கடந்த சனிக்கிழமை இரவு அன்று உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவராஜ்பூர் பகுதியில் ஹரியானா மாநிலத்தின் பீவானியிலிருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயக்ராஜ் பயணித்துக் கொண்டிருந்த காலிந்தி எக்ஸ்பிரஸ் ரயிலை தவிர்க்க சதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது கடந்த சனிக்கிழமை இரவு அன்று இந்த ரயில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ரயில் ஓட்டுநர் அதி வேகமாக பயணித்துக் கொண்டிருந்த போதும் தண்டவாளத்தில் சிலிண்டர் கிடப்பதை பார்த்ததும் பிரேக்கை அழுத்தி உள்ளார் ஆனாலும் ட்ரெயினின் வேகம் காரணமாகவும் ரயிலுக்கும் சிலிண்டருக்கும் இடையேயான தூரம் மிகக் குறைவாக இருந்ததாலும் ஓட்டுனரின் முயற்சியை மீறி ரயில் அந்த சிலிண்டரை இடித்த நிலையில் அந்த சிலிண்டர் தண்டவாளத்திலிருந்து வெளியே போய் விழுந்துள்ளது.
உடனடியாக ரயில் ஓட்டுநர் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு மூத்த ரயில்வே அதிகாரிகளும் ரயில்வே பாதுகாப்பு படையினரும் உத்தரப் பிரதேசம் மாநில காவல்துறையினரும் விரைந்து சென்று விசாரணைகளை நடத்தினார் தொடர்ந்து உத்திரபிரதேச மாநில காவல்துறையின் சார்பில் தடையியல் குழு வரவழைக்கப்பட்டு தடையவியல் சோதனை நடத்தப்பட்டதாக மூத்த உத்தரப்பிரதேச மாநில காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
மேலும் அவர்கள் பேசும்போது சம்பவ இடத்தில் அந்த எரிவாயு சிலிண்டரும் பெட்ரோல் குண்டு போன்ற ஒரு பாட்டிலும் ஒரு மிட்டாய் வாங்கிய பெட்டியும் கிடைத்ததாகவும் அந்த பெட்டி கண்ணூச் பகுதியில் உள்ள சிப்ரம்மாவு பகுதியில் உள்ள ஒரு கடையில் வாங்கப்பட்டதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு ஆறு சிறப்பு குழுவினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் இதனை ரயிலை கவிழ்க்க செய்யப்பட்ட சதி என அறிவித்துள்ள நிலையில் கடந்த சில மாதங்களில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி வாரணாசி அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இதை கான்பூர் பகுதி அருகே தண்டவாளத்தில் கிடந்த ஏதோ ஒரு பெரிய கல் போன்ற பொருள் மீது மோதியதில் ரயிலின் சுமார் 22 பெட்டிகள் தடம் புரண்டது குறிப்பிடத்தக்கதாகும்.