கௌரவ் மிதவை குண்டு சோதனை வெற்றி !!

நமது நாட்டின் முன்னணி மற்றும் பிரதான ஆயுத வடிவமைப்பு தயாரிப்பு மேம்பாட்டு நிறுவனமான DRDO – Defence Research & Development Organisation பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைத்து மேம்படுத்தி உருவாக்கிய Gaurav கௌரவ் மிதவை குண்டுடைய சோதனைகள் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கௌரவ் மிதவை குண்டை தயாரிக்கும் நிறுவனமாக அதானி குடும்பத்தின் ஒரு பிரிவான Adani Defence & Aerospace அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உள்ளது. சோதனைகளின் போது சுமார் 1000 கிலோ எடை கொண்ட இந்த மிதவை குண்டு சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்குகளை மிகவும் துல்லியமாக தாக்கி அழித்து தனது திறன்களை நிரூபித்துள்ளது.

இந்த சோதனைகள் வெற்றி பெற்றுள்ளதால் தற்போது இந்த கௌரவ் மிதவை குண்டை LSP – Limited Serial Production தயாரிப்பு கட்டத்தை எட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இந்த மிதவை குண்டை குறிப்பிட்ட அளவில் தயாரித்து பாதுகாப்பு படைகளுக்கு வழங்க உள்ளனர். இந்த கௌரவ் மிதவை குண்டு இந்திய படைகளில் சேர்க்கப்படும் போது அதிக தொலைவுக்கு மிக துல்லியமான தாக்குதல் நடத்தும் திறன்களும் வலுவடையும் என்றால் மிகை ஆகாது.

இந்த கௌரவ் மிதவை குண்டை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அதானி குழுமத்தின் அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து தயாரித்து உள்ளது இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தொழில்துறையின் திறன்களுக்கு சான்றாக விளங்குகிறது. மேலும் இந்த கௌரவ் மிதவை குண்டின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் ராணுவ நவீனமயமாக்கல் திட்டங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு உறுதி செய்வதில் மேலும் ஒரு படிக்கலாக அமைந்துள்ளது நிச்சயமாக இந்த கௌரவ் மிதவை குண்டு இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை பன்மடங்கு வலுவாக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை