பல மடங்கு அதிகரித்த இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி; இந்திய ஆயுதங்கள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் அமெரிக்கா !!
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி சுமார் 30 மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடைபெறும் போர் மற்றும் ரஷ்யா உக்கிரன் இடையே நடைபெறும் போர் காரணமாக தங்களது ராணுவ பலத்தை அதிகரிக்க விரும்பும் நாடுகளுக்கு இந்திய ஆயுதங்கள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது இந்திய நிறுவனங்கள் சுமார் 90 நாடுகளுக்கு ஆயுதங்களையும், தொழில்நுட்பங்களையும் துணை அமைப்புகளையும் ஏற்றுமதி செய்து வருகின்றன.
இதில் மிகவும் சிறப்பான தகவல் என்னவென்றால் அமெரிக்காவுக்கு தான் இந்திய ஆயுதங்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல இந்தியா தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா தற்போது சிறு ஆயுதங்கள், ஸ்னைப்பர் துப்பாக்கிகள், துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள், பீரங்கிகளுக்கான குண்டுகள், குண்டு துளைக்காத உடைகள், கவச வாகனங்கள், தலைக்கவசங்கள், டிரோன்கள், அதிவேக தாக்குதல் கலன்கள், இலகுரக நீரடிகணைகள், சிமுலேட்டர்கள் மற்றும் மின்னணு போர் முறை அமைப்புகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்து வருகிறது.
பொதுவாக மியான்மர் தான் இந்தியாவில் இருந்து அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்து வந்த நாடாக இருந்தது. குறிப்பாக குண்டுகள் மற்றும் அவற்றுக்கான ஃபியூஸ்களை பெருமளவில் இறக்குமதி செய்து வந்தது. தற்போது இஸ்ரேல், அர்மேனியா போன்ற நாடுகளும் இந்தியாவிலிருந்து கணிசமான அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகின்றன. இஸ்ரேல் தற்போது இந்தியாவில் உள்ள அந்நாட்டின் ஆயுதங்களை தயாரிக்கும் சிறிய ஆயுதங்கள், குண்டுகள், ஃபியூஸ்கள், ட்ரோன்களுக்கான பாகங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்து வருகிறது. அதே நேரத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் அர்மேனியா போன்ற நாடுகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கனரக ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. அதாவது பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பிரமாஸ் ஏவுகணை அமைப்புகள் மற்றும் அர்மேனியாவிற்கு பீரங்கிகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை ஏற்றுமதி செய்துள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஏற்றுமதியில் ஏறத்தாழ சுமார் 50 சதவிகிதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் இருந்து பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான தொழில்நுட்ப அமைப்புகள், துணை அமைப்புகள் மற்றும் பல்வேறு தளவாடங்களுக்கான பாகங்களை வாங்கி தங்களது தயாரிப்பு பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றன. அதேபோல பிரான்ஸ் நாடும் இந்தியாவிலிருந்து கணிசமான அளவில் பல்வேறு பாதுகாப்பு தளவாடங்களையும் அமைப்புகளையும் இறக்குமதி செய்வதாக கூறப்படுகிறது.
இது பற்றி இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் பேசும்போது இந்தியா முழு ஆயுத அமைப்புகளுக்கான உலக தயாரிப்பு மையமாக மட்டுமின்றி பல்வேறு அமைப்புகள் மற்றும் துணை அமைப்புகளை தயாரிக்கும் மையமாகவும் மாறுவதுதான் இந்தியாவின் லட்சியம் என கூறினார். அந்த வகையில் தற்போது பல்வேறு இந்திய தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பல உலக நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு தயாரிப்பு பணிகளை இந்தியாவில் மேற்கொண்டு வருகின்றன.
உதாரணமாக அமெரிக்காவின் போயிங் நிறுவனமும் இந்தியாவின் டாடா நிறுவனமும் ஹைதராபாத் நகரில் அப்பாச்சி ஹெலிகாப்டர்களுக்கான உடலை தயார் செய்யும் நிறுவனத்தை கூட்டாக அமைத்துள்ளன இந்த 14 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான தொழிற்சாலை இதுவரை 200க்கும் அதிகமான அப்பாச்சி ஹெலிகாப்டர்களுக்கான உடல்களை தயார் செய்துள்ளது மேலும் அவற்றிற்கான 1500 துணை பகுதிகளை தயார் செய்துள்ளது இது தவிர போயிங் 737 விமானத்திற்கான பாகங்களை தயாரித்து வழங்கியுள்ளது.
அதேபோல பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் Dynamatic Technologies நிறுவனம் போயிங் நிறுவனத்தின் சினூக் ரக ஹெலிகாப்டர்களுக்கான
பாகங்களையும், அதே நிறுவனம் தயாரிக்கும் P8 தொலைதூர கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி வேட்டை விமானங்களுக்கான அமைப்புகளையும் தயாரித்து வருகிறது. அதே பெங்களூர் நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மற்றொரு இந்திய நிறுவனமான Rossell Techsys அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், சினூக் கனரக ஹெலிகாப்டர்கள், V-22 வானூர்தி, F – 15 மற்றும் F – 18 போன்ற போர் விமானங்களுக்கான வாங்களேன் தயாரித்து வருகிறது.
