கடந்த வெள்ளிக்கிழமை அன்று தென்கொரியாவின் இன்சியான் துறைமுகத்திற்கு ஜெர்மன் கடற்படையின் பெர்லின் ரக சப்ளை கப்பல்களின் வரிசையில் இரண்டாவதான A1412 Frankfurt Am Main மற்றும் பேடன் உற்றம்பெர்க் ரக ஃபிரிகேட் கப்பல்கள் வரிசையில் முதலாவதான FGS Baden Wuttemberg ஆகிய இரண்டு கப்பல்களும் நல்லெண்ண பயண அடிப்படையில் சென்றடைந்தன. இந்த இரண்டு ஜெர்மன் கடற்படை கப்பல்களும் தற்போது இந்த பசிபிக் பிராந்தியத்தில் பயணிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளன அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளன.
இது பற்றி ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளித்த இந்த இரண்டு கப்பல் ஜெர்மன் படையணியின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஆக்செல் ஷூல்ஸ் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் இந்த இரண்டு ஜெர்மன் கப்பல்களின் பயணம் சுதந்திரமான கடல்சார் பயணத்திற்கான ஜெர்மனியின் ஆதரவையும் உறுதியையும் நோக்கத்தையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என கூறியுள்ளார் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் இந்த இரண்டு ஜெர்மன் கடற்படை கப்பல்களும் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையேயான தைவான் ஜல சந்தி வழியாக பயணிக்குமா? என கேள்வி எழுப்பியதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்
ஆனால் அவர் தென் கிழக்கு ஆசியா முதல் ஐரோப்பா முதல் அமெரிக்கா வரையிலான அமைதியான பாதுகாப்பான கடல் பாதைகள் நம் அனைத்து நாடுகளின் செழிப்பான பொருளாதார வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என கூறிய அவரிடம் தைவான்ஜல சந்தியில் ஜெர்மன் கடற்படையின் இரண்டு கப்பல்களும் பயணிக்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு இத்தகைய தகவல்களை பொதுவெளியில் தெரிவிப்பது ராணுவ நடவடிக்கைகளின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் ஆகவே அது பற்றி பதில் அளிக்க முடியாது என மறுத்தார்.
மேலும் அவர் பேசும் போது சர்வதேச சட்ட விதிகள் அடிப்படையிலான ஒழுங்கிற்கு ஜெர்மனி கட்டுப்பட்டு இருப்பதை இந்த ஜெர்மன் கடற்படை நடவடிக்கை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது எனவும் அதே நேரத்தில் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளின் கடற்படைகளுடன் கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்ளவும் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும் எதிர்கால பிரச்சினைகளை தடுக்கும் விதமாக ஒத்துழைப்பை அதிகப்படுத்தவும் இந்த பயண நடவடிக்கை உதவும் எனவும் அவர் கூறினார்
கடந்த மாதம் ஜெர்மனி வடகொரியா உடனான தென்கொரியாவின் எல்லையை பாதுகாக்கவும் கண்காணிக்கவும் உதவும் வடகொரியா உடன் போர் ஏற்பட்டால் தென் கொரியாவை பாதுகாக்கவும் அமெரிக்கா தலைமையில் ஏற்படுத்தப்பட்ட UNC – United Nations Command ஐக்கிய நாடுகள் சபையின் கட்டளையகத்தின் 18 ஆவது உறுப்பு நாடாக இணைந்தது ஏற்கனவே இதில் அமெரிக்கா கனடா இங்கிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பிரான்ஸ் பெல்ஜியம் நியூசிலாந்து பிலிப்பைன்ஸ் துருக்கி தாய்லாந்து தென் ஆப்பிரிக்கா கிரீஸ் கொலம்பியா டென்மார்க் நார்வே மற்றும் இத்தாலி ஆகிய 17 நாடுகள் உள்ளது கூடுதல் தகவலாகும்.
அதேபோல ஜெர்மன் கடற்படையின் இரண்டு கப்பல்களையும் தென்கொரியாவிற்கு வரவேற்கும் நிகழ்வில் பேசிய தென்கொரியாவுக்கான ஜெர்மன் தூதுவர் ஜார்ஜ் ஷ்கிமிட் இந்த நிகழ்வில் பேசும்போது வடகொரியாவும் ரஷ்யாவும் இந்த ஆண்டு ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன எனவும் வடகொரியா ரஷ்யாவுக்கு உக்கரின் போரில் ஆதரவாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருவதாக குற்றம் சாட்டப்படும் நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைனில் நடக்கும் நிகழ்வுகள் தென்கொரியாவை நேரடியாக பாதிப்பதாகவும் தென் கொரியாவில் நடைபெறும் நிகழ்வுகள் நேரடியாக ஜெர்மனியை பாதிப்பதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்