இந்தியாவால் எங்கள் மீது திணிக்கப்பட்டது வங்க தேசத்தின் தேசிய கீதத்தை மாற்ற அங்கு எழுந்துள்ள கோரிக்கை !!
1 min read

இந்தியாவால் எங்கள் மீது திணிக்கப்பட்டது வங்க தேசத்தின் தேசிய கீதத்தை மாற்ற அங்கு எழுந்துள்ள கோரிக்கை !!

சமீபத்தில் வங்கதேசத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் இந்தியாவின் புகழ்பெற்ற நோபல் பரிசு பெற்ற கவிஞரான ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் இயற்றப்பட்டது தான் அமர் சோனார் பங்களா எனும் வங்கதேசத்தின் தேசிய கீதம் ஆகும் எனவும் கடந்த 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரின் வெற்றியை தொடர்ந்து இந்தியாவால் இந்த பாட்டு வங்கதேசத்தின் தேசிய கீதமாக திணிக்கப்பட்டதாகவும் ஆகவே இதனை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார் இதைத்தொடர்ந்து வங்கதேசம் முழுவதும் வங்கதேசத்தின் தேசிய கீதத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக ஆங்காங்கே எழுந்தது

இந்த நிலையில் வங்கதேச இடைக்கால அரசின் சார்பாக மத விவகாரங்கள் ஆலோசகர் ஏ எஃப் எம் காளித் ஹுசைன் இப்படி வங்கதேசத்தின் அமர்சனார் பங்களா என்ற தேசிய கீதத்தை மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் தங்களின் அரசுக்கு இல்லை எனவும் இப்படி பிரச்சினைகளை உருவாக்கும் எதையும் தங்கள் அரசு செய்யாது எனவும் உறுதியளித்து பேசினார் மேலும் அவர் மத தலங்கள் மீதான தாக்குதலையும் வன்மையாக கண்டித்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று வங்கதேசம் முழுவதும் நாட்டின் மிக முக்கியமான கலாச்சார அமைப்பான “உதிச்சி ஷில்பிகோஸ்தி” நடத்திய நிகழ்வில் பல லட்சக்கணக்கான வங்கதேசத்தவர்கள் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பொது வெளிகளில் திரண்டு தேசிய கீதத்தை இடைவெளி இன்றி தொடர்ந்து பல மணி நேரம் பாடிக் கொண்டிருந்தனர் இதைத் தொடர்ந்து வங்கதேச தேசிய கொடியை ஏற்றி பல்வேறு தேசபக்தி மிக்க நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.

இந்தப் பிரச்சனைக்கு காரணம் வங்கதேசத்தின் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் முன்னாள் தலைவரான குலாம் ஆசாமின் மகனும் வங்கதேச ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரியான பிரகேடியர் ஜெனரல். அப்துல்லாஹில் அமான் அஸ்மி ஆவார். இவர் வங்கதேசத்தின் தற்போதைய தேசிய கீதம் காலணி ஆதிக்க காலத்தை நினைவுபடுத்தும் பாடல் எனவும் ஆங்கிலேயர்களால் பிரிட்டிஷ் இந்தியாவில் வங்கம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு பின்னர் ஒன்று சேர்க்கப்பட்ட போது ரவீந்திரநாத் தாகூர் எழுதப்பட்ட பாடல் தான் அமர் சோனார் பங்களா எனவும்

இப்படி காலனி அதிக காலகட்டத்தை நினைவுபடுத்தும் மேலும் இரண்டு வங்கங்களையும் ஒன்றிணைக்கும் போது ஏற்றப்பட்ட பாடல் எப்படி ஒரு இறையாண்மை மிக்க சுதந்திர நாடான வங்கதேசத்திற்கு ஏற்றதாக அமையும் எனவும் இது கடந்த 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் முடிவில் வெற்றி பெற்ற பிறகு இந்தியாவால் வங்கதேசத்தின் மீது திணிக்கப்பட்ட பாடல் எனவும் ஆகவே தற்போது வங்கதேசத்தின் தேசிய கீதமாக தகுதியுள்ள பல பாடல்கள் உள்ளதாகவும் வங்கதேச இடைக்கால அரசு உடனடியாக ஆணையம் ஒன்றை அமைத்து இதில் ஒரு பாடலை வங்கதேசத்தின் புதிய தேசிய கீதமாக தேர்வு செய்து அறிவிக்க வேண்டும் எனவும் செவ்வாய்க்கிழமை அன்று ஊடகவியலாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.

இவரை முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி ஆட்சியில் இருக்கும் போது கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் தற்போது இடைக்கால அரசு அவரை விடுவித்துள்ளது அதை தொடர்ந்து அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தான் இந்த தகவல்களை கூறியுள்ளார் அப்போது மேலும் அவர் பேசுகையில் வங்கதேசத்தின் புதிய தேசிய கீதம் வங்கதேசத்தின் அடையாளங்களையும் தனித்துவத்தையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் எனவும் அதேபோல வங்கதேசத்தில் அரசியல் சாசனத்தில் இஸ்லாமிய கொள்கைகளுடன் பொருந்தி போகும் வகையில் மாற்றங்களை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அப்துல்லாஹில் அமான் அஸ்மியின் இந்த கோரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் பரவலாக ஆதரவு குரல்கள் எழுந்தன பலர் வங்கதேசத்தின் சமூக வலைதள பக்கங்களில் பல்வேறு பாடல்களை மேற்கோள் காட்டி அந்த பாடல்களை வங்கதேசத்தின் புதிய தேசிய கீதமாக அறிவிப்பதை எது தடை செய்கிறது என கேள்விகளை எழுப்பி பதிவேற்றி இருந்தனர் மேலும் வங்கதேசம் முழுவதும் சிறுபான்மையினராக வாழும் இந்துக்களின் மத வழிபாட்டு தலங்கள் கடைகள் வணிக தலங்கள் வீடுகள் உள்ளிட்டவை தாக்கப்படுகின்றன இது அனைத்தும் வங்கதேசத்தில் நிலவும் இந்திய எதிர்ப்பு மனோபாவத்தை பிரதிபலிக்கிறது என்றால் மிகை ஆகாது.

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராகவும் பிற சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள் முதலில் வங்கதேச தரப்பில் மறுக்கப்பட்டாலும் பிறகு வங்கதேசத்தின் இடைக்கால அரசாலும் அதனுடைய பிரதான ஆலோசகரான முனைவர் முகமது யூனுஸ் அவர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது இடைக்கால அரசை சேர்ந்த அனைவரும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்துள்ள நிலையில் இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளும் இந்த வங்கதேசத்தில் நிலவும் மனித உரிமை மீறல்களை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து இது குறித்த தங்களது கவலைகளை வங்கதேச அரசிடமும் பொதுவெளியிலும் வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்