இந்திய கடற்படைக்காக ரஷ்யாவில் கட்டப்பட்டு வரும் இரண்டு கப்பல்களில் முதல் கப்பலான INS TUSHIL ஐ.என்.எஸ். துஷீல் ஃப்ரிகெட் ரக ஒரு கப்பல் தனது கடல் சோதனைகளை துவங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இந்திய கடற்டபடையில் உள்ள ஆறு தல்வார ரக போர் கப்பல்களின் தொடர்ச்சி தான் இவையாகும்.
சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இந்த இரண்டு கப்பல்களும் ரஷ்யாவின் பால்டிஸ்க் நகரத்தில் உள்ள யாந்தர் கப்பல் கட்டுமான தளத்தில் கட்டப்பட்டு வந்தன இவற்றின் இந்திய மதிப்பு சுமார் 20 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஆகும். மேலும் இதே ரகத்தை சேர்ந்த இரண்டு கப்பல்கள் இந்தியாவின் கோவா கப்பல் கட்டுமான தளத்தில் கட்டப்படும் என்பதும் கூடுதல் தகவல் ஆகும்.
துஷில் என்பதன் பெயர் பொருள் கேடயம் என்பதாகும். தற்போது இருநூறு இந்திய கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இந்த கப்பலின் சோதனைகளை மேற்பார்வை இடுவதற்காக ரஷ்யா சென்றுள்ளனர். அனைத்து சோதனைகளும் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தப் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் வருகிற செப்டம்பர் மாதம் இணையும் என இந்திய கடற்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வரிசையில் வரும் இரண்டாவது கப்பலின் பெயர் INS TAMAL ஐ.என்.எஸ் தமால் ஆகும், இது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இந்திய கடற்படையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது கப்பலின் பெயர் INS TRIPUT ஐ.என்.எஸ் த்ரிபுத் ஆகும், நான்காவது கப்பலுக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை இந்த நான்கு போர்க்கப்பல்களும் இந்திய கடற்படையின் திறன்களை பல மடங்கு அதிகரிக்கும் என்பது கூடுதல் சிறப்பாகும்.
இவை அனைத்தும் இந்திய கடற்படையில் இணையும் போது 10 தல்வார் ரக கப்பல்கள் சேவையில் இருக்கும் அவையாவன ரஷ்யாவின் பால்டிஸ்கியில் கட்டப்பட்ட முதல் மூன்று கப்பல்களான
1) INS TALWAR தல்வார்
2) INS TRISHUL த்ரிஷூல்
3) INS TABAR தாபார்
பின்னர் ரஷ்யாவின் யாந்தர் கப்பல் கட்டுமான தளத்தில் கட்டப்பட்ட
4) INS TEG தெக்
5) INS TARKASH தார்காஷ்
6) INS TRIKAND த்ரிகாந்த் ஆகியவை ஆகும் ஆக 8 கப்பல்கள் ரஷ்யாவிலும் 2 கப்பல்கள் இந்தியாவிலும் கட்டமைக்கப்பட்டவையாக இருக்கும், ரஷ்யாவில் இவற்றை க்ரிவால்க் ரகம் என அழைப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.