இந்திய கடலோர காவல் படை ஹெலிகாப்டர் விபத்து 3 வீரர்கள் மாயம் !!
கடலில் ஆபத்தில் சிக்கிய கப்பலில் மீட்பு பணி மேற்கொள்ள சென்று இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரை இயக்கிய இரண்டு விமானிகள் மற்றும் ஒரு மீட்பு வீரர் என மூன்று பேர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய கடலோர காவல் படை இது குறித்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் நேற்று இரவு 11 மணி அளவில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட “ஹரி லீலா” என்ற மோட்டார் டேங்கர் கப்பல் குழுவிடமிருந்து தங்களது குழுவில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது உயிரைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக மீட்பு ஹெலிகாப்டரை அனுப்பும்படி அவசர உதவி கோரி தகவல் அனுப்பப்பட்டது, குஜராத் மாநிலம் போர்பந்தரிலிருந்து கடலுக்குள் 45 கிலோமீட்டர் தொலைவில் இருந்த அந்த கப்பலை இந்திய கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் நெருங்கியதாகவும்
அப்போது ஏற்கனவே குஜராத் மாநிலத்தை கடுமையாக தாக்கி வரும் புயல் காரணமாக வீசிய கடும் காற்று அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ இந்திய கடலோர காவல் படை ஹெலிகாப்டரை வேறு வழியின்றி அவசர கால முறைமை அடிப்படையில் கடலில் தரையிறக்க விமானிகள் முடிவு செய்து தரையிறக்கினர், ஆனால் கடுமையான கொந்தளிப்பு காரணமாக ஹெலிகாப்டரில் இருந்து இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு ஆழ்கடல் நீச்சல் நீர்மூழ்கி வீட்டு வீரர்கள் ஆகியோர் மாயமாகினர்.
இதனைத் தொடர்ந்து இந்திய கடலோர காவல் படை காணாமல் போன குழுவினரை தேடும் பணிகளில் நான்கு கப்பல்களையும் இரண்டு விமானங்களையும் ஈடுபடுத்தியது தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் நடவடிக்கை என்பது ஒரு ஆழ்கடல் நீச்சல் நீர்மூழ்கி மீட்பு வீரர் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டார்,அவரை உடனடியாக மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அதே நேரத்தில் தற்போது வரை கிடைக்காத இரண்டு விமானிகள் மற்றும் ஒரு மீட்பு படை வீரரை தொடர்ந்து தேடி வருவதாகவும் அதேபோல் கடலில் தரை இறக்கப்பட்ட ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்திய கடலோர காவல்படை தகவல் வெளியிட்டுள்ளது.
காணாமல் போன இதே ஹெலிகாப்டர் குஜராத் மாநிலத்தை தற்போது கடுமையாக பாதித்துள்ள புயலின் போது வீட்டுப் பணிகளில் ஈடுபட்டு 67 பேரை காப்பாற்றி உள்ளது இந்த ஹெலிகாப்டர் குறிப்பாக துவாரகா மற்றும் போர்பந்தர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு தாலுகாக்களில் வீட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்தது அந்த சமயத்தில்தான் மேற்குறிப்பிட்ட வணிக கப்பலில் இருந்து வந்த அவசர உதவி கோரிக்கை காரணமாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள சென்ற போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் குஜராத் மாநிலத்தில் இந்திய கடலோர காவல் படையினர் தொடர்ச்சியாக கடுமையான காற்று மற்றும் குறைந்த பார்வை இந்த சூழலை ஏற்படுத்தி உள்ள தட்பவெப்பத்திற்கு இடையேயும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் ஒரு இடத்தில் ஒரு இந்திய கடலோர காவல் படை ஹெலிகாப்டர் 33 பேரை காப்பாற்றியுள்ளது, மற்றொரு இடத்தில் இந்திய கடலோர காவல் படை மீட்பு குழுவினர் 28 பேரை மீட்டு உள்ளன இப்படி மொத்தம் 61 பேர் நேற்று மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஊடகத்தினர் இந்திய கடலோர காவல் படை மூத்த அதிகாரிகளை மேல் குறிப்பிட்ட துயர சம்பவம் தொடர்பாக தொடர்பு கொண்ட போது இந்த விபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் அதன் முடிவில் தான் இது இயற்கை சூழல் அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட விவசாய என்பது தெரியவரும் என்று கூறியுள்ளனர். காணாமல் போன மூன்று படையினரின் விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை என்பது கூடுதல் தகவலாகும்.