் முனைவர் சோம்நாத் அவர்கள் சமீபத்தில் ராய்டர்ஸ் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார் அப்போது வரும் காலங்களில் இஸ்ரோவுக்கான பட்ஜெட் சுமார் 20 முதல் 30 சதவீதம் வரை இந்திய அரசால் உயர்த்தப்படும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.
அதாவது இந்த ஆண்டு இஸ்ரோவுக்கு இந்திய அரசு ஒதுக்கீடு செய்த தொகை 1.55 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும் அதாவது இந்திய மதிப்பில் இது சுமார் 13,000 கோடி ரூபாய் ஆகும். வரும் காலங்களில் அதாவது ஒரு சில ஆண்டுகள் அல்லாமல் ஒரு விரிவான குறிப்பிட்ட காலகட்டத்தில் இதனை இந்திய அரசு இருபதில் இருந்து 30% வரை உயர்த்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறினார். அமெரிக்காவின் நாசாவுக்கு இந்த ஆண்டு சற்றே நிதி குறைக்கப்பட்ட நிலையிலும் ஒதுக்கப்பட்ட தொகையின் மதிப்பு சுமார் 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் இது இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
மேலும் அவர் பேசும் போது இஸ்ரோ அடுத்ததாக ஒரு மிக கனரக ராக்கெட் ஒன்றை தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இது மிகவும் கனமான பொருட்களை உங்களுக்கு எடுத்துச் செல்ல உதவும் எனவும் இந்த திட்டத்தில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஆகியவை கூட்டாக ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் 2035ஆம் ஆண்டு வாக்கில் விண்வெளியில் ஆய்வு நிலையம் அமைப்பது மற்றும் 2040ஆம் ஆண்டு வாக்கில் நிலவுக்கு இந்திய விண்வெளி வீரர்களை அனுப்புவது போன்ற லட்சிய திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தவிர இஸ்ரோவின் தற்போதைய LVM-3 ராக்கெட் ஏவுவதற்கான செலவு அமெரிக்காவின் SpaceX நிறுவனத்தின் ராக்கெட் விலை ஏவுவதற்கான செல்லவே சமன் செய்கிறது எனக்கு கூறியுள்ளார் அதாவது இரண்டும் ஒரே அளவிலான செலவை தான் ஏற்படுத்துகிறது. இந்தியா விரைவில் தனது ககன்யான் திட்டத்தை செயல்படுத்த உள்ளது இதுவரை அமெரிக்கா ரஷ்யா சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய விண்வெளி சந்தையின் மதிப்பு தற்போது 630 பில்லியன் டாலர்களாக உள்ளது இது வருகிற 2035 ஆம் ஆண்டு வாக்கில் 1.8 ட்ரில்லியன் டாலர்களாக அதிகரிக்க உள்ளது. இந்த உலகளாவிய விண்வெளியில் சந்தையில் இந்தியாவின் பங்கு தற்போது எட்டு பில்லியன் டாலர்களாகும். இதனை அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா சுமார் 44 பில்லியன் டாலர்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவை உலகின் முன்னணி விண்வெளி ஆதிக்க நாடாக உயர்த்துவதற்கு தனியார் துறையுடன் இணைந்து செயல்பட இஸ்ரோவை கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் கூடுதலாக இந்தியா தனது விண்வெளி துறையை தூக்கு விக்க சுமார் 1000 கோடி மதிப்பிலான முதலீட்டு நிதியை உருவாக்க உள்ளது. அதேபோல சமீபத்தில் செயற்கைக்கோள் தயாரிப்பில் 100% அன்னி நேரடி முதலீடு மற்றும் ஏவு வாகன தயாரிப்பு விதிமுறைகளை தளர்த்தியது போன்ற கொள்கை ரீதியான மாற்றங்களை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது இதன் மூலம் SpaceX மற்றும் Blue Origin போன்ற உலகளாவிய விண்வெளி துறை நிறுவனங்களை மேல் குறிப்பிட்ட பகுதிகளில் இருப்பதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளது கூடுதல் தகவல் ஆகும்.