இந்தியா வங்கதேசம் இடையேயான எரிபொருள் குழாய் திட்டத்தை நிறுத்திய இந்தியா !!
1 min read

இந்தியா வங்கதேசம் இடையேயான எரிபொருள் குழாய் திட்டத்தை நிறுத்திய இந்தியா !!

IBFP – India Bangladesh Friendship Pipeline இந்தியா வங்காளதேச நட்புறவு எரிபொருள் குழாய் 9த் திட்டத்தை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஷேக் ஹசீனா ஆட்சியில் இருக்கும் போது ஏற்பட்ட போராட்டங்களை தொடர்ந்து இந்தத் திட்டம் மெதுவாக நடைபெற்று வந்தது இந்த நிலையில் வங்கதேசத்தின் பார்பத்திபூர் நகரத்திற்கு பிறகும் இந்த 131 கிலோமீட்டர் நீளம் கொண்ட எரிவாயு குழாயை நீட்டுவதற்கான திட்டங்களை தற்போது இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் திட்டம் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் சிலிகுரியில் இருந்து வங்கதேசத்தின் பார்பத்திபூர் பகுதி வரைக்கும் சுமார் 131 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நட்புறவு எரிபொருள் குழாய் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வங்கதேசத்திற்கு சுமார் பத்து லட்சம் மெட்ரிக் டன்கள் அளவிற்கு டீசலை சப்ளை செய்ய முடியும். இந்த திட்டம் மூலமாக இந்தியா வங்கதேச உறவுகள் ஷேக் ஹசீனா ஆட்சிக்காலத்தில் வலுப்பெட்டன மேலும் வங்கதேசத்திற்கு எரிபொருள் அனுப்பும் சிக்கல்கள் இந்தியாவிற்கும் இறக்குமதி செலவுகள் வங்கதேசத்திற்கும் குறைந்தன.

இந்தத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் தொடர்ந்து பொறுமை காத்து வங்கதேசத்தில் நிலைமை சீரான பிறகு மீண்டும் இது குறித்த இரு தரப்பு பேச்சு வார்த்தைகளை துவங்கி அதற்குப் பிறகு திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்திய அரசு எண்ணுவதாகவும் இதற்கு தற்போது எந்த காலக்கெடுவும் இல்லை எனவும் ஒரு பேர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி கூறுகிறார்.

இந்த எரிவாயு குழாய் மூலமாக ஹை ஸ்பீட் டீசல் வங்கதேசத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கு சப்ளை செய்யப்பட்டு அந்த பகுதிகள் பலன் அடைந்து வருகின்றன. 2023 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அன்றைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரால் திறந்து வைக்கப்பட்ட இந்த எரிவாயு குழாய் சுமார் 377 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது அதில் 288 கோடி ரூபாயை வங்கதேசம் இந்தியாவிடம் இருந்து பெற்ற நிதி மூலமாக தந்துள்ளது.

இது தவிர அசாம் மாநிலத்தின் நுமாலிகர் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வங்கதேசத்திற்கு ரயில் மூலமாக ஆண்டுதோறும் 80ஆயிரம் டன்கள் வரையிலான பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் அதிக சல்பர் எண்ணெய் மற்றும் விலை எண்ணெய் ஆகியவற்றை வங்கதேசத்திற்கு அனுப்புவதற்கான திட்டமும் முன்மொழியப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருள்கள் அண்ணா நாட்டின் கடல்சார் தொழிற்சாலைகள், இதர தொழிற்சாலைகள், டெக்ஸ்டைல் போன்றவற்றிலும் வீடுகளிலும் வாகனம் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் வங்கதேசத்தின் பார்பத்திபூர் நகரத்திற்கு பிறகே உள்ள பகுதிகளுக்கும் எரிபொருள் குழாயை நீட்டுவதற்கு திட்ட முன்மொழியபட்டு பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில் வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் மற்றும் உள்நாட்டு ஸ்திரத்தன்மையற்ற சூழல் காரணமாக இந்தியா தற்போது