ஐரோப்பாவிற்கு மேம்படுத்தப்பட்ட இடைத்தர இயந்திர துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்ய உள்ள இந்தியா !!

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அதாவது இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனமான SAF – Small Arms Factory உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் அமைந்துள்ளது இந்த நிறுவனம் ஐரோப்பாவிற்கு சுமார் 2000 மேம்படுத்தப்பட்ட இடைத்தர இயந்திர துப்பாக்கிகளை MMG – Medium Machine Gun ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த 2000 மேம்படுத்தப்பட்ட இடைத்தர இயந்திரத்துப்பாக்கிகளை இந்த சிறிய ஆயுதங்கள் தொழிற்சாலை டெலிவரி செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SAF சிறு ஆயுதங்கள் தொழிற்சாலை நிறுவன அதிகாரிகள் இந்த ஒப்பந்தம் பற்றி ஊடகங்களிடம் பேசும் போது இது இந்தியாவின் பாதுகாப்பு துறைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம் மற்றும் வளர்ச்சியின் மற்றொரு படி கல் எனவும் இந்த ஒப்பந்தம் மூலமாக போட்டி நிறைந்த ஐரோப்பிய ஆயுத சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு உறுதி செய்யப்படும் எனவும் மிகச்சிறந்த பொறியியலின் விளைவாக ஒரு நிமிடத்திற்கு சுமார் 1000 தோட்டாக்களை சுடும் இந்த துப்பாக்கி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

SAF – Small Arms Factory சிறு ஆயுதங்கள் தொழிற்சாலை நிறுவனத்தின் பொது மேலாளர் சுரேந்திர பாட்டில் யாதவ் இது பற்றி மேலும் பேசும்போது பல்வேறு ஐரோப்பிய நிறுவனங்கள் இந்த 2000 இடைத்தர எந்திரத்துப்பாக்கிகளுக்கான ஒப்பந்தத்தை தங்கள் நிறுவனத்திற்கு தந்துள்ளதாகவும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப இந்த துப்பாக்கிகளை ஒப்பந்தத்தின் படி முறையாக சிறு சிறு மாற்றங்கள் செய்து டெலிவரி செய்ய உள்ளதாக கூறினார் அதே நேரத்தில் பாதுகாப்பு காரணங்கள் கருதி இந்த ஒப்பந்தத்தின் ஒட்டுமொத்த மதிப்பு எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது போன்ற விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இந்த மேம்படுத்தப்பட்ட இடைத்தரை இயந்திரத்துப்பாக்கியை தொடர்ச்சியாக பயன்படுத்தி தாக்குதல் நடத்த முடியும் இப்படி அதிக நேரம் தொடர்ச்சியாக பயன்படுத்தி சுடும்போது பொதுவாக இத்தகைய எந்திர துப்பாக்கிகள் சூடாகி ஜாம் ஆகுவது வழக்கம் ஆனால் மிக சிறந்த பொறியியலின் காரணமாக இந்த துப்பாக்கில் அத்தகைய பிரச்சனைகள் இல்லை மேலும் இவற்றை டாங்கிகள் கவச வாகனங்கள் அதிவேக படகுகள் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றிலும் பொருத்தி தங்களது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும் இதுவே ஐரோப்பிய வாடிக்கையாளர்களை அதிகமாக கவர்ந்ததாகவும் இ
அதன் காரணமாக தான் ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் இந்த துப்பாக்கியை தங்களுக்கு தேர்வு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கி சுமார் 11 கிலோ இடைக் கொண்டதாகும் இதனை ஒரு முக்காலியின் மீது பொருத்தி பயன்படுத்திக் கொள்ள முடியும் மேலும் வாகனங்கள் டாங்கிகள் ஹெலிகாப்டர்கள் படகுகள் ஆகியவற்றில் அதற்கேற்ற பிரத்தியேக அமைப்புகளில் பொருத்தி பயன்படுத்திக்கொள்ள முடியும் இது ஒரு முழு தானியங்கி காற்றை பயன்படுத்தி சூட்டை தணிக்கும் திறன் கொண்ட வெப்பம் மிகுந்த வாயுக்களின் உதவியோடு இயங்கும் பெல்ட் தோட்டாக்களை பயன்படுத்தி தாக்கும் துப்பாக்கி ஆகும்.

இந்த துப்பாக்கியை இருக்காலியின் மீதும் பொருத்தி பயன்படுத்திக் கொள்ள முடியும் மேலும் போர்க்களத்தில் தேவைக்கேற்ப அவசர சூழல்களில் வீரர்கள் தங்களது தோள்களிலும் அல்லது கையால் பிடித்துக் கொண்டு இடுப்பு பகுதியில் வைத்தும் தாக்குதல் நடத்த முடியும் மேலும் இதனுடைய பேரல் குரோமியம் உலோகப் பூச்சு கொண்டதாகும் மேலும் இதனுடைய பேரலை தேவைக்கற்ப கழற்றி வேறு பேரலை தாக்குதலை நடத்த முடியும் இதன் காரணமாகவும் ஓபன் ப்ரீச் முறையில் இயங்குவதாலும் அதிக வெப்பமடைந்து ஜாம் ஆகுவது தவிர்க்கப்படுகிறது.

இந்த துப்பாக்கியின் அதிகபட்ச தாக்குதல் தொலைவு சுமார் 1800 மீட்டர் ஆகும் அதாவது 1.8 கிலோ மீட்டர் ஆகும் மேலும் இது பயன்படுத்தும் தோட்டா 7.62×51 mm காலிபரை சேர்ந்ததாகும், இந்த துப்பாக்கியில் அமைக்கப்பட்டுள்ள MIL STD 1913 Picatinny Rail அமைப்பு காரணமாக பல்வேறு வகையான அதிநவீன லேசர் மற்றும் இதர குறிப்பார்க்கும் கருவிகளை அனைத்து பயன்படுத்தவும் முடியும் இந்த துப்பாக்கி தொலைதூர காலாட்படை நடவடிக்கைகளின் போது மிகவும் உதவியாக அமையும் என கான்பூர் சிறு ஆயுதங்கள் தொழிற்சாலை நிறுவன அதிகாரிகளால் கூறப்படுகிறது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்