அக்னி-4 அணு ஆயுத ஏவுகணையின் சோதனை மீண்டும் வெற்றி !!
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒடிசா மாநிலத்தின் சண்டிப்பூர் பகுதியில் அமைந்துள்ள DRDO – Defence research and development organisation பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான ITR – Integrated test range ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து அக்னி 4 அணு ஆயுத ஏவுகணை மீண்டும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த அக்னி 4 அணு ஆயுத பலிஸ்டிக் ஏவுகணை சோதனையை NCA – Nuclear Command Authority அணு ஆயுத தாக்குதல் ஆணையத்தின் அங்கமான இந்திய ராணுவத்தின் அணு ஆயுதங்களுக்கும் அணு ஆயுத தாக்குதல்கள் நடத்தும் பொறுப்பையும் கொண்ட SFC – Strategic forces command என்ற ஒருங்கிணைந்த படையின் மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நடத்தியதாகவும் இந்த சோதனையில் அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த அக்னி 4 அணு ஆயுத தாக்குதல் ஏவுகணையின் தாக்குதல் வரம்பு மற்றும் சுமைதிறன் தற்போது அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த 20 மீட்டர் நீளம் கொண்ட 17 டன்கள் எடை கொண்ட ஏவுகணையால் தற்போது ஆயிரம் கிலோ வழக்கமான அல்லது அணு ஆயுத குண்டை சுமந்து சுமார் நான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை மிகவும் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும் என கூறப்படுகிறது. இந்தத் திறனை தான் சோதனையில் சோதித்ததாகவும் பல இடங்களில் நிறுவப்பட்டிருந்த சென்சார்கள் மற்றும் போர்க்கப்பல்கள் ஆகியவற்றின் மூலம் இதை உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த அக்னி – 4 அணு ஆயுத தாக்குதல் பலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா இதற்கு முன்பு நவம்பர் 15 2011ஆம் ஆண்டு முதல் முறையாகவும் தொடர்ந்து செப்டம்பர் 19 2012, 2014 ஜனவரி 20 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளிலும், நவம்பர் 9 2015, ஜனவரி 2 2017, டிசம்பர் 23 2018 மற்றும் ஜூன் 6 2022 ஆகிய நாட்களில் சோதனை வெற்றிகரமாக ஒவ்வொரு முறையும் ஏதேனும் தொழில்நுட்ப மாற்றங்களை செய்து அவற்றை சோதித்துள்ளது கூடுதல் சிறப்பு வாய்ந்த தகவலாகும்.
இந்த ஆண்டு ஏப்ரல் நான்காம் தேதியன்று அக்னி பிரைம் AGNI PRIME என்ற அடுத்த தலைமுறை அதிநவீன அணு ஆயுத தாக்குதல் பலிஸ்டிக் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் Strategic forces command என்ற அணு ஆயுத தாக்குதல் கட்டளையகம் ஆகியவை ஒருங்கிணைந்து குடிச மாநிலத்தில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவி சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.