சமீபத்தில் வெளியான இந்திய நிதி அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றில் இந்தியா அர்மேனியாவின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக உருமாற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது இதற்கு முன்பாக ரஷ்யா அர்மேனியாவுக்கான மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக முதலிடம் பிடித்திருந்தது ஆனால் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவால் ஆர்மீனியாவுக்கு போதுமான ஆயுதங்களை சப்ளை செய்ய முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில் இந்தியா அந்த இடத்தை ரஷ்யாவை பின்தள்ளி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த 2020 ஆம் ஆண்டு அர்மேனியா மற்றும் அசர்பைஜான் இடையே நடைபெற்ற நகார்னோ கராபக் போரின் அர்மேனியப் படைகள் கடும் சேதத்தை சந்தித்தனர். மேலும் அசர்பைஜானிய ராணுவ வீரர்கள் அர்மேனிய வீரர்கள் மீது பல்வேறு போர் குற்றங்கள் புரிந்தனர் குறிப்பாக அர்மேனிய பெண் ராணுவ வீரர்கள் மற்றும் பெண்களை மிகக் கொடூரமாக கற்பழித்து உறுப்புகளை சிதைத்து கொடூரமாக கொலைகளை செய்த வீடியோக்கள் அப்போது வெளியாகி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தப் போரில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து அர்மேனியா தனது ராணுவத்தை நவீனமயமாக்கும் பணிகளை துவங்கியது. அப்போது ரஷ்யாவிற்கும் உக்கிரேனிற்கும் இடையே போர் துவங்கியதை அடுத்து ரஷ்யாவால் ஆர்மீனியாவுக்கு தேவையான ஆயுதங்களை சப்ளை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் ஆர்மீனியா தனது நீண்ட நாள் நட்பு நாடான இந்தியா பக்கம் ஆயுத தேவைகளை பூர்த்தி செய்யும்படி திரும்பியது.
அதனால் வரையிலும் இந்தியாவுடன் பாதுகாப்பை தவிர்த்த நட்புறவை அர்மினியா கொண்டிருந்த நிலையில் அசர்பைஜான் உடனான போருக்கு பிறகு அந்த சூழல் அடியோடு மாறியது. தற்போது இந்தியா தான் அர்மேனியாவுக்கு மிகப்பெரிய அளவில் ஆயுதம் ஏற்றுமதி செய்யும் நாடாக விளங்குகிறது. அர்மேனியாவுக்கு ஆதரவாக ரஷ்யா,பிரான்ஸ், ஈரான், கிரீஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் இருந்தாலும் இந்தியா தான் மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்து ஆர்மீனியாவின் ராணுவ பலத்தை அதிகரிக்க உதவி வருகிறது
அந்த வகையில் அர்மேனியா இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொண்ட முதலாவது பாதுகாப்பு தளவாடம் SWATHI WLR – Weapon Locating Radar சுவாதி ஆயுத கண்டுபிடிப்பு ரேடார் அமைப்பாகும், அதைத்தொடர்ந்து பினாகா பல குழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகள், மலையகத் தாக்குதல் பீரங்கிகள் மற்றும் இதர பீரங்கி அமைப்புகள் போன்ற முக்கிய தளவாடங்களை இந்தியாவிடம் இருந்து அர்மேனியா படையில் இணைத்தது. அதேபோல கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவிடம் இருந்து ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளுக்காக ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி அடுத்த வருடம் இவற்றின் டெலிவரி துவங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
சுமார் 720 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 15 ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை ஆர்மேனியா இந்தியாவிடம் இருந்து வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இது தவிர இந்தியா அர்மேனியாவுக்கு பல்வேறு வகையான ஆயுதங்கள் குறிப்பாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பீரங்கிகள் ஹெலிகாப்டர்கள் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் போன்றவற்றையும் இந்தியா அர்மேனியாவிற்கு சப்ளை செய்வதற்கு ஆர்வம் காட்டி வருவதாக மூத்த பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அர்மேனியாவும் அசர்பைஜானும் உள்ள தெற்கு காகசஸ் பிராந்தியத்தில் துருக்கி மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. துருக்கி அசர்பைஜானுக்கு ஆதரவாக உள்ளதும் கூடவே அசர்பைஜானுக்கு பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் ஆயுதங்களை அழித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அர்மேனியாவுக்கு ஆதரவாக ரஷ்யா,இந்தியா, ஈரான், அமெரிக்கா, பிரான்ஸ், கிரீஸ் போன்ற நாடுகள் உள்ளன.இந்த மிகவும் சிக்கலான புவிசார் அரசியல் சூழலை இந்தியா லாவகமாக கையாண்டு அர்மேனியாவுக்கு தேவையான ஆயுதங்களை சப்ளை செய்து வருமானத்தையும் ஈட்டி தெற்கு காகசஸ் பகுதியில் தனது செல்வாக்கையும் நிலைநாட்டி வருகிறது.
இது துருக்கிக்கு நேரடியாக பெரும் சவாலாகவும் நெருடலாகவும் அமைந்துள்ளது. ஆனால் இதை இந்தியா தெரிந்தே துருக்கிக்கு ஒரு சவாலை விடுத்துள்ளது. காரணம் காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி தீவிரமான நிலைபாட்டை எடுத்து வரும் நாடாகும். இதை மனதில் வைத்துக் கொண்டு தான் இந்தியா தனது வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை துருக்கி எதிராக துருக்கியை பாதிக்கும் விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அர்மேனியா சர்வதேச அரங்கில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு தீவிரமான ஆதரவை அளிக்கும் நாடுகளில் ஒன்று என்பதாகும்.
அர்மேனியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளிலும் மனக்கசப்புகளும் சில விரிசல்களும் ஏற்பட்டுள்ளன. காரணம் உக்ரேன் உடனான ரஷ்யாவின் போரில் ஆர்மீனியா ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதனை அந்நாட்டு பிரதமர் நிக்கோல் பசின் ஷான் பலமுறை தெரிவித்துள்ளார். சமீபத்தில் கூட அர்மேனியா ஒரு சுதந்திரமான இறையாண்மை மிக்க நாடு எனவும் உக்கரையின் மீதான படையெடுப்பில் ரஷ்யாவுடன் எங்களுக்கு துளியும் உடன்பாடு இல்லை என தெரிவித்தார். மேலும் அவர் எங்களது நட்பு நாடு எங்களுக்கு தேவையான நேரத்தில் ஆயுதங்களை டெலிவரி செய்யாமல் காலதாமதம் செய்து வருகிறது எனவும் மறைமுக குற்றச்சாட்டை முன் வைத்தார்.
கடந்த 10 ஆண்டு காலமாக அதாவது 2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரஷ்யா தான் ஆர்மேனியாவின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக இருந்தது. அதாவது இந்த காலகட்டத்தில் அர்மினியா வாங்கிய ஆயுதங்களில் சுமார் 94 சதவீதம் ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்டது ஆகும். இப்படி அர்மேனியா ரஷ்யாவை ஆயுத தேவைகளுக்காக மிகப்பெரிய அளவில் சார்ந்திருந்த காலம் இப்போது மாறி உள்ளது. ரஷ்யா ஆர்மேனியாவுக்கு பீரங்கிகள் கவச வாகனங்கள் டாங்கிகள் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் பல குழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகள் சுகோய் 30 போர் விமானங்கள் மற்றும் 300 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடிய இஷ்கந்தர் பலிஸ்டிக் ஏவுகனைகள் போன்ற மிக முக்கியமான ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வந்தது கூடுதல் தகவல் ஆகும்