எவ்வாறு வெடிக்கும் பேஜர்களை இஸ்ரேல் உருவாக்கியது?

இஸ்ரேலிய அரசு பேஜர்களை தயாரித்த பிறகு அதனை மாற்றி அமைக்கவில்லை, அதனை தயாரித்ததே இஸ்ரேல் தான் என்று தெரிய வருகிறது. இது ஒரு விரிவான, பெரிய சூழ்ச்சியின் விளைவு.

17 செப்டம்பர் மதியம் ஹெஸ்புல்லாக்களின் பேஜர்கள் அனைத்தும் வெடிக்க, அதனால் லெபனானில் மிகப்பெரும் குழப்பம் உருவானது. அது போதாது என்று, பேஜர் வெடித்ததால் இறந்தவரின் இறுதி ஊர்வலத்தில் வாக்கி-டாக்கி வெடித்தது. பல வாக்கி-டாக்கிகள் வெடித்துள்ளன, அதனாலும் ஹெஸ்புல்லாக்களுக்கு இறப்புகள் மற்றும் பாதிப்புகள் உண்டாயின. இது மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளது.

இப்போது அந்த பேஜர்கள் கதை வெளியே வந்துள்ளது.

இஸ்ரேல் தங்களை செல்போன்கள் மூலம் கண்காணித்து போட்டுத் தள்ளுகிறது என்று உணர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளான ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ், இஸ்ரேல் செல்போன்களின் வலைப்பின்னல்களைப் பயன்படுத்தி தங்களுடைய செயலர்களின் இருப்பிடங்களை துல்லியமாக அடையாளம் காண்கிறது என்பதால் அதன் கண்காணிப்பில் இருந்து தமது கூட்டத்தை விலக்க, செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்தார். ஒரு-வழித் தொடர்பு மட்டுமே இருக்கும் பேஜர்களைப் பயன்படுத்தினால் என்ன என்று ஹெஸ்புல்லாக்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே இஸ்ரேல் செயலில் இறங்கி உள்ளது. அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளின்படி, ஹெஸ்புல்லா பேஜர்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளார், அவற்றால் ஒரு பயனரின் இருப்பிடம் மற்றும் பிற தகவல்களைக் கொடுக்காமல் தரவை மட்டும் பெற முடியும்.

உடனடியாக சில ஷெல் கம்பனிகளை இஸ்ரேல் உருவாக்கியது. ஷெல் கம்பனி என்பது வணிக நடவடிக்கைகள் அல்லது குறிப்பிடத்தக்க சொத்துக்கள் இல்லாத நிறுவனம். இந்த வகையான நிறுவனங்கள் சட்டவிரோதமானவை அல்ல, ஆனால் அவை சில நேரங்களில் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது வேறு கதை.

இஸ்ரேல் ஒரு ஷெல் நிறுவனத்தை பல்வேறு நாடுகளில் உருவாக்கி அது ஒரு சர்வதேச பேஜர் உற்பத்தியாளராக காட்டிக்கொள்ளுமாறு செய்தது.

B.A.C. Consulting என்பது ஹங்கேரியை தலைமையகமாகக் கொண்ட ஒரு நிறுவனம் என்றும், அது தைவானிய நிறுவனமான Gold Apolloவின் சார்பாக சாதனங்களைத் தயாரிக்கும் ஒப்பந்தம் கொண்டதாக இருக்குமாறு காண்பிக்கப்பட்டது.

B.A.C நிறுவனம் பலரிடம் பல பேஜர்களுக்கான ஆடர்களை எடுத்தது. ஆனால் அதன் நோக்கம் ஹெஸ்புல்லாவிடம் இருந்து ஆடர்களைப் பெறுவது தான். ஹெஸ்புல்லாவுக்காக தியாரிக்கப்பட்ட பேஜர்கள் தனியாக தயாரிக்கப்பட்டன. அவற்றின் பேட்டரிகளில் வெடிபொருட்கள் வைத்து தயாரிக்கப்பட்டது. அதன் மின்னணுச் சுற்றுகளில் தேவையான நுண்-குறியீடுகள் ஏற்றப்பட்டன.

2022 ஆண்டு சிறிய எண்ணிக்கையில் லெபனானுக்கு அனுப்பப்பட்ட பேஜர்கள், நஸ்ரல்லா செல்போன்களை விட்டோழிக்கச் சொன்ன பிறகு அதிகமாகின.

ஹெஸ்புல்லாக்ள் பேஜர்களை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், போர் ஏற்பட்டால், எங்கு செல்ல வேண்டும் என்று போராளிகளுக்கு தெரிவிக்க பேஜர்கள் பயன்படுத்தப்படும் என்றும் ஹசன் நஸ்ரல்லாஹ் உத்தரவிட்டார்.

ஹெஸ்புல்லாவைப் பொறுத்தவரை, பேஜர்கள் ஒரு தற்காப்பு நடவடிக்கையாக இருந்தன, ஆனால் இஸ்ரேலில், உளவுத்துறை பேஜர்களை “பட்டன்ஸ்” என்று குறிப்பிட்டு, அவை நேரம் கனிந்தால் அழுத்தப்பட வேண்டும் என்று முடிவெடுத்தது, அவ்வளவு தான்.

சென்ற வாரம் இஸ்ரேலியப் பிரதமர், ஹெஸ்புல்லாக்களின் தாக்குதலால் 70000 யூத மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர், அவர்களை மீளமர்த்த என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று சொன்ன செய்தி பலருக்கு நினைவிருக்கலாம். பாதுகாப்புக்கான உறுதியை அம்மக்களின் மனதில் ஊட்ட வேண்டும், அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சொல்லி இருந்தார்.

சென்ற செவ்வாய்க்கிழமை பட்டனகளை அழுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கதை முடிந்தது!

படம்: ஹங்கேரியில் உள்ள பேஜர் தாயாரிப்பு நிறுவனமான B.A.C. Consulting.