BEL மற்றும் DRDO இணைந்து உருவாக்கும் ஸ்டெல்த் விமானங்களையும் கண்டறியும் சாஸ்திரா தொலைதூர ரேடார் !!

இந்திய அரசுக்கு சொந்தமான பொது துறையை சேர்ந்த இந்தியாவின் பிரதான பாதுகாப்புத்துறை மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் BEL – Bharat Electronics Limited தனது நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையில் சாஸ்திரா என்ற பெயர் கொண்ட ஒரு LRR – Long Range Radar தொலைதூர ரேடார் அமைப்பை உருவாக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த சாஸ்திரா தொலைதூர ரேடாரை முதலில் வடிவமைத்தது நாட்டின் பிரதான ஆயுத ஆராய்ச்சி அமைப்பான DRDO – Defence Resaerch & Development Organisation பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். இந்த சாஸ்திரா தொலைதூர ரேடார் மிகுந்த தொலைவுக்கு அதாவது சுமார் 2000 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் இதன் கண்காணிப்பு திறன்கள் இருக்கும் எனவும் இதனால் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை கூட கண்டுபிடிக்க முடியும் என கூறப்படுகிறது.

இப்படி சுமார் 2000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் கூட வரும் எதிரி வான் இலக்குகளை துல்லியமாக கண்டறியும் திறன் கொண்ட இந்த சாஸ்திர தொலைதூர ரேடார் அமைப்பு முன்கூட்டியே எதிரிகளின் நகர்வு பற்றிய தகவல்களை நமக்கு அளித்து களத்தில் நிலவும் சூழல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கையோடு செயல்படும் திறன்களை நமக்கு அளிப்பதால் இது இந்தியாவின் பாதுகாப்பு திறன்களுக்கு மிகவும் இன்றியமையாத சொத்தாக அமையும் என்றால் மிகை ஆகாது.

மேலும் இந்த சாஸ்திர தொலைதூர ரேடார் அமைப்பின் மிகப் பிரதான சிறப்பம்சம் என்னவென்றால் இன்றைய நவீன போர்முறையில் தற்காப்பு ஆயுதங்களை ஏமாற்ற வடிவமைக்கப்பட்ட ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பம் மற்றும் ஸ்டெல்த் திறன்களை கொண்ட மனிதர்கள் இயக்கும் போர் விமானங்கள் ஆனாலும் சரி மிகச் சிறிய தொலைதூரத்தில் இருந்து ரிமோட் மூலம் இயக்கும் ஆளில்லா வானூர்திகள் ஆனாலும் சரி அத்தகைய இலக்குகளையும் இதனால் மிகவும் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும் என்பது ஆகும்

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரிகள் இந்த சாஸ்திர ரேடார் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் உள்ளதாகவும் மிக விரைவில் இதனுடைய கள சோதனைகள் நடைபெறும் எனவும் இது மிகவும் விரைவாக இந்த சாஸ்திர தொலைதூர ரேடாரை களத்தில் பயன்படுத்தும் சூழலை உறுதி செய்வதற்கான முக்கியமான படியாக அமையும் எனவும் கூறுகின்றனர்.

இந்த சாஸ்திரா தொலைதூர ரேடார் அமைப்பை பற்றி கூறப்படும் மற்றொரு முக்கிய தகவல் என்னவென்றால் இது இந்தியாவின் பலஸ்டிக் ஏவுகணைகள் தற்காப்பு அமைப்பிற்காக உருவாக்கப்பட்ட தொலைதூர ரேடார் அமைப்பின் மற்றொரு ரகம் என்பதாகும் அதாவது இந்தியாவை நோக்கி ஏவப்படும் பல்ஸ்டிக் ஏவுகணைகளை மிகுந்த தொலைதூரத்தில் கண்டுபிடிப்பது அவசியமாகும் அதற்கு இத்தகைய தொலைதூரக் கண்டுபிடிப்பு திறன்கள் கொண்ட ரேடார் அத்தியாவசியமாகும் அப்படிப்பட்ட ரேடாரின் திறன்களை பயன்படுத்தி ஒரு சேர பலிஸ்டிக் ஏவுகணைகள் ஸ்டெல்த் போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை கண்டுபிடிக்கும் மேம்படுத்தப்பட்ட தளவாடமாக தற்போது உருவாக்கியுள்ளனர் என்பதாகும்

இந்தியா தனது பரந்த வான் வெளியே பாதுகாத்து கொள்வதற்கு மிகவும் வலுவான ஒரு வான் பாதுகாப்பு கட்டமைப்பு தேவை இந்த சாஸ்திர தொலைதூர கண்காணிப்பு ரேடார் முக்கியமான பங்கை வகிக்கும் மேலும் அதனுடைய மிகுந்த தொலைவில் வரும் மிகச் சிறிய இலக்குகளை கூட கண்டுபிடிக்கும் திறன் இந்தியாவின் வான்வெளியை இந்தியாவின் எதிரிகளிடம் இருந்து ஏற்படும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவதில் இன்றியமையாததாக விளங்கும் என்பது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்