சுமார் 4000கும் அதிகமான ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை இஸ்ரேல் தாக்கியது எப்படி வெளியான புதிய தகவல்கள் !!
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத் நடத்திய மிகவும் துல்லியமான பேஜர் வெடிகுண்டு தாக்குதல்களில் சுமார் நான்காயிரத்திற்கு அதிகமான ஹிஸ்புல்லா இயக்க உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனை சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் சமீப கால ராணுவ போர்முறை வரலாற்றில் மிகவும் திறன் மிகுந்த மிகவும் துல்லியமான மிகப்பெரிய அளவிலான தாக்குதல் என குறிப்பிடுகின்றனர், தற்போது இந்த தாக்குதல் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத் ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கத்தின் சப்ளை செயினை ஊடுருவி அந்த இயக்கத்திற்காக ஆர்டர் செய்யப்பட்டு இருந்த பல்லாயிரக்கணக்கான பேஜர் அமைப்புகளில் வெடி மருந்துகளை வைத்து மீண்டும் பத்திரமாக ஹிஸ்புல்லா இயக்கத்திடமே ஒப்படைத்துள்ளது அதாவது இந்த பேஜர் அமைப்புகளில் “பென்ட்டா எரித்ரிட்டால் டெட்ரா நைட்ரேட்” Penta Erithritol Tetra Nitrate PETN எனப்படும் அதிக சக்தி வாய்ந்த வெடி மருந்தை சில கிராம் அளவுகளில் இந்த பேஜர் அமைப்புக்குள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலிய அரசு பேஜர்களை தயாரித்த பிறகு அதனை மாற்றி அமைக்கவில்லை, அதனை தயாரித்ததே இஸ்ரேல் தான் என்று தெரிய வருகிறது. இது ஒரு விரிவான, பெரிய சூழ்ச்சியின் விளைவு. செப்டம்பர் 17ஆம் தேதி மதியம் ஹெஸ்புல்லாக்களின் பேஜர்கள் அனைத்தும் வெடிக்க, அதனால் லெபனானில் மிகப்பெரும் குழப்பம் உருவானது. அது போதாது என்று பல வாக்கி-டாக்கிகள் வெடித்துள்ளன,இது மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் தங்களை செல்போன்கள் மூலம் கண்காணித்து போட்டுத் தள்ளுகிறது என்று உணர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளான ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ், இஸ்ரேல் செல்போன்களின் வலைப்பின்னல்களைப் பயன்படுத்தி தங்களுடைய செயலர்களின் இருப்பிடங்களை துல்லியமாக அடையாளம் காண்கிறது என்பதால் அதன் கண்காணிப்பில் இருந்து தமது கூட்டத்தை பாதுகாக்க செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்து ஒரு-வழித் தொடர்பு மட்டுமே இருக்கும் பேஜர்களைப் பயன்படுத்தினால் நல்லது என அறிவிக்க இதுபற்றி ஹெஸ்புல்லாக்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே இஸ்ரேல் செயலில் இறங்கி உள்ளது.
அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளின்படி, ஹெஸ்புல்லா பேஜர்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளார், அவற்றால் ஒரு பயனரின் இருப்பிடம் மற்றும் பிற தகவல்களைக் கொடுக்காமல் தரவை மட்டும் பெற முடியும். இதை இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத் பயன்படுத்தி கொள்ள முடிவு செய்தது
உடனடியாக ஷெல் கம்பனிகளை பல்வேறு நாடுகளில் இஸ்ரேல் உருவாக்கியது ஷெல் கம்பெனிகள் என்றால் எவ்வித வர்த்தக செயல்பாடுகளையும் மேற்கொள்ளாத டம்மி நிறுவனங்கள் ஆகும் ஆனால் இவற்றை வேறு காரியங்களுக்கு பயன்படுத்தி கொள்ள அதாவது நேரடியாக வெளிப்படையாக செய்ய முடியாத காரியங்களை திரை மறைவில் செய்வதற்காக உருவாக்கப்பட்டவை ஆகும். அந்த வகையில் இஸ்ரேல் ஒரு ஷெல் நிறுவனத்தை பல்வேறு நாடுகளில் உருவாக்கி அது ஒரு சர்வதேச பேஜர் உற்பத்தியாளராக காட்டிக்கொள்ளுமாறு செய்தது.
B.A.C. Consulting என்பது ஹங்கேரியை தலைமையகமாகக் கொண்ட ஒரு நிறுவனம் என்றும், அது தைவானிய நிறுவனமான Gold Apolloவின் சார்பாக சாதனங்களைத் தயாரிக்கும் ஒப்பந்தம் கொண்டதாக இருக்குமாறு காண்பிக்கப்பட்டது. B.A.C நிறுவனம் பலரிடம் பல பேஜர்களுக்கான ஆடர்களை எடுத்தது. ஆனால் அதன் நோக்கம் ஹெஸ்புல்லாவிடம் இருந்து ஆடர்களைப் பெறுவது தான்.
ஹெஸ்புல்லாவுக்காக தியாரிக்கப்பட்ட பேஜர்கள் தனியாக தயாரிக்கப்பட்டன. அவற்றின் பேட்டரிகளுக்கு அருகே வெடிபொருட்கள் வைத்து தயாரிக்கப்பட்டது. இவற்றை வெடிக்க செய்வதற்கு அவற்றின் மின்னணுச் சுற்றுகளில் தேவையான நுண்-குறியீடுகள் ஏற்றப்பட்டன.
2022 ஆண்டு சிறிய எண்ணிக்கையில் லெபனானுக்கு அனுப்பப்பட்ட பேஜர்கள், நஸ்ரல்லா செல்போன்களை விட்டோழிக்கச் சொன்ன பிறகு அதிகமாகின.
ஹெஸ்புல்லாக்ள் பேஜர்களை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், போர் ஏற்பட்டால், எங்கு செல்ல வேண்டும் என்று போராளிகளுக்கு தெரிவிக்க பேஜர்கள் பயன்படுத்தப்படும் என்றும் ஹசன் நஸ்ரல்லாஹ் உத்தரவிட்டார்.
ஹெஸ்புல்லாவைப் பொறுத்தவரை, பேஜர்கள் ஒரு தற்காப்பு நடவடிக்கையாக இருந்தன, ஆனால் இஸ்ரேலில், உளவுத்துறை பேஜர்களை “பட்டன்ஸ்” என்று குறிப்பிட்டு, அவை நேரம் கனிந்தால் அழுத்தப்பட வேண்டும் என்று முடிவெடுத்தது, அவ்வளவு தான்.
இந்த வெடி மருந்துகள் பேஜர் அமைப்புகளில் உள்ள பேட்டரிகளுக்கு மிக அருகாமையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் இவற்றை ஒரு ஸ்விட்ச் மூலம் மிகவும் தொலைவில் இருந்து கொண்டு வெடிக்க வைத்ததாகவும் இந்த வெடி மருந்துகள் பொருத்தப்பட்ட பேஜர் அமைப்புகள் வெடிப்பதற்கு முன்பாக சில முறை பீப் சப்தம் வெளியிடும்படி வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும் அதேபோல ஒரு சில முக்கிய ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பயன்படுத்தும் பேஜர்கள் குறுஞ்செய்திகளை பெற்றதாகவும் அவற்றை பார்ப்பதற்காக கண்களுக்கு அருகில் கொண்டு சென்ற பிறகு அவை வெடித்து சிதறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது பேட்டரிகளை ஏதோ ஒரு சிக்னல் மூலம் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் சூடாக செய்ததாகவும் இவை வெளியிடும் அதிக வெப்பம் காரணமாக இவற்றிற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த பெண்டா எரித்ரிட்டால் டெட்ரா நைட்ரேட் வெடிமருந்து சூடாகி வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது ஆனால் இந்த பேஜர் அமைப்புகளை இஸ்ரேல் தற்போது பயன்படுத்த எண்ணவில்லை எனவும்
எதிர்கால தேவை கருதி அவற்றை பயன்படுத்துவதற்கு வேறு திட்டங்களை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது இதற்கிடையில் திட்டத்தில் மாற்றம் நிகழ்ந்ததாகவும் சென்ற செவ்வாய்க்கிழமை பட்டனகளை அழுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதாவது இஸ்ரேல் ஹிஸ்புல்லா உடன் ஒரு முழு அளவிலான போரை துவங்கும் சூழல் ஏற்பட்டு லெபனானை படையெடுக்க நேர்ந்தால் அப்போது போர் துவங்கி மும்முரமாக நடைபெறும் நேரத்தில் இந்த பேஜர் அமைப்புகளை படிக்க வைத்து ஹிஸ்புல்லா படைகளை போர்க்களத்தில் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்க வைப்பதன் மூலம் போரில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும் பெரிய வெற்றியையும் பெறுவதற்கும் இயக்கத்தை போர்க்களத்திலேயே முடக்கி அதன் பிறகு மரண அடி கொடுத்து வெற்றியை பெறவும் தான் திட்டமிட்டு இருந்தது.
ஆனால் இரண்டு ஹெஸ்புல்லா இயக்க உறுப்பினர்கள் இந்த பேஜர் அமைப்புகளில் வெடிகுண்டுகள் உள்ளதை சந்தேகித்து அதை உறுதி செய்ததாகவும் அதைத்தொடர்ந்து தான் குறித்து வைத்திருந்த காலத்திற்கு முன்னதாகவே இந்த அமைப்புகளை வெடிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது ஒரு சில நாட்கள் முன்பாக முதலாவது ஹிஸ்புல்லா பயங்கரவாதி ஒருவன் பேஜர் அமைப்புகளில் வெடி மருந்துகள் இருப்பதை கண்டுபிடித்தபோது அவன் கொல்லப்பட்டான் சில நாட்களுக்குப் பிறகு தற்போது இரண்டாவதாக ஒருவன் இதை உறுதி செய்ததை தொடர்ந்து இஸ்ரேல் இனியும் காலதாமதம் செய்வது நல்லதல்ல எனவும் ஒன்றும் செய்யாமல் விட்டால் அனைத்தும் வீணாகிவிடும் என்பதன் அடிப்படையிலும் உடனடியாக முடிவெடுத்து தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும்
இதன் மூலமாக ஏன் இந்த பேஜர் அமைப்புகளில் இஸ்ரேல் வெடி மருந்துகளை முன்னதாகவே வைத்திருந்தும் இத்தனை நாட்களாக பொறுத்திருந்து வெடிக்க வைத்த தாக்குதல் நடத்தியுள்ளது என்பதற்கு பதில் கிடைத்துள்ளது அதே நேரத்தில் இஸ்ரேல் ஹிஸ்புல்லா இயக்கத்துடன் காசாவில் ஹமாசுடன் நடத்துவதைப் போன்று ஒரு முழு அளவிலான போருக்கு தயாராக இருந்ததையும் லெபனான் மீது படையெடுக்கவும் திட்டமிட்டு இருந்ததும் இதன் மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது கூடுதல் தகவல் ஆகும்