மேற்கத்திய நாடுகளின் உதவியோடு ரஷ்யா மீது படையெடுத்த உக்ரைன், பேரதிர்ச்சியில் ரஷ்யா ஒரு பார்வை
1 min read

மேற்கத்திய நாடுகளின் உதவியோடு ரஷ்யா மீது படையெடுத்த உக்ரைன், பேரதிர்ச்சியில் ரஷ்யா ஒரு பார்வை

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திடீரென உக்ரைனிய ராணுவம் ரஷ்யாவுக்குள் படையெடுத்தது அப்போது முதல் தற்போது வரை நடைபெற்றுள்ள சண்டையில் உக்ரைன் ராணுவம் இதுவரை சுமார் 20 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு ரஷ்யாவுக்குள் ஊடுருவி உள்ளதாகவும் தொடர்ந்து நான் ஒரு சதுர மைல் அளவிலான பகுதியை கட்டுபாட்டில் எடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது இந்த தாக்குதல் ரஷ்ய ராணுவத்திற்கு அவமானகரமானதாக அமைந்துள்ளது ரஷ்யாவின் குர்ஸ்க பகுதிய உக்ரைன் நாட்டின் வடக்கு எல்லையோரம் அமைந்துள்ளது அங்கிருந்து தான் உக்ரைன் படைகள் ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவி உள்ளன.

இந்த தாக்குதல் ரஷ்யாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ள நிலையில் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது காரணம் உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் துவங்கி 2 வருடங்களை தொட உள்ள நிலையில் முதல்முறையாக உக்ரைன் ராணுவம் ரஷ்ய பகுதிக்குள் ஊடுருவி உள்ளது இதற்கு மிக முக்கியமான ஊக்கமளித்தது உக்ரைன் ராணுவம் பெற்றுள்ள மேற்கத்திய ஆயுதங்களாகும் அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வழங்கிய கவச வாகனங்கள் மற்றும் புதிதாக டென்மார்க் நாடு வழங்கிய F-16 போர் விமானங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி படையெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது, குறிப்பாக உக்ரைன் ராணுவம் ரஷ்யாவுக்குள் படையெடுப்பதற்கு ஒரு நாள் முன்பு தான் இந்த புதிய போர் விமானங்களை பெற்றுள்ளது ஆகவே திட்டமிட்டு காத்திருந்து படையெடுத்ததாக கூறப்படுகிறது.

தற்போது ரஷ்யாவுக்குள் உக்ரைன் ராணுவத்தின் 600 கவச வாகனங்கள் உள்ளன மேலும் 5 பிரிகேடுகளை சேர்ந்த 10,000 வீரர்கள் உள்ளனர் ஒவ்வொரு பிரிகேடிலும் தலா 2000 வீரர்கள் உள்ளனர். தற்போது இதில் மூன்று பிரிகேடுகள் நேரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது அவையாவன 22ஆவது மற்றும் 88ஆவது கவச வாகன பிரிகேடுகள் மற்றும் 80ஆவது வான் வழி தாக்குதல் காலாட்படை பிரிகேடு ஆகியவை ஆகும் இவற்றிற்கு பின்னால் 116ஆவது மற்றும் 61ஆவது கவச வாகன பிரிகேடுகள் உள்ளன இந்த பிரிகேடுகளுக்கு உதவியாக 49ஆவது மற்றும் 27ஆவது ஆர்டில்லரி அதாவது பிரங்கி பிரிகேடுகள் உள்ளன.

இந்த பிரிகேடுகள் அனைத்தும் ஏற்கனவே உக்ரைன் ராணுவத்திடம் பயன்பாட்டில் உள்ள சோவியத் ஒன்றிய தயாரிப்பு மற்றும் தானமாக வழங்கப்பட்ட அமெரிக்க ஐரோப்பிய தயாரிப்பு ஸ்டிரைக்கர் போன்ற அமெரிக்க கவச வாகனங்கள், போலந்தின் PT – 91 டாங்கிகள், செக் குடியரசின் RM -70 ராக்கெட் ஏவு அமைப்புகள், இங்கிலாந்தின் AS-90 , இத்தாலிய M-109L, சோவியத் 2S3 உள்ளிட்ட பிரங்கிகள் அடங்கிய மேற்கு மற்றும் ரஷ்ய ஆயுத கலவை கொண்ட படையாக இது உள்ளது, இது தவிர அமெரிக்கா வழங்கிய அதிநவீன HIMARS பல குழல் ராக்கெட் தாக்குதல் அமைப்பும் களத்தில் உள்ளதாக கூறப்படுகிறது மேலும் கூடுதலாக பல்வேறு ஆளில்லா விமானங்கள் தகவல் தொடர்பு மற்றும் சிறப்பு படைகள் குழுக்களும் களத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 500 கிலோமீட்டர் தென்மேற்கே உள்ள குர்ஸ்க் பகுதிக்கு அருகாமையில் தற்போது சண்டை நடைபெற்று வருகிறது, குர்ஸ்க் பகுதியை சுற்றியுள்ள சுஷ்தா ரைல்ஸ்க போன்ற பல்வேறு சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களை உக்ரைன் ராணுவம் கைபற்றி உள்ளதாக கூறப்படுகிறது உக்ரைன் ராணுவத்தின் ஆளில்லா வானூர்தி படையினர் சொந்த நாட்டிற்குள் செல்வது போல எவ்வித எதிர்ப்பும் இன்றி உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குள் முன்னேறி வருவதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

