பாகிஸ்தானிடம் இருந்து பெருமளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் வங்கதேசம் !!
வங்கதேசம் பாகிஸ்தானிடம் இருந்து சுமார் 40,000 பீரங்கி குண்டுகள், 2000 டாங்கி குண்டுகள், நாற்பதாயிரம் கிலோ RDX ஆர் டி எக்ஸ் வெடி பொருள் மற்றும் 2900 அதிக சக்தி வாய்ந்த கணைகள் ஆகியவற்றை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையேயான உறவுகள் வலுப்படுவதையும் அதே நேரத்தில் வங்கதேசத்தில் அதிகரிக்கும் கவலைக்குரிய இந்திய எதிர்ப்பு சூழலையும் சுட்டிக்காட்டுகிறது.
வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் அதைத்தொடர்ந்து அமைக்கப்பட்ட இடைக்கால அரசு தற்போது வங்கதேசத்தை அரசியல் குழப்பத்தில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் கடந்த ஆண்டு வெறும் 12 ஆயிரம் குண்டுகளை மட்டுமே பாகிஸ்தானிடம் இருந்து வாங்கிய வங்கதேசம் இந்த ஆண்டு ஏறத்தாழ 45 ஆயிரம் குண்டுகளையும் 40,000 கிலோ ஆர் டி எக்ஸ் வெடிபொருளையும் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதற்கு முன்னரும் வங்கதேசம் பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி உள்ள நிலையில் இதுவரையிலும் இந்த அளவுக்கு ஆயுதங்கள் வாங்கியதில்லை ஆகவே இந்த பிரம்மாண்ட ஆயுத ஒப்பந்தம் மற்றும் அது கையெழுத்தாகி இருக்கும் நேரம் வங்கதேசத்தின் தேசிய பாதுகாப்பு கொள்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை தெள்ளத் தெளிவாக காண்பிக்கிறது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து பாகிஸ்தான் வங்கதேசத்திற்கு ஆயுதங்களை வருகிற செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மூன்று கட்டங்களாக டெலிவரி செய்ய உள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் POF – Pakistan Ordinance Factory பாகிஸ்தான் ஆயுத தொழிற்சாலை நிறுவனத்தின் ஏற்றுமதி பிரிவின் பொது மேலாளர் அந்த நிறுவனத்தின் பிறப்பிரிவுகளின் பொது மேலாளர்களுக்கு எந்தெந்த ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என பட்டியலிடப்பட்ட கடிதத்தை அனுப்பியுள்ளார். இப்படிதான் இந்த ஒப்பந்தம் வெளிவளவிற்கு தெரிய வந்துள்ளது.
முன்னர் கலிதா ஜியாவின் ஆட்சியில் பாகிஸ்தான் வங்கதேசம் உடன் நெருக்கமாக இருந்தது ஆனால் ஷேக் ஹசீனா ஆட்சியில் பாகிஸ்தான் ஒரம் கட்டப்பட்டது இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தொடர்ந்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முனைவர் முஹம்மத் யூனுஸ் பதவி வகுத்து வரும் நிலையில் இது பாகிஸ்தானுக்கு வங்கதேசத்துடன் ஆன உறவுகளை மீண்டும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. தற்போது இந்த ஆயுத ஒப்பந்தம் தெற்காசிய பிராந்தியத்தின் புவிசார் அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நமக்கு நன்கு உணர்த்துகிறது.
ஏற்கனவே திரிபுராவில் உள்ள அணையை இந்திய திறந்து விட்டதால்தான் வங்கதேசத்தின் 8 மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கு சந்தித்ததாகவும் அதேபோல வேண்டுமென்று வங்கதேசத்தவர்களுக்கு இந்தியா விசா மறுப்பதாகவும் மற்றும் விசா வழங்குவதற்கு தாமதம் செய்வதாகவும் குற்றச்சாட்டுகளை வங்கதேசம் முன்வைத்து வரும் நிலையில் வங்கதேசத்தில் நிலவும் பொதுவான இந்திய எதிர்ப்பு மனப்பான்மையும் இதனுடன் சேர்ந்து இந்தியாவுக்கு வங்கதேசத்துடன் நான் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் பல்வேறு புவிசார் அரசியல், பிராந்திய அரசியல் மற்றும் ராஜாங்க சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது.
எனினும் தற்போதைய வங்கதேச இடைக்கால அரசு இந்தியாவுடன் நான் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக அறிவித்துள்ளது தொடர்ந்து வங்கதேசத்தின் வெளியுறவு கொள்கை சார்ந்த சிக்கல்களை முன்வைத்து அது சார்ந்த இரு தரப்பு உறவுகள் தொடர்பான ஒத்துழைப்புகளை அதிகரிக்க உறுதி பூண்டுள்ளனர், இது எப்படியோ இந்த மாற்றங்கள் எல்லாம் எதற்கு வித்திடும் என்பதையும் தெற்காசிய பிராந்தியத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.