மீண்டும் பெங்களூருவை சேர்ந்த SASMOS HET Technologies நிறுவனம் F – 18, F -15 போர் விமானங்களுக்கான மின்னணு பாகங்களை தயாரிக்கிறது. அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான HAL இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் F-18 போர் விமானத்திற்கான பாகம் ஒன்றை தயாரிக்கிறது மற்றும் ஒரு அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான BEL பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் P8I தொலைதூர கண்காணிப்பு மற்றும் நீர்முழ்கி வேட்டை விமானங்களுக்கான IFF மற்றும் வேறு சில அமைப்புகளை தயாரிக்கிறது.
அதேபோன்ற அமெரிக்காவின் Lockheed Martin லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனமும் இந்தியாவின் டாடா TASL – Tata Advanced Systems Limited நிறுவனமும் ஹைதராபாத் நகரத்தில் கூட்டாக அமைத்துள்ள தொழிற்சாலையில் C-130J விமானங்களுக்கான பாகங்களை தயாரிக்கின்றன அதேபோல இங்கு மட்டும்தான் உலகிலேயே S-92 ஹெலிகாப்டர்களுக்கான கேபின்கள் தயாரிக்கப்படுகின்றன அந்த வகையில் தற்போது வரை சுமார் 157 கேபின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது தவிர தற்போது இந்தியாவில் போர் விமானங்களுக்கான இறக்கைகள் கூட தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்திய பாதுகாப்பு தொழில் துறையின் தனியார் நிறுவனங்களில் ஏற்றுமதியில் முதலிடம் வகிப்பது பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் Indo MIM நிறுவனம் ஆகும் இந்த நிறுவனம் ராணுவ தளவாடங்களுக்கான பல்வேறு உலக பாகங்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் ஆகும் இது படம் அமெரிக்கா தென் அமெரிக்கா ஆசியா ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள சுமார் 50க்கும் அதிகமான நாடுகளுக்கு தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது மேலும் இந்த நிறுவனத்திற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தொழிற்சாலைகளும் உள்ளன. இது தவிர SSS Defence , Tonbo Imaging, MKU, Mahindra, Kalyani ஆகிய நிறுவனங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பொதுத்துறை நிறுவனங்களை பொறுத்தவரையில் பல வகையான ராக்கெட்டுகள் பீரங்கி குண்டுகள் மற்றும் பல்வேறு ஆயுதங்களுக்கான குண்டுகளை தயாரிக்கும் Munitions India நிறுவனம் ஏற்றுமதியில் முதலிடம் பெற்றுள்ளது இந்த நிறுவனம் எதையெல்லாம் ஏற்றுமதி செய்கிறது என்பதை பற்றிய தகவல்கள் பொதுவெளியில் இல்லை ஆனால் இந்த நிறுவனத்தின் ஏற்றுமதி வருவாய் பிரமிக்க வைக்கிறது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 6000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி ஆர்டர்களை இந்த நிறுவனம் பெற்றுள்ளது மேலும் எந்தெந்த நாடுகள் இவற்றை வாங்கியுள்ளன என்பதை பற்றி துல்லியமாக தகவல்களை வெளியிடாத நிலையில் இந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறும் போது இந்த நிறுவனம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஐரோப்பா மற்றும் வளைகுடா பகுதிகளை சேர்ந்தவைகள் எனக்கு கூறியுள்ளனர்.
கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் இந்தியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வந்தாலும் மிகக் குறைவான அளவில் சொற்ப வருவாய் தரக்கூடிய மிகவும் சிறிய ஆயுதங்களை மட்டுமே ஏற்றுமதி செய்து வந்தது தற்போது இது பிரமிக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ள நிலையிலும் உண்மையான ஏற்றுமதி திறன் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி போர் விமானங்கள் ஹெலிகாப்டர்கள் டாங்கிகள் பீரங்கிகள் போர்க்கப்பல்கள் ட்ரோன்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் போது மட்டுமே எட்டப்படும் அதுவும் குறிப்பாக தென் கிழக்கு ஆசியா ஆப்பிரிக்கா தென் அமெரிக்கா போன்ற பகுதிகளை சேர்ந்த சிறிய ராணுவ பட்ஜெட் கொண்ட நாடுகளுக்கு இந்தியா தனது தரம்மிக்க ஆனால் விலை மலிவான ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய வேண்டியது கட்டாயம் மேலும் உலக ஆயுத சந்தையில் ஏற்பட்டுள்ள தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இந்தியா தனது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியதும் காலத்தின் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.