இந்திய கடற்படை படிப்படியாக தனது கடற்படை திறன்களை வலுப்படுத்தியும் தனது போர் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்தும் வருகிறது கூடவே நவீன மயமாக்கல் நடவடிக்கைகளையும் வேகப்படுத்தி உள்ளது இந்த நிலையில் இவற்றின் பலனாக அடுத்த 12 மாதங்களில் இந்திய கடற்படையில் 13 புத்தம் புதிய போர்க்கப்பல்கள் இணைய உள்ளன.
இந்த 12 புதிய போர்க்கப்பல்களும் பல்வேறு வகையானவை ஆகும். அதாவது இவற்றில் சில நாசகாரி போர்க்கப்பல்கள் உண்டு, இவற்றில் சில ஃபிரிகேட் மற்றும் கார்வெட் ரகத்தை சேர்ந்தவை ஆகும். மேலும் இவற்றில் சில நீர்மூழ்கி கப்பல்களும் அடக்கம், மேலும் கூடுதலாக சர்வே கப்பல்களும் இவற்றில் உட்படும் என்பதும் மொத்தத்தில் இந்திய கடற்படையின் செயல்திறன்கள் மற்றும் நடவடிக்கை இருப்பை பரவலாக்க இவை அனைத்தும் உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இனி எந்தெந்த கப்பல்கள் இந்திய கடற்படையில் அடுத்த 12 மாதங்களில் அதாவது ஒரு வருடத்தில் இணைய உள்ளன என்பதை பற்றி பார்க்கலாம்.
நாசகாரிகள்:
1) INS SURAT ஐ என் எஸ் சூரத்.

Project 15 bravo P15B திட்டம் பதினைந்து பிராவோவின் கீழ் கட்டப்படும் விசாகப்பட்டினம் ரக அதிநவீன ஸ்டெல்த் நாசகாரி போர்க்கப்பல்களில் நான்காவது கடைசியுமானது தான் இந்த ஐ என் எஸ் சூரத் ஆகும். இது இந்தாண்டு டிசம்பர் மாதம் படையில் இணைய உள்ளது.
2) INS VISHAKAPATNAM ஐ என் எஸ் விசாகப்பட்டினம்:

மேலே குறிப்பிட்ட திட்டம் 15 பிராவோ P15 B project 15 Bravo இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் விசாகப்பட்டினம் ரக நாசகாரி கப்பல்களின் வரிசையில் முதலாவது கப்பலாகும். இது டிசம்பர் 2024ல் படையில் இணையும்.
இந்த இரண்டு கப்பல்களும் பல்வேறு அதிநவீன சென்சார் அமைப்புகள் மற்றும் ஆயுத அமைப்புகள் மற்றும் ரேடார் அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் மேலும்பிரம்மாஸ் மற்றும் பராக் எட்டு அதிநவீன கப்பல் எதிர்ப்பு மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை சுமக்கும்.
ஃப்ரிகேட் கப்பல்கள்:
3) INS TAMALA ஐ என் எஸ் தமாலா: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய கடற்படையின் சேவையில் இணையுள்ள இந்த போர்க்கப்பல் ஏற்கனவே இந்திய கடற்படையில் சேவையில் உள்ள தல்வார் ரக பிரிகேட் போர்க்கப்பல்களின் வரிசையில் வருகிறது.

4) INS TUSHIL ஐ என் எஸ் துஷில்: இந்தக் கப்பலும் மேலே குறிப்பிட்ட தல்வார் ரக போர்க்கப்பல் வரிசையில் வருவதாகும். இந்த போர் கப்பலானது வருகிற செப்டம்பர் மாதம் இந்திய கடற்படையில் இணைய உள்ளது.
இந்த கப்பல்களில் அதிநவீன சென்சார் ரேடார் மற்றும் ஆயுதங்கள் இருக்கும்
இவை இந்திய கடற்படையின் பலத்தை அதிகரித்து கடல் பரப்பிற்கு மேலான கலன்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
5) INS NILGIRI ஐ என் எஸ் நீலகிரி: இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய கடற்படையில் இணையுள்ள இந்த போர்க்கப்பல் திட்டம் 17 ஆல்ஃபா P17a project 17 Alpha திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் நீலகிரி ரக போர்க்கப்பல்களின் வரிசையில் முதலாவது கப்பல் ஆகும்.

6) INS UDAYGIRI: அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்திய கடற்படையின் சேவையில் இணையுள்ள இந்த கப்பல் மேல் குறிப்பிட்ட நீலகிரி ரக ஃப்ரிகெட் போர்க்கப்பல்கள் வரிசையில் வரும் கப்பல் ஆகும்.

7) INS HIMGIRI : அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய கடற்படையில் இணையுள்ள இந்த கப்பலும் மேலே குறிப்பிட்ட திட்டம் 17 ஆல்ஃபா என அழைக்கப்படும் நீலகிரி ரக போர்க்கப்பல்களின் வரிசையில் வரும் கப்பல் ஆகும்.

திட்டம் 17 ஆல்ஃபாவின் கீழ்கட்டப்பட்ட நீலகிரி ரகத்தை சேர்ந்த இந்த மூன்று போர்க்கப்பல்களும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்கள் கப்பல் எதிர்ப்பு போர் திறன்கள் வான் பாதுகாப்பு போர் திறங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் மேலும் இந்த கப்பல்களில் ஒருங்கிணைந்த ரேடார் அமைப்புகள் ஸ்டெல்த் தொழில்நுட்பம் மற்றும் பல வகையான ஆயுத அமைப்புகள் ஆகியவை இருக்கும் இந்த வகை கப்பல்களின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இவற்றால் பல பரிமாண கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதாகும்.
நீர்மூழ்கி கப்பல்:
8) INS VAGSHEER ஐ என் எஸ் வாக்ஷீர்: பிரான்ஸ் நாட்டில் இருந்து தொழில் நுட்ப பரிமாற்ற ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்பத்தை பற்றி இந்தியாவிலேயே கட்டப்பட்ட கல்வரி ரக நீர் மூழ்கி கப்பல்களின் வரிசையில் கடைசி கப்பலான இந்த கப்பல் வருகிற டிசம்பர் மாதம் இந்திய கடற்படையின் சேவையில் இணைய உள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பல் மூலம் இந்திய கடற்படையின் நீர் மூழ்கி எதிர்ப்பு திறன்கள் போர்க்கப்பல் எதிர்ப்பு திறன்கள் ஆகியவை வலுப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்வெட் கப்பல்கள்:
9) INS Mahe ஐ என் எஸ் மாஹே: இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டு வரும் நீர்மூழ்கி எதிர்ப்பு திறன் கொண்ட கடலோர கார்வெட் கப்பல்களில் இரண்டாவதான இந்த கப்பல் வருகிற ஆகஸ்ட் மாதம் இந்திய கடற்படையின் சேவையில் இணைய உள்ளது.

10) INS ARNALA ஐ என் எஸ் அர்ணாலா: மேலே குறிப்பிட்ட ASW SWC – Antai submarine Warfare shallow watercraft நீர் மூழ்கி எதிர்ப்பு திறன் கொண்ட கடலோர கார்வெட் கப்பல் திட்டத்தின் கீழ் கட்டப்படும் முதலாவது கப்பலான இது வருகிற நவம்பர் மாதம் இந்திய கடற்படை சேவையில் இணைய உள்ளது.

இந்த இரண்டு கப்பல்களும் கடலோரப் பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு கடலுக்கடியிலான ஆபத்துகள் குறிப்பாக எதிரிகளின் நீர் மூழ்கி கப்பல்களை நடமாட்டத்தை கண்டறிந்து அவற்றைத் தாக்கி அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவை இந்திய கடற்படையில் இணையும்போது இந்திய கடற்படையின் கடலோர பாதுகாப்பு திறன்கள் பல மடங்கு வலுவடையும் என்றால் மிகை ஆகாது.
ஆய்வு கப்பல்கள் :
11) INS SANSHODHAK ஐ என் எஸ் சன்ஷோதக்: இந்திய கடற்படைக்காக கட்டப்பட்ட வரும் சந்தாயக் ரக சர்வே அல்லது ஆய்வு கப்பல்களின் வரிசையில் கடைசி கப்பலான இது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய கடற்படையில் இணைய உள்ளது.

12) INS NIRDESHAK ஐ என் எஸ் நிர்தேஷக்:
மேலே குறிப்பிட்ட சந்தாயக் ரக கப்பல்களின் வரிசையில் வரும் இந்த நிர்தேஷக் கப்பல் வருகிற ஆகஸ்ட் மாதம் இந்திய கடற்படையில் இணைய உள்ளது.
13) INS IKSHAK
ஐ என் எஸ் இக்ஷாக்.
இதுவும் சந்தாயக் ரக ஆய்வு கப்பல்களின் வரிசையில் வரும் கப்பல் ஆகும். இந்தக் கப்பல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்திய கடற்படையில் இணைய உள்ளது.
இந்த மூன்று அதுக்கு கப்பல்களும் அதிநவீன கடல்சார் மற்றும் கடலடி ஆய்வு திறன்களை கொண்டிருக்கும். இதற்காக அதிநவீன தொழில்நுட்பங்களை இந்த கப்பல்களில் அமைத்துள்ளனர் இந்த கப்பல்கள் மேற்கொள்ளும் ஆய்வுகள் மூலமாக இந்திய கடற்படை அது தொடர்பான தகவல்களைப் பெற்று தனது நடவடிக்கைகளை மிகவும் பாதுகாப்பாக மேற்கொள்ள வழிவகுக்கும்.
இந்த 13 கப்பல்களும் இந்திய கடற்படையின் நவீன மயமாக்கல் திட்டங்கள் மற்றும் போர்க்கப்பல் அதிகரிப்பு திட்டங்கள் ஆகியவற்றின் பகுதியாகும். இந்தப் பலதரப்பட்ட 13 கப்பல்களும் இந்திய கடற்படையின் நீர் மூழ்கி எதிர்ப்பு திறன்கள் கப்பல் எதிர்ப்பு திறன்கள் கடல் அடி ஆய்வு திறன்கள் ரோந்து திறன்கள் ஆகியவற்றை பல மடங்காக அதிகரித்து இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள இந்திய நலன்களை இந்திய கடற்படை சிறப்பான முறையில் பாதுகாக்க வழிவகுக்கும் என்பது சிறப்பு தகவலாகும்.