உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து சேர்ந்த மார்ஷல் குழுமம் இந்தியாவை சேர்ந்த உலக பிரசித்தி பெற்ற மகேந்திரா குழுமத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது இதன் மூலம் இரண்டு குழுமத்தின் நிறுவனங்களும் கூட்டாக இணைந்து தாங்கள் சார்ந்த துறைகளில் தங்களுக்கு உள்ள அனுபவங்களை பயன்படுத்தி பாதுகாப்பு மற்றும் வான்வெளி துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளனர்.
மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி மகேந்திரா குழுமத்தை சேர்ந்த டெக் மஹிந்திரா நிறுவனம் தனது பொறியியல் திறன்கள் மூலமாக மார்ஷல் குழும நிறுவனங்களின் வானூர்தி வடிவமைப்பு தயாரிப்பு சிறப்பு நடவடிக்கை தளவாடங்கள் சார்ந்த திட்டங்கள் அதிநவீன பராமரிப்பு பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் மையங்கள் உதவ உள்ளது அதேபோல டேட்டா அனலிடிக்ஸ் உள்ளிட்ட துறைகளிலும் இரண்டு நிறுவனங்களும் கூட்டாக செயல்பட உள்ளன.
இது தவிர மேலும் இந்த ஒப்பந்தத்திற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக மஹிந்திரா குழுமம் மார்ஷல் குழுமத்துடன் இணைந்து ஹைட்ரஜன் எரிபொருளை மையமாகக் கொண்ட பல்வேறு எதிர்கால திட்டங்களிலும் கூட்டாக இணைந்து செயலாற்ற உள்ளது குறிப்பாக இது விமான போக்குவரத்தில் தற்போது பயன்படுத்தி வரப்படும் பெட்ரோலியம் சார்ந்த எரிபொருள்களுக்கு சிறந்த மாற்றாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும் ஆகவே இந்த இரண்டு குழுமங்கள் இடையேயான ஹைட்ரஜன் எரிபொருள் திட்டங்களில் உள்ள ஒத்துழைப்பு விமான போக்குவரத்து துறையில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுத்தாத எரிபொருளுக்கான அதிகரிக்கும் தேவையை ஒட்டி உள்ளது என்பது கூடுதல் தகவலாகும்
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி டெக் மஹிந்திராவின் பொறியியல் சேவைகள் பிரிவின் தலைவர் ஆர் வி நரசிம்மன் பேசும்போது வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளை பொருத்தமட்டில் தயாரிப்பு திறன்களை அதிகப்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நவீன திறன்களை பெறுவது போன்றவை மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகின்றன டெக் மகேந்திராவின் உலகளாவிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை மார்ஷல் குழுமத்தின் அனுபவங்கள் மற்றும் தொழில்துறை திறன்கள் ஆகியவற்றுடன் ஒன்றிணைத்து வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் விதமான அதிநவீன கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து தொழில்துறையின் அபரிமிதமான வளர்ச்சிக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும் என கூறினார்
மஹிந்திரா குழுமத்தின் டெக் மகேந்திரா மற்றும் மார்ஷல் குழுமம் இடையே கையெழுத்தாகியுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் அதன் மூலமாக ஏற்பட்டுள்ள கூட்டணி வான்வழி மற்றும் பாதுகாப்பு துறையில் கணிசமான அளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும் எனவும் இதன் மூலமாக மேலும் திறன் வாய்ந்த புத்தம் புதிய சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் உருவாகும் என வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறைகளை சேர்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்