சிறைபிடிக்கப்பட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படைவீரரை திரும்ப ஒப்படைத்த வங்கதேச எல்லை பாதுகாப்பு படை !!
1 min read

சிறைபிடிக்கப்பட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படைவீரரை திரும்ப ஒப்படைத்த வங்கதேச எல்லை பாதுகாப்பு படை !!

கடந்த புதன்கிழமை அன்று வங்கதேச எல்லை பாதுகாப்பு படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை மீண்டும் இந்திய தரப்பிடம் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர் இந்த விவகாரம் தொடர்பாக முன்னமே இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினரிடம் தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருந்ததும் தொடர்ந்து வீரரை உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்தி இருந்தனர்.

அதாவது கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி வங்கதேச எல்லை பாதுகாப்பு படையுடன் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய கொடி சந்திப்பிற்குப் பிறகு மீண்டும் முகாமுக்கு இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தபோது தினாச்பூர் செக்டாரில் விரால் பகுதியில் உள்ள சர்வதேச எல்லையில் இந்திய எல்லைக்குள் புகுந்த வங்கதேச பகுதி ஆடு மாடுகளை இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் விரட்டியுள்ளார்.

அப்போது தினாஜ்பூர் செக்டாரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரரை அத்துமீறி வங்கதேச எல்லைக்குள் நுழைந்ததற்காக சிறை பிடித்தனர், இதனைத் தொடர்ந்து தினாஜ்பூர் செக்டருக்கு பொறுப்பான வங்கதேச எல்லை பாதுகாப்பு படை கமாண்டர் கர்னல். எம் டி ஆரிஃபுல் இஸ்லாம் இந்திய வீரர் சர்வதேச எல்லை கடந்து வங்கதேச எல்லைக்குள் அத்துமீறி புகுந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் நடந்த சம்பவத்திற்கு முழு விளக்கத்தை அளித்து இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரரை தனது கடமையை செய்யும்போது வங்கதேச எல்லை பாதுகாப்பு படை தவறுதலாக கைது செய்து தவறிழைத்துள்ளதாக கூறி தனது கண்டனங்களை பதிவு செய்து சிறைபிடிக்கப்பட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரரை உடனடியாக திரும்ப ஒப்படைக்குமாறு வலியுறுத்தினார் இதைத் தொடர்ந்து இருதரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் மீண்டும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்