லெபனான் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்னால் இருக்கும் இஸ்ரேலின் ஒரு ரகசிய யூனிட் 8200 ஒரு பார்வை !!

சமீபத்தில் ஒட்டுமொத்த லெபனானையும் ஈரான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பாலஸ்தீன பயங்கரவாத இயக்கமான ஹிஸ்புல்லாவையும் முடக்கி போட்ட மேலும் ஒட்டுமொத்த உலகத்தையும் மிரட்சிக்கு ஆளாக்கிய பேஜர் வாக்கி டாக்கி லேப்டாப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சோலார் ஹீட்டர் குண்டுவெடிப்புகள் பற்றி தற்போது புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன அந்த வகையில் இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்தது இஸ்ரேலின் மிகவும் அதி ரகசிய பிரிவான யூனிட் 8200 UNIT 8200 எனக் கூறப்படுகிறது முன்னதாக இஸ்ரேலின் வெளிநாட்டு உளவு அமைப்பான மொசாத் தான் இதற்கு பொறுப்பு எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்த யூனிட் 8200 இஸ்ரேலிய ராணுவத்தின் அதாவது இஸ்ரேலின் வான்படை தரைப்படை கப்பற்படை ஆகியவற்றின் கூட்டு அமைப்பான IDF – Israeli Defence Forces இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் உளவு பிரிவான Military Intelligence Directorate ராணுவ உளவு இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் பல பிரிவுகளில் ஒன்று தான் இந்த யூனிட் 8200 ஆகும் தற்போது இந்த இந்தப் பிரிவு தான் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு என்பது பற்றிய எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் இஸ்ரேல் அரசு தரப்பில் இருந்து அல்லது இஸ்ரேலிய ராணுவ தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.

இந்த சிறப்பு பிரிவு ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக பிரசித்தி பெற்றதாகும் அந்த வகையில் கடந்த 2005 முதல் 2010 வரையிலான ஐந்தாண்டு காலகட்டத்தில் STUXNET ஸ்டக்ஸ்நெட் என்ற வைரஸ் மூலம் ஈரானிய அணுசெரிவூட்டு மையங்களை இஸ்ரேல் தாக்கி அவர்களின் யுரேனிய செறிவூட்டு நடவடிக்கைகளை முடக்கி போட்டது அதுபோல கடந்த 2017 ஆம் ஆண்டு லெபனானின் முக்கியமான தொலைத்தொடர்பு நிறுவனமான ஓகேரோவின் கொலை தொடர்பு கட்டமைப்பை சைபர் தாக்குதல் நடத்தி முடக்கியது மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த பிரிவு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி செல்லும் விமானத்தில் நடத்த திட்டமிட்டிருந்த தாக்குதலை முறியடிப்பதில் முக்கிய பங்காற்றியது.

இந்த ரகசிய பிரிவில் பணியாற்றுவோர் பற்றி முன்னாள் இஸ்ரேலிய ராணுவ உளவுத்துறை அதிகாரி யோசி குப்பர்வாசர் கூறும்போது இந்த யூனிட் 8200 மிகவும் சிறந்த அனுபவமிக்க அமைப்பு எனவும் இதில் பணியாற்றுவோர் இஸ்ரேலின் மிக முக்கியமான சைபர் மற்றும் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இஸ்ரேலிய ராணுவத்தில் பணியாற்றும் மிகத்தேர்ந்த மற்றும் மிக சிறப்பான பணியாளர்களில் இவர்களும் அடங்குவர் எனவும் தெரிவித்தார் இந்த அமைப்பில் பணியாற்றுவோர் அனைவரும் பெரும்பாலும் 16 முதல் 21 வயதுக்குள்ளாகத்தான் இருப்பர் என கூறப்படுகிறது இவர்கள் தங்களது குடும்பத்தினரிடமும் அல்லது வேறு யாரிடமோ தாங்கள் இந்த பிரிவில் தான் பணியாற்றுகிறோம் எனவும் அதுபோல ஓய்வு பெற்ற பிறகு நாங்கள் இந்த இந்த பணிகளை செய்தோம் என்னவோ தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளிலேயே இஸ்ரேலிய ராணுவம் கம்ப்யூட்டர் வகுப்புகள் நடத்தி அடிப்படை கோடிங் மற்றும் ஹேக்கிங் பயிற்சிகளை அளிக்கிறது இதில் சிறப்பாக செயல்படும் மாணவர்களை தேர்வு செய்கிறது அதாவது இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் தானாகவே மிக வேகமாக கற்றுக் கொள்ளும் திறன் கொண்டவர்களாக இவர்கள் இருப்பர் இவர்களுக்கு இந்த பிரிவில் சேர்வதற்கு தங்களது பள்ளிக் கல்வியை முடித்ததும் அழைப்பு விடுக்கப்படும் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வோர் மூன்றாண்டு காலம் கட்டாய ராணுவ சேவை திட்டத்தின் கீழ் இந்தப் பிரிவில் பணியாற்றி அதன் பின்னர் உயர்கல்வி படிக்க செல்வர் சிலர் தொடர்ந்து முழு நேரமாக அந்த பிரிவில் பணியாற்றுவர்.

இப்படி இந்த பிரிவில் பணியாற்றிய பலர் ஓய்வுக்குப் பிறகு சுமார் 70-க்கும் மேற்பட்ட உலகப் பிரசித்தி பெற்ற சைபர் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர் மேலும் பல இத்தகைய நிறுவனங்களில் மிகப்பெரிய பதவிகளிலும் உள்ளனர் இதில் பல நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக உதாரணமாக இவர்கள் உருவாக்கிய நிறுவனங்களில் பல அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ளனர் குறிப்பாக பாலோ அல்டோ Palo Alto மற்றும் பெகாசஸ் ஒட்டு கேட்பு மென்பொருளை தயாரித்த NSO Group ஆகியவை மேற்குறிப்பிட்ட பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் துவங்கிய நிறுவனங்கள் ஆகும், இந்தப் பிரிவின் முன்னாள் வீரர்கள் பலர் இஸ்ரேலின் உலக பிரசித்தி பெற்ற தகவல் தொழில்நுட்ப தொழில் துறையில் கோலோச்சி வருகின்றனர் மேலும் உலக அளவிலும் இவர்களின் பங்களிப்பு தகவல் தொழில்நுட்ப மற்றும் சைபர் பாதுகாப்பு துறைகளில் அதிக அளவில் உள்ளது.

இந்த யூனிட் 8200 பிரிவு பல்வேறு வகையான ஒட்டு கேட்பு உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உதாரணமாக சிக்னல் உளவு, மனித உளவு, உளவு எதிர்ப்பு நடவடிக்கைகள், சைபர் போர் முறை, தொழில் நுட்ப உளவு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இது அமெரிக்காவின் NSA National Security Agency தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பிற்கு இணையானதாகும் இங்கிலாந்தின் பாதுகாப்பு சிந்தனை அமைப்பை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் இது பற்றி பேசும்போது இந்த யூனிட் 8200 உலகின் மிகவும் முன்னணி உளவு அமைப்புகளில் ஒன்று எனவும் அளவில் மாத்திரம் அமெரிக்காவின் என் எஸ் ஏ அமைப்பிற்கு அடுத்ததாக உள்ளது எனவும் இங்கிலாந்தின் GCHQ – General Communications HeadQuarters இணையானதாகும் எனவும் இஸ்ரேலிய ராணுவத்தில் மிகப்பெரிய பிரிவு இதுதான் எனவும் கூறியுள்ளார். இந்தியாவைப் பொறுத்த வரையில் NTRO மற்றும் STEAG பிரிவுகள் இத்தகைய அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு கண்காணிப்பு உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்

இந்தப் பிரிவு தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் AI Artificial Intelligence செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹமாஸ் இலக்குகளை அடையாளம் கண்டு வருவதாகவும், தகவல் தரவுகள் ஆகியவற்றை சேகரிப்பது மற்றும் தொழில்நுட்ப ரீதியான தாக்குதல்களையும் அவ்வப்போது பல்வேறு இலக்குகளை குறி வைத்து நடத்தி வருகிறது மேலும் மேற்கு கரை மற்றும் காசா பகுதிகளிலும் இஸ்ரேலிய ராணுவம் சண்டை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பகுதிகளிலும் இது தவிர போர்க்காலத்தில் களம் முன்னணியில் உள்ள படை பிரிவுகளுடன் இணைந்தும் உளவு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது இந்தப் பிரிவில் பணியாற்றுபவர்களுக்கு அளவற்ற சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக சிந்தனைத் திறன் ஊக்குவிக்கப்பட்டு புதிய புதிய தாக்குதல் முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை முன்கூட்டியே கண்டுபிடித்து அல்லது கணித்து தடுக்க தவறிய காரணத்திற்காக ஒட்டுமொத்த இஸ்ரேலிய ராணுவத்துடன் இந்த பிரசித்தி பெற்ற மதிப்பு மிக்க ரகசிய படைப்பிரிவின் நற்பெயரும் பாதிப்புக்குள்ளானது இதைத் தொடர்ந்து இந்த ரகசிய படைப்பிரிவின் கட்டளை அதிகாரி இந்த மாதம் தான் விரைவில் அக்டோபர் 7 தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அறிவித்தது கூடுதல் தகவலாகும்