ரஷ்யா உக்ரைன் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுமே இந்த தாக்குதல்களை உறுதி செய்துள்ளன, இதற்கிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளினில் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார், சில தகவல்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைனுடைய இந்த படையெடுப்பு காரணமாக கடும் கோபத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றன மேலே குறிப்பிட்ட ஆலோசனை கூட்டத்தில் உடனடியாக உக்ரைனுடைய படையெடுப்பு மற்றும் தாக்குதல்களை முறியடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகவும் தெரிகிறது.

இதை தொடர்ந்து தற்போது ரஷ்ய படைகள் உக்ரைன் படைகளுக்கு எதிரே அதிகளவில் களமிறக்கப்பட்டு வரும் நிலையில் உக்ரைன் படைகளுடைய முன்னேற்றம் தடைபட்டுள்ளதாக தெரிகிறது, ஆகவே புதிய எஃப்-16 போர் விமானங்களை பயன்படுத்தி ரஷ்ய படைகளை தாக்கி உக்ரைன் படைகள் முன்னேறுவதற்கு வழிவகுக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ரஷ்ய எல்லை பாதுகாப்பு படை ரஷ்ய ராணுவம் ஆகியவை தற்போது உக்ரைன் படைகளை தடுத்து நிறுத்தி உள்ளதாகவும் தொடர்ந்து ரஷ்ய ராணுவம் அதிகளவில் வீரர்களை இந்த பகுதிகக்கு அனுப்பி வருவதாகவும் கூடவே டாங்கிகள் கனரக தாக்குதல் வாகனங்கள், ராக்கெட் அமைப்புகள் கவச வாகனங்கள் பிரங்கிகள் போன்ற பல்வேறு கனரக ஆயுத அமைப்புகளை குர்ஸ்க் பகுதிக்கு நகர்த்தி வருவதாகவும் செய்தி அறிக்கையை வெளியிட்டு உள்ளது மேலும் 100 க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் ரஷ்ய தரப்பில் 5000 பொதுமக்கள் காயமடைந்து உள்ளதாகவும் சிலர் இறந்து உள்ளதாகவும் சுமார் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

உக்ரைனை பொறுத்தவரை நிரந்தரமாக ரஷ்யாவுக்குள் ஊடுருவ முடியாது ரஷ்ய ராணுவம் அதை முறியடித்து விடும் ஆனால் உக்ரைன் இது தெரிந்தே இந்த தாக்குதலை நடத்த காரணங்கள் உள்ளன முதலாவது உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவத்தின் கவனத்தை சிதறடிப்பது, இரண்டாவது ரஷ்ய மக்களுக்கு தங்கள் நாடு பேராபத்தை சந்திப்பது போன்ற அச்சத்தை ஏற்படுத்துவது முன்றாவது ரஷ்ய அரசியல் மற்றும் ராணுவ தலைமைகளை பதட்டமடைய வைப்பது போன்றவையாகும் இவையனைத்தும் உக்ரைனுக்கு சற்றே பலத்தை அதிகரிக்க உதவும் காரணம் இந்த தாக்குதல் நிச்சயமாக ரஷ்ய மக்கள் மனதில் அச்சத்தை விதைக்கும் ரஷ்யாவும் இதை உணர்ந்து மிக விரைவாக உக்ரைன் படைகள் வீழ்த்த வேண்டியது அவசியமாகிறது சில தகவல்கள் 945 உக்ரைன் வீரர்கள் இந்த பகுதியில் கொல்லப்பட்டு உள்ளதாகவும் 102 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கின்றன. உக்ரைன் ராணுவ தளபதி ஒட்டுமொத்த போர் நடவடிக்கையில் கடந்த ஒரு வாரத்தில் ரஷ்ய ராணுவம் 8220 வீரர்கள் 67 டாங்கிகள் மற்றும் 160 கவச வாகனங்களை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதே போல் உக்ரைன் ராணுவம் குர்ஸ்க் நகரத்தின் புறநகர் பகுதியான சுஷ்தாவில் இருந்து உக்ரைன் வழியாங ஐரோப்பாவிற்கு இயற்கை எரிவாயுவை கொண்டு செல்லும் எரிவாயு குழாயை கைபற்றி உள்ளதாகவும் அதே போல் மற்றொரு பகுதியில் ஸ்லோவாக்கிய மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு ரஷ்யாவில் இருந்து கொண்டு செல்லப்படும் இயற்கை எரிவாயு அளவை கண்காணிக்கும் மையத்தையும் கைபற்றி உள்ளதாகவும் இவற்றையும் கைபற்றப்பட்டுள்ள இடங்களையும் பகடைக்காயாக வைத்து உக்ரைன் ரஷ்யாவிடம் இருந்து தனக்கு தேவையானதை பெற முயற்சிக்கலாம் என பